10.729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, June 10, 2021

10.729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வாரியம் தற்போது 10,729 குரூப் "ஏ" மற்றும் "பி" பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக, மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் ஐ.பி.பி.எஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாடு கிராமிய வங்கிகள் உள்பட 43 பொதுத்துறை வங்களில் 2021 ஆம் நிதி ஆண்டிற்கான 10,729 குரூப் "ஏ" மற்றும் குரூப் "பி" பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி பணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கான வாய்ப்பாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்தி பயனடையவும்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

பணிகள்: Group "A"-Officers, Group "B"-Office Assistant Posts

மொத்த காலியிடங்கள்: 10,729

தகுதி: அனைத்து துறையைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்சிஏ, எம்பிஏ முதுநிலை பட்டதாரிகள், சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.06.2021 தேதியின்படி Officer Scale- III (Senior Manager) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்ளும், Officer Scale- II (Manager)- பணிக்கு 21 முதல் 32 வயதிற்குள்ளும், Officer Scale- I (Assistant Manager)-18 முதல் 30 வயதிற்குள்ளும், Office Assistant (Multipurpose) -18 முதல் 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி படி ஒரு சில பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் ஒற்றை நிலை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Officers (Scale-I, II & III) பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்த அட்டைகள் மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/Advt-_CRP-RRB-X_final_final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021

Post Top Ad