Tamil Nadu Board 10th Standard Social Science - Civics Unit 1: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 1 – Civics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 1 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 1:இந்திய அரசியலமைப்பு
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம இறையாண்மை .
ஆ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை , குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக , குடியரசு.
விடைகுறிப்பு:
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழுதும் இல்லை
விடைகுறிப்பு:
அ) ஒரு முறை
3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடைகுறிப்பு:
இ இயல்புரிமை
4. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடைகுறிப்பு:
இ) சொத்துரிமை
5. கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.
இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.
விடைகுறிப்பு:
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.
6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
விடைகுறிப்பு:
இ அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
7.அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடைகுறிப்பு:
இ தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
8. நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
விடைகுறிப்பு:
இ ரஷ்யா அரசியலமைப்பு
9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
விடைகுறிப்பு:
இ சட்டப்பிரிவு 360
10. எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
அ) 1, 2 &3
ஆ) 1 & 2
இ) 1 &3
ஈ) 2 & 3
விடைகுறிப்பு:
ஆ) 1 & 2
II. கோடிட்டஇடங்களை நிரப்புக.
1. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ……………… தோன்றியது.2. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ……….
4. ………………… பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.
5. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் …………… பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடைகுறிப்பு:
1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
2. Dr. சச்சிதானந்த சின்கா
3. 26 நவம்பர் 1949
4. ஐந்து வகையான
5. 51A
III. பொருத்துக.
1.
|
குடியுரிமைச் சட்டம்
|
அ
|
ஜவகர்லால் நேரு
|
2.
|
முகவுரை
|
ஆ
|
42வது அரசியலமைப்புச்
சட்டத்திருத்தம்
|
3.
|
குறு அரசியலமைப்பு
|
இ
|
1955
|
4.
|
மொழி
|
ஈ
|
1962
|
5.
|
தேசிய அவசர நிலை
|
உ
|
தமிழ்
|
1.
|
குடியுரிமைச் சட்டம்
|
இ
|
1955
|
2.
|
முகவுரை
|
அ
|
ஜவகர்லால் நேரு |
3.
|
குறு அரசியலமைப்பு
|
ஆ
|
42வது அரசியலமைப்புச்
சட்டத்திருத்தம்
|
4.
|
மொழி
|
உ
|
தமிழ்
|
5.
|
தேசிய அவசர நிலை
|
ஈ
|
1962
|
IV. குறுகிய விடைதருக.
1. அரசியலமைப்பு என்றால் என்ன ?விடை குறிப்பு:
அரசியலமைப்பு என்பது:
- ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படை கொள்கைகளைச் சார்ந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு ஆகும்.
- அரசியலமைப்பு ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணியாகும்.
2. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
விடை குறிப்பு:
குடியுரிமை - பொருள்:
- சிட்டிசன் எனும் சொல் சிவிஸ் எனும் இலத்தின் சொல்லில் இருந்து வந்தது.
- சிட்டிசன் அல்லது குடியுரிமை என்பதன் பொருள் பாருள் ஒரு நகர அரசில் வசிப்பவர். பாருள்.
3. எத்தனை வகையான அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப் படுகின்றன?
விடைகுறிப்பு:
இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப்படுகின்ற அடிப்படை உரிமைகள்:
3. சமயசார்பு உரிமை
4. சுரண்டலுக்கு எதிரான உரிமை
5. கல்வி, கலாச்சார உரிமை
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை
4. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
விடைகுறிப்பு:
நீதிப்பேராணை (Writ) என்பது :
- நீதிப்பேராணை நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படுவது.
- இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றம் வெளியிடுகிறது.
5. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
விடைகுறிப்பு:
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள்:
- சட்டமன்ற உறவுகள், நிர்வாக உறவுகள், நிதி உறவுகள் ஆகியன.
- இவைகள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை விளக்குகிறது.
6. இந்தியாவின் செம்மொழிகள் எவை?
விடைகுறிப்பு:
இந்தியாவின் செம்மொழிகள்:
- செம்மொழிகள் - தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா.
- 2004 இல் இந்திய அரசு "செம்மொழிகள்" என்ற புதிய வகைப்பாட்டை ஏற்படுத்தியது.
7. தேசிய அவசரநிலை என்றால் என்ன?
விடைகுறிப்பு:
தேசிய அவசரநிலை:
- போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் குடியரசு தலைவர் தேசிய அவசர நிலையை அறிவிக்கலாம்.
V. விரிவான விடை தருக.
1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.விடைகுறிப்பு:
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்:
- உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பாக அமைந்துள்ளது.
- இது பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளில் இருந்து பெறப்பட்டவை.
- நெகிழும் தன்மை மற்றும் நெகிழாத் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
- மத்தியிலும் மாநிலங்களிலும் நாடாளுமன்ற முறையைக் கொண்டுள்ளது.
- ஒற்றை குடியுரிமை மற்றும் சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- இந்தியா சமயச் சார்பற்ற நாடாகவும் கூட்டாட்சி முறை அரசாங்கமும் உள்ளது.
- வயது வந்தோர் அனைவருக்கும் பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
- சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு சலுகைகள்.
2. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
விடைகுறிப்பு:
அடிப்படை உரிமைகள்:
I. சமத்துவ உரிமை:
- சமத்துவ உரிமைகள் பிரிவு 14 முதல் 18 வரை இடம் பெற்றுள்ளது.
- சட்டத்தின் முன் அனைவரும் சமம், தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறுகிறது.
- சுதந்திர உரிமைகள் பிரிவு 19 முதல் 22 வரை இடம் பெற்றுள்ளது.
- பேச்சுரிமை, கருத்து சுதந்திரம், சங்கம் அமைக்க சுதந்திரம் தரப்பட்டுள்ளது.
- சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் பிரிவு 23, 24 இல் இடம் பெற்றுள்ளது. இல் இடம் பெற்றுள்ளத
- கட்டாய வேலை, கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல்.
- சமயசார்பு உரிமைகள் பிரிவு 25 முதல் 28 வரை இடம் பெற்றுள்ளது.
- எந்த ஒரு சமயத்தையும் ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை தரப்பட்டுள்ளது.
- கல்வி, கலாச்சார உரிமைகள் பிரிவு -29, 30 இல் இடம் பெற்றுள்ளது.
- சிறுபான்மையினரின் கல்வி, மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்தல்.
- இந்த உரிமை அரசியலமைப்புப் பிரிவு -32 இல் இடம் பெற்றுள்ளது.
- நீதிமன்றத்தை அணுகி தனது அடிப்படை உரிமைகளைப் பெறுதல்.
3. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.
விடைகுறிப்பு:
அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை:
- உச்சநீதிமன்றம் "அரசியலமைப்பின் பாதுகாவலன்” என்று அழைக்கப்படுகிறது.
- நீதிப்பேராணை - நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படுவது.
- இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றம் வெளியிடுகிறது.
- நீதிப்பேராணைகள் வெளியிடப்படுவதால் மக்களின் உரிமைகள் காக்கப்படுகிறது.
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் நீதிப்பேராணைகளை வெளியிடலாம்.
- அவை ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன.
- ஆட்கொணர்வு நீதிப்பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை, ஆவணக்கேட்பு நீதிப்பேராணை, தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை.
விடைகுறிப்பு:
அடிப்படை உரிமைகள்
|
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
|
அமெரிக்க நாட்டின்
அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை.
|
அயர்லாந்து நாட்டின்
அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை.
|
இந்த உரிமையை
அரசாங்கத்தால் கூட சுருக்கவோ, நீக்கவோ முடியாது.
|
இந்த கோட்பாடுகள்
அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும்.
|
இவற்றை நீதிமன்ற
சட்டத்தின் மூலமாக செயற்படுத்த முடியும்.
|
இவற்றை எந்தவகை
நீதிமன்றத்தாலும் கட்டாயப்படுத்த முடியாது.
|
இவை சட்ட ஒப்புதலைப்
பெற்றவை.
|
இவை தார்மீக மற்றும்
அரசியல் ஒப்புதல் பெற்றவை ஆகும்.
|
நாட்டின் அரசியல்
மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன.
|
சமுதாயம், பொருளாதாரம், ஜனநாயகம் உறுதியாகிறது.
|
இயற்கையான உரிமைகள்.
|
மனித உரிமைகளைப்
பாதுகாக்கிறது.
|
VI. மாணவர் செயல்பாடு
1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் விடைகுறிப்பு:
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் மாகாண சட்டப் பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இருந்தனர்.
- இந்த சபையில் மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்.
- இதில் 15 பெண்கள் இருந்தனர்.
- அம்பேத்கர் - தலைவர், அரசியலமைப்பு வரைவுக் குழு
- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
- என். கோபாலசாமி அய்யங்கார்
- கே. எம். முன்ஷி
- சையத் முகமது சாதுல்லா
- மாதவ ராவ் (பி. எல். மித்தர் உடல்நலக் குறைவால் விலகியதால், அப்பணியிடத்தில்)
- டி. டி. கிருஷ்ணமாச்சாரி (1948ல் டி. பி. கைத்தான் இறந்ததால், அப்பணியிடத்தில்)

0 Comments:
Post a Comment