12th Computer Science - Book Back Answers - Chapter 9 - Tamil Medium Guides

 



 


    Plus One / 12th Computer Science - Book Back Answers - Chapter 9 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Computer Science - Chapter 9: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Chapter 9 – Computer Science from the Tamil Nadu State Board 12th Standard Computer Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Computer Science Chapter 9 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடம் 9: (List, Tuples, மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு

    1. தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
    (அ) List
    (ஆ) Tuple
    (இ) Dictionary
    (ஈ) Loop
    விடைக்குறிப்பு:
    (ஈ) Loop

    2. Let list1 = [2,4,6,8,10), print (List1[-2]) ன் விடை
    (அ) 10
    (ஆ) 8
    (இ) 4
    (ஈ) 6
    விடைக்குறிப்பு:
    (ஆ) 8

    3. பின்வரும் எந்த செயற்கூறு List-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிட பயன்படுகிறது?
    (அ) count()
    (ஆ) find()
    (இ) len()
    (ஈ) index()
    விடைக்குறிப்பு:
    (இ) len()

    4. If List=[10,20,30,40,50] List[2]=35 ன் விடை
    (அ) [35,10,20,30,40,50]
    (ஆ) [10,20,30,40,50,35]
    (இ) [10,20,35,40,50]
    (ஈ) [10,35,30,40,50]
    விடைக்குறிப்பு:
    (இ) [10,20,35,40,50]

    5. If List-[17,23,41,10] List.append(32) ன் விடை
    (அ) [32,17,23,41,10]
    (ஆ) (17,23,41,10,32]
    (இ) [10,17,23,32,41]
    (ஈ) [41,32,23,17,10]
    விடைக்குறிப்பு:
    (ஆ) (17,23,41,10,32]

    6. பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?
    (அ) append()
    (ஆ) append_more()
    (இ) extend()
    (ஈ) more()
    விடைக்குறிப்பு:
    (இ) extend()

    7. பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன?
    S=[x**2 for x in range(5)]
    print(S)
    (அ) [0,1,2,4,5)
    (ஆ) [0,1,4,9,16]
    (இ) [0,1,4,9,16,25]
    (ஈ) [1,4,9,16,25]
    விடைக்குறிப்பு:
    (ஆ) [0,1,4,9,16]

    8. பைத்தானில் type() செயற்கூறின் பயன் என்ன?
    (அ) Tuple உருவாக்க
    (ஆ) Tuple உள்ள உறுப்புகளின் வகையைக் கண்டறிய
    (இ) பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய
    (ஈ) பட்டியலை உருவாக்க
    விடைக்குறிப்பு:
    (இ) பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய

    9. பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
    (அ) List மாற்றம் செய்யலாம்
    (ஆ) Tuples மாற்றம் செய்ய முடியாது.
    (இ) Append() செயற்கூறு, ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.
    (ஈ) Extend() செயற்கூறு லிஸ்ட்ல் உறுப்புகளை சேர்க்க Tuples-ல் பயன்படுகிறது
    விடைக்குறிப்பு:
    (ஈ) Extend() செயற்கூறு லிஸ்ட்ல் உறுப்புகளை சேர்க்க Tuples-ல்
    பயன்படுகிறது

    10. SetA={3,6,9}, setB={1,3,9}. எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    print(setA / setB)

    (அ) {3,6,9,1,3,9}
    (ஆ) {3,9}
    (இ) {1}
    (ஈ) {1,3,6,9}
    விடைக்குறிப்பு:
    (ஈ) {1,3,6,9)

    11. பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set-களுக்கும் போதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?
    (அ) சமச்சீரான வேறுபாடு
    (ஆ) வேறுபாடு
    (இ) வெட்டு
    (ஈ) ஒட்டு
    விடைக்குறிப்பு:
    (அ) சமச்சீரான வேறுபாடு

    12. பைத்தான், Dictionary-ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன
    (அ) =
    (ஆ) ;
    (இ) +
    (ஈ) :
    விடைக்குறிப்பு:
    (அ) =


    II. குறு வினாக்கள்

    1. பைத்தானில் List என்றால் என்ன? 
    • List என்பது வரிசைப்படுத்திய உறுப்புகளின் தொகுப்பாகும் இதனை "வரிசைமுறை தரவினம்
    • என்றும் அழைக்கப்படுகிறது.
    • List உள்ள உறுப்புகள் சதுர அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    • List மாறும் தன்மையுடையது.
    • எடுத்துக்காட்டு:
                                  Marks [10, 23, 41, 75]

    2. List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்
    • List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் அணுகுவதற்கு எதிர்மறை சுட்டெண் மதிப்பு பயன்படுகிறது.
    • எதிர்மறை சுட்டெண் மதிப்பு List -ன் இறுதியிலிருந்து பின்வரிசையில் உறுப்புகளை கணக்கிடுகிறது.
    • பைத்தான், List-ன் கடைசி உறுப்பிற்கு -1 முந்தைய உறுப்பிற்கு 2 என்ற சுட்டெண் மதிப்புகளையும் இருத்துகிறது.
    •  இதுவே பின்னோக்கு சுட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
    • எடுத்துக்காட்டு:
                                    Marks[-1]

    3. பின்வரும் பைத்தான் குறிமுறையில் x-ன் மதிப்பு என்ன?
    List1=[2,4,6,[1,3,5]]
    x=len(List1)
                     print(x)
    வெளியீடு:
                     4
    X -ன் மதிப்பு 4

    4. List-ன் del மற்றும் remove() செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?

    del

     
    remove()
     

    del கூற்று நீக்குவதற்கு பயன்படுகிறது.

    remove( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை List -லிருந்து நீக்குவதற்கு பயன்படுகிறது.
    remove( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை List -லிருந்து நீக்குவதற்கு பயன்படுகிறது.
     
    del கூற்று முழு List-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.
    remove( ) செயற்கூறு ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்க பயன்படுகிறது

    5. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.
    தொடரியல்:
    • n எண்ணிக்கை உறுப்புகளுடன் Tuples:
                                                Tuples_Name = (E1, E2, E2 ........ En)
    • அடைப்புக்குறி இல்லாத Tuple உறுப்புகள்:
                                                Tuples_Name = E1, E2, E3..... En

    6. பைத்தானில் set என்றால் என்ன?
    • Set என்பது ஒரு தரவின வகையாகும்.Set என்பது மாறக்கூடிய மற்றும் நகல்கள் இல்லாத வரிசைப்படுத்தப்படாத உறுப்புகளின் தொகுப்பாகும்.
    • இந்த சிறப்பியல்பு உறுப்பு சோதனையை சேர்க்கவும் மற்றும் நகல் உறுப்புகளை நீக்கவும் பயன்படுகிறது.

    III. சிறு வினாக்கள்

    1. List மற்றும் Tuples- ஒப்பிடுக.
    List
    Tuple
    List-ன் உறுப்புகள் காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு சதுர அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டிருக்கும்.
    Tuple-ன் உறுப்புகள் காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு வளைவு அடைக்கப்பட்டிருக்கும்.
    List-ன் உறுப்புகளை மாற்றலாம்.
    Tuples-ன் உறுப்புகளை மாற்ற முடியாது.
    List-ன் மடக்குச் செயல் மெதுவானது.
    Tuples-ன் மடக்குச் செயல் விரைவானது.
    எடுத்துக்காட்டு: list = [1,2,3]
    எடுத்துக்காட்டு: Tup = (red, blue, 100)


    2. Sort() பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
    Sort():
    •  List-ல் உள்ள உறுப்புகளை வரிசையாக்கம் செய்கிறது.
    • reverse-ஐ True என பொருத்தினால் இறங்கு வரிசையில் லிஸ்ட் வரிசையாக்கமாகும்.
    •  sort() மூல List-யை பாதிக்கும்.
     தொடரியல்:                     List.sort(reverse=True|False, key=myFunc)
    எடுத்துக்காட்டு:              MyList=["Thara', 'Anitha', 'Sai', 'Laya']
                                                      MyList.sort()
    வெளியீடு:                     ['Anitha', 'Laya', 'Sai', 'Thara']
     
    3. பின்வரும் குறிமுறையின்வெளியீடு என்ன?
                           list = [2**x for x in range(5)]
                           print(list)
    வெளியீடு:         [1, 2, 4, 8, 16]

    4. Dictionary-ல் del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
     

    del

    Clear()
    பைத்தான் Dictionary-ல், del சிறப்புச் சொல் ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்குவதற்கு பயன்படுகிறது.
    clear() செயற்கூறு List-ன் அனைத்து உறுப்புகளையும் நீக்க பயன்படுகிறது.
    + Dictionary- யை நீக்குவதற்கு del சிறப்புச் சொல்லுடன் Dictionary- ன் பெயரையும் பயன்படுத்த வேண்டும்.
    இது உறுப்புகளை மட்டுமே நீக்கி, Dictionary-ஐ தொடர்ந்து வைத்திருக்கிறது.
    எடுத்துக்காட்டு:
    D= {'Roll No': 12001, 'Name': 'Meena', 'Age': 18,}
    del D ['Age']
    print(D)
    வெளியீடு:
      {'Roll No': 12001, 'Name': 'Meena'}
    எடுத்துக்காட்டு:
    D= {'Roll No': 12001, 'Name': 'Meena', 'Age': 18,}
    D.clear()
    print(D)
    வெளியீடு: 
       {}

    5. பைத்தானின் set செயல்பாடுகளை பட்டியலிடுக.
    • ஒட்டு → இரண்டு Set- களை இணைக்க
    • வெட்டு→ இரண்டு Set-களின் பொதுவான உறுப்புகள்
    • வேறுபாடு→இரண்டு Set- களின் வேறுபாடு கண்டறியும்
    • சமச்சீரான வேறுபாடு→ இரண்டு Set -களின் பொதுவான உறுப்புகள் தவிர்த்து மற்ற உறுப்புகள்.
    6. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?
     
    List
    Dictionary
    List என்பது வரிசைப்படுத்திய உறுப்புகளின் தொகுப்பாகும்.
    Dictionary ஒரு உறுப்பை (திறவுகோல்) மற்றொரு உறுப்புடன் (மதிப்பு) பொருத்தப் பயன்படும் தரவு அமைப்பாகும்.
    List-ன் சுட்டெண்கள் குறிப்பிட்ட உறுப்பை அணுகுவதற்குப் பயன்படுகின்றன.
    Dictionary-ல் திறவுகோல் சுட்டெண்ணைக் குறிக்கிறது.
    List-ன் மதிப்பை பார்த்துக் கொள்ளப்பயன்படுகிறது.
    Dictionary ஒரு மதிப்பை எடுத்துக் கொண்டு மற்றொரு மதிப்பை பார்த்துக் கொள்ள பயன்படுகிறது.

    IV. பெரு வினாக்கள்

    1. List-ல் ஒரு உறுப்பை சேர்ப்பதற்கான பல்வேறு வழிகள் யாவை? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    (1) insert()
    செயற்கூறு : 
    • insert () செயற்கூறு, List-ன் எந்தவொரு இடத்திலும் ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.
    தொடரியல்:           List.insert (position index, element)
    • கீழ் உள்ள எடுத்துக்காட்டில், insert() செயற்கூறு, 'Ramakrishnan' என்ற புதிய உறுப்பை மூன்றாவது சுட்டெண்ணில் அதாவது நான்காவது இடத்தில் சேர்க்கிறது.
    எடுத்துக்காட்டு:

    >>> MyList=[34,98,47, 'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']
    >>> MyList.insert(3, 'Ramakrishnan')
    >>> print(MyList)
    வெளியீடு:         [34, 98, 47, 'Ramakrishnan', 'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']
    (II) append() செயற்கூறு:
    • append () செயற்கூறு ஒரு உறுப்பை ஏற்கனவே உள்ள List-ல் சேர்க்க பயன்படுகின்றது.
    தொடரியல்:               List.append (element to be added)
    எடுத்துக்காட்டு:
    >>> Mylist=[34, 45, 48]
    >>> Mylist.append(90) 
    >>> print(Mylist)
    (III) extend()வெளியீடுசெயற்கூறு:  :  [34, 45, 48, 90]
    • extend() செயற்கூறு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளையும் ஏற்கனவே உள்ள List ல் இறுதியில் சேர்க்க பயன்படுகின்றது.
    தொடரியல்:           List.extend ([elements to be added])
    எடுத்துக்காட்டு:
    >>> Mylist=[34, 45, 48]
    >>> Mylist.extend([71, 32, 29])
              >>> print(Mylist)
    வெளியீடு:      [34, 45, 48, 90, 71, 32, 29]

    2. range()-ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    • range() என்பது பைத்தானில் தொடர் மதிப்புகளை உருவாக்கப் பயன்படும் செயற்கூறாகும்.
    • +range () செயற்கூறை பயன்படுத்தி நீங்கள் தொடர் மதிப்புகளுடன் List-ஐ உருவாக்கலாம்.
    • range() செயற்கூறு மூன்று செயலுருபுகளைக் கொண்டுள்ளது.
    range () செயற்கூறின் தொடரியல்:
                                  range (start value, end value, step value)
    இங்கு,
    • start value - தொடரின் தொடக்க மதிப்பு. சுழியம் தானமைவு தொடக்க மதிப்பாகும்.
    • end value - தொடரின் உச்ச வரம்பு. பைத்தான் இறுதி மதிப்பை உச்சவரம்பு-1 என எடுத்துக்கொள்கிறது.
    • step value- இது ஒரு விருப்ப செயலுருபு, இது வெவ்வேறு இடைவெளிகளில் மதிப்புகளை உருவாக்கப் பயன்படுகிறது.
    எடுத்துக்காட்டு:10 வரை உள்ள முழு எண்களை உருவாக்குதல்:
                                    for x in range (1, 11):
                                    print(x)
    வெளியீடு:      
    1
    2
    3
    4
    5
    6
    7
    8
    10

    3. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • Tuples காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பல மதிப்புகளை வளைவு அடைப்புக்குறிக்குள் கொண்ட தரவினமாகும்.
    • பைத்தானில், ஒரு Tuples-ஐ மற்றொரு Tuples-க்குள் வரையறை செய்வதை பின்னலான Tuples என்கிறோம்.
    • பின்னலான Tuples-ல் ஒவ்வொரு Tuples-ல் ஒரு உறுப்பாக கருதப்படுகிறது.
    • for மடக்கு பின்னலான Tuples-ன் அனைத்து உறுப்புகளை அணுகுவதற்கு பயன்படுகிறது.
    எடுத்துக்காட்டு:
                 Toppers = (("Vinodini", "XII-F", 98.7), ("Soundarya", "XII-H", 97.5), ("Tharani", "XII-F", 95.3), ("Saisri", "XII-G", 93.8))
                 for i in Toppers:
                 print(i)
    வெளியீடு:
    ('Vinodini', 'XII-F', 98.7)
    ('Soundarya', 'XII-Η', 97.5)
    ('Tharani', 'XII-F', 95.3)
    ('Saisri', 'XII-G', 93.8) 

    4. பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக.
    • Set என்பது மாறக்கூடிய மற்றும் நகல்கள் இல்லாத வரிசைப்படுத்தப்படாத உறுப்புகளின் தொகுப்பாகும்.
    set செயல்பாடுகள்:
    (1) ஒட்டு (Union):
    • இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டSet-களின்அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கும்.
    • பைத்தானில் | செயற்குறி ஓட்டுவதற்கு (Union) பயன்படுகிறது.
    • இரண்டு set-யை இணைக்க பயன்படுகிறது.


    எடுத்துக்காட்டு:
    set_A={2,4,6,8}
    set_B={'A', 'B', 'C', 'D'}
    print(set_A/set_B)
    வெளியீடு:
    {2, 4, 6, 8, 'A', 'D', 'C', 'B'}
    (II) 
    வெட்டு (Intersection):
    • இது இரண்டு set-களின் பொதுவான உறுப்புகளை கொண்டது.
    • பைத்தானில் & செயற்குறி இரண்டு Set - களை வெட்டுவதற்கு பயன்படுகிறது.
    • வெட்டு (intersection()) செயற்கூறும் பைத்தானில் இரண்டு Set-களை வெட்டுவதற்கு
    • பயன்படுகிறது.
    எடுத்துக்காட்டு:
    set_A={'A', 2, 4, 'D'}
    set_B={'A', 'B', 'C', 'D'}
    print(set_A & set_B)
    Set A
    Set B
    வெளியீடு: 
                       {'A', 'D'}
    (III)வேறுபாடு(Difference):
    •  இது முதல் Set(A)- ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது.
    • இது இரண்டாவது Set-ஐ தவிர்க்கிறது.
    • (-)minus செயற்குறி வேறுபாட்டை கண்டறிகிறது.
     
    எடுத்துக்காட்டு:
    set_A={'A', 2, 4, 'D'}
    set_B={'A', 'B', 'C', 'D'}
    print(set_A-set_B)
    வெளியீடு:
    {2,4}
    (IV) சமச்சீரான வேறுபாடு (Symmetric Difference):
    • இது இரண்டு Set-ல் உள்ள பொதுவான உறுப்புகளை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது.
    •  Caret(^) செயற்குறி பைத்தானில் சமச்சீரான வேறுபாட்டை கண்டறிய பயன்படுகிறது.

    எடுத்துக்காட்டு:
    set_A={'A', 2, 4, 'D'}
    set_B={'A', 'B', 'C', 'D'}
    print(set_A^ set_B)
    வெளியீடு:
    {2, 4, 'B', 'C')


     


     

     

     

     









    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive