12th Computer Science - Book Back Answers - Chapter 7 - Tamil Medium Guides

 


 


    Plus One / 12th Computer Science - Book Back Answers - Chapter 7 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Computer Science - Chapter 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Chapter 7 – Computer Science from the Tamil Nadu State Board 12th Standard Computer Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Computer Science Chapter 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடம் 7: பைத்தான் செயற்கூறுகள்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு

    1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி
    (அ) மடக்கு
    (ஆ) கிளைப்பிரிப்பு
    (இ) செயற்கூறு
    (ஈ) தொகுதி
    விடைக்குறிப்பு:
    (இ) செயற்கூறு

    2. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.
    (அ) உள்ளிணைந்த
    (ஆ) தற்சுழற்சி
    (இ) லாம்டா
    (ஈ) return கூற்று
    விடைக்குறிப்பு:
    (ஆ) தற்சுழற்சி

    3. எந்த செயற்கூறு பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
    (அ) லாம்டா
    (ஆ) தற்சுழற்சி
    (இ) செயற்கூறு
    (ஈ) வரையறை
    விடைக்குறிப்பு:
    (அ) லாம்டா

    4. செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது?
    (அ) define
    (ஆ) for
    (இ)  finally
    (ஈ) def
    விடைக்குறிப்பு:
    (ஈ) def

    5. எந்த சிறப்புச்சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது?
    (அ) define
    (ஆ) return
    (இ)  finally
    (ஈ) def
    விடைக்குறிப்பு:
    (ஆ) return

    6. செயற்கூறு வரையிறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது?
    (அ) ; (அரைப் புள்ளி)
    (ஆ). (புள்ளி)
    (இ) : முக்காற்புள்ளி)
    (ஈ) $ (டாலர்)
    விடைக்குறிப்பு:
    (இ) : முக்காற்புள்ளி)

    7. செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருபுகளை அனுப்பும்?
    (அ) தேவைப்படும்
    (ஆ) சிறப்புச்சொல்
    (இ) தானமைவு
    (ஈ) மாறிநீளம்
    விடைக்குறிப்பு:
    (அ) தேவைப்படும்

    8. பின்வரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூற்றுகளைத் தேர்ந்து எடுக்கவும்.
    (I) பைத்தானில், செயற்கூறை வரையறுக்கும் போது குறிப்பிட்ட தரவு வகைகளைக் குறிப்பிடத் தேவையில்லை
    (II) பைத்தான் சிறப்புச் சொற்களைச் செயற்கூறின் பெயராகப் பயன்படுத்தலாம்
    .
    (அ) I சரி மற்றும் II தவறு
    (ஆ) இரண்டுமே சரி
    (இ) I தவறு மற்றும் II சரி
    (ஈ) இரண்டுமே தவறு
    விடைக்குறிப்பு:
    (அ) I சரி மற்றும் II தவறு

    9. கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக இயக்குவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
    if________: print(x," is a leap year")

    (அ) x%2=0
    (ஆ) x%4==0
    (இ) x/4=0
    (ஈ) x%4=0
    விடைக்குறிப்பு:
    (ஆ) x%4==0

    10. testpython) செயற்கூறைவரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல்பயன்படுகிறது?
    (அ) define
    (ஆ) pass
    (இ) def
    (ஈ) while
    விடைக்குறிப்பு:
    (இ) def


    II. குறு வினாக்கள்
    1. செயற்கூறு என்றால் என்ன?
    • ஒரு குறிப்பிட்ட செயலினை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதியே செயற்கூறு எனப்படும்.
    • செயற்கூறு தொகுதி "def" என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கி செயற்கூறுவின் பெயர் மற்றும் () அடைப்புக்குறியுடன் முடிய வேண்டும்.
    2. செயற்கூறின் வகைகளை எழுதுக.
    1. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
    2. உள்ளிணைந்த செயற்கூறுகள்
    3. லாம்டா செயற்கூறுகள்
    4. தற்சுழற்சி செயற்கூறுகள்
     
    3. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?
    • குறிமுறையை மீண்டும் எழுதுவதை தவிர்த்து குறிமுறையின் மறு பயனாகக்த்திற்கு உதவுகிறது.
    • நமது பயன்பாட்டிற்கு சிறந்த கூறுநிலையை வழங்கிறது.
    4. மாறியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
    • மாறிகளின் வரையெல்லை, நிரலின் அணுகக் கூடிய பகுதியைக் குறிப்பதாகும்.
    • வரையெல்லையானது நடப்பு மாறித் தொகுதிகள் மற்றும் அதன் மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
    •  வகைகள்:
    1. உள்ளமை வரையெல்லை
    2. குளோபல் வரையெல்லை

    5. முழுதளாவிய வரையெல்லை-வரையறு.
    • அனைத்து செயற்கூறுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படும் மாறி முழுதளாவிய மாறி எனப்படும்.
    • முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலின் எந்த பகுதியிலும் அணுகமுடியும்.
    • முழுதளாவிய வரையெல்லை கொண்ட மாறியை ஒரு செயற்கூறினுள் அணுகுவதற்க்கு 'global' சிறப்பு சொல்லானது பயன்படுகிறது.
    6.தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறில் அடிப்படை நிபந்தனை என்றால் என்ன?
    • தற்சுழற்சி செயற்கூறு தன்னைத்தானே அழைக்கும்.
    • ஒவ்வொரு தற்சுழற்சி செயற்கூற்றிக்கும் அடிப்படை நிபந்தனை கொடுக்கப்பட வேண்டும் இல்லையென்றால் மடக்கு காலவரையின்றி இயங்கும்.
    7. தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.
    • வரம்புகளை (limit)  sys.setrecursionlimit(limit_value) தானமைவாக குறிப்பிட்ட அழைப்புகளுக்குப் பிறகு பைத்தான் தன்னைத்தானே அழைப்பதை நிறுத்திவிடும்.
    எடுத்துக்காட்டு:
    import sys
    sys.setrecursionlimit(500)
    def fact(n): 
    if n == 0:
         return 1
    else:
         return n* fact(n-1)
    print(fact (100))

    III. சிறு வினாக்கள்

    18. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறைகளை எழுதுக.
    • உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
    • செயற்கூறினுள் மாறி உருவாக்கப்படும்போது அது உள்ளமைவாக அமையும்.
    • செயற்கூறு இயக்கப்படும் போது மட்டுமே உள்ளமை மாறிகள் உருவாக்கப்படும்.
    9. பைத்தானிலுள்ள முழுதளாவி சிறப்புச் சொல்லுக்கான அடிப்படை விதிமுறைகளை எழுதுக
    • செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக குளோபல் ஆகும் 'global' என்ற சிறப்புச் சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை.
    • செயற்கூறினுள் முழுதளாவிய மாறியை படிக்க மற்றும் எழுத 'global' சிறப்புச்சொல் பயன்படுத்த வேண்டும்.
    • செயற்கூறுவிற்கு வெளியே 'global' என்ற சிறப்புச் சொல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
    10. செயற்கூறினுள் முழுதளாவி மாறியை மாற்றம் செய்தால் என்ன நிகழும்?
    • செயற்கூறின் உள்ளே முழுதளாவிய மாறியை மாற்றம் செய்தால் Unbound Local Error எனும் பிழை Opener தோன்றும்.
    • செயற்கூறினுள் முழுதளாவிய மாறியின் மதிப்பை மாற்றியமைக்க 'global' என்ற சிறப்புச்சொல் பயன்படுத்த வேண்டும்.
    எடுத்துக்காட்டு:
    x=0
    def add():
            global x
            x=x+5
    add()
    print ("Global X:", x)
    வெளியீடு
    Global X:5

    11. ceil() மற்றும் floor() செயற்கூறுகளை வேறுபடுத்துக.
     
    ceil()
    ceil()
    x-யை விட பெரிய அல்லது க்கு நிகரான சிறிய முழு எண்ணைத் திருப்பி அனுப்பும்.
    math.ceil(x)
    X-யை விடக் குறைவான அல்லது X-க்கு நிகரான பெரிய முழு எண்ணைத் திருப்பி அனுப்பும்.
    math.floor(x)
    எடுத்துக்காட்டு:
    import math
    print(math.ceil (5.5))
    எடுத்துக்காட்டு:
    import math
    print(math.floor (5.5))


    12. கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா என்பதனைச் சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
    நிரல்:
    n=int(input("Enter the year:"))
    if(n%4==0):
            print ("Leap Year")
    else:
            print ("Not a Leap Year")
    வெளியீடு:
    Enter the year: 2012
    Leap Year

    13. செயற்கூறில் தொகுப்பு என்பது என்ன?
    • செயற்கூறு திருப்பி அனுப்பும் மற்றொரு செயற்கூறிற்கு செயலுருபாக, பின்னலான அமைப்பில் பயன்படுத்தினால் அதற்கு தொகுப்பு (composition) என்று பெயர்.
    • எடுத்துக்காட்டு:
    •   input() செயற்கூறு மூலம் பயனரிடமிருந்து மதிப்பை உள்ளீடாகப் பெற்று eval() செயற்கூறு மூலம் அதன் மதிப்பை மதிப்பீடு செய்யவேண்டும்.
    •  >>> n1 = eval (input ("Enter a number: "))
    14. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?
    • தற்சுழற்சி செயற்கூறு வெளிபுற குறிமுறையிலிருந்து அழைக்கப்படும்.
    • அடிப்படை நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் நிரலானது ஏற்ற வெளியீடு கொடுத்து வெளியேறும்
    • இல்லையெனில், செயற்கூறானது தேவையான செயற்பாட்டை இயக்கும் மேலும் தற்சுழற்சி முறையில் தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும்.
    15. செயற்கூறினை வரையறுக்கும் போது குறிப்பிடப் பட வேண்டிய குறிப்புகள் யாவை?
    • செயற்கூறு தொகுதி def என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கி செயற்கூறுவின் பெயர் மற்றும்( அடைப்புக் குறியுடன் முடிய வேண்டும்.
    • உள்ளீட்டு செயலுருப்புகள் அல்லது அளபுருக்கள் இருப்பின் அவற்றை ( ) என்ற அடைப்புக்குறிக்குள் கொடுக்க வேண்டும்.
    • குறிமுறை தொகுதியானது எப்பொழுதும் முக்காற்புள்ளிக்கு பிறகு உள்தள்ளி வரவேண்டும்.
    • "return [கோவை]" கூற்று செயற்கூறுவை முடித்து வைக்கும். செயலுருபுகள் இல்லாத return, return None-க்கு நிகரானது.

    IV. பெரு வினாக்கள்

    16. செயற்கூறின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி
    • ஒரு குறிப்பிட்ட செயலினை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதியே செயற்கூறு எனப்படும்.
    செயற்கூறின் வகைகள்:
    1. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
    2. உள்ளிணைந்த செயற்கூறுகள்
    3. லாம்டா செயற்கூறுகள்
    4. தற்சுழற்சி செயற்கூறுகள்
    1. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்:
    • பயனர்கள் தாங்களாவே வரையறுக்கும் செயற்கூறுகள்.
    • ஒரு செயல்பாட்டை உருவாக்கி அதை பயன் படுத்துவதற்கு செயற்கூறினை வரையறுக்க வேண்டும்.
    • செயற்கூறு தொகுதி def என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கி செயற்கூறுவின் பெயர் மற்றும் () அடைப்புக் குறியுடன் முடிய வேண்டும்.
    செயற்கூறுவின் தொடரியல் :
    def <function_name ([parameter1, parameter2...])>:
                 <Block of Statements>
               return <expression / None>
    எடுத்துக்காட்டு:
                       def area(w,h):
                               return w* h
                       print (area (3,5))
    2. உள்ளிணைந்த செயற்கூறுகள்:
    •  பைத்தானில் உள்ளடக்கப்பட்ட செயற்கூறுகள் உள்ளிணைந்த செயற்கூறுகள் ஆகும்.
    •  Print(), echo() ஆகியவை சில உள்ளிணைந்த செயற்கூறுகள் ஆகும்.
    3. லாம்டா செயற்கூறுகள்:
    • பைத்தானில், பெயரில்லாமல் வரையறுக்கப்படும் செயற்கூறுவுக்கு பெயரில்லாத செயற்கூறு அல்லது லாம்டா செயற்கூறுகள் என்று பெயர்.
    • பைத்தானில் பெயரில்லாத வரையறுக்கப்படுகிறது. செயற்கூறுகள் லாம்டா சிறப்புச் சொல்லுடன்
    • லாம்டா செயற்கூறு பெரும்பாலும் சிறிய மற்றும் ஒரு முறை பெயரில்லாத செயற்கூறை உருவாக்க பயன்படுகிறது.
    • எடுத்துக்காட்டு:
                           sum = lambda arg1, arg2: arg1 + arg2
                           print ('The Sum is:', sum (30,40))
    • வெளியீடு:
                          The Sum is: 70

    4. தற்சுழற்சி செயற்கூறுகள்:
    • தற்சுழற்சி செயற்கூறு தன்னைத்தானே அழைக்கும்.
    • ஒவ்வொரு தற்சுழற்சி செயற்கூற்றிக்கும் அடிப்படை நிபந்தனை கொடுக்கப்பட வேண்டும் இல்லையென்றால் மடக்கு காலவரையின்றி இயங்கும்.
    • எடுத்துக்காட்டு:
               def fact(n):
                        if n == 0:
                    return 1
                else:
                  return n fact(n-1)
             print(fact (5))
    • வெளியீடு:
                  120

    17. மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • மாறிகளின் வரையெல்லை, நிரலின் அணுகக் கூடிய பகுதியைக் குறிப்பதாகும்.
    • வரையெல்லையானது நடப்பு மாறித் தொகுதிகள் மற்றும் அதன் மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
    வகைகள
    1. உள்ளமை வரையெல்லை
    2. முழுதளாவிய வரையெல்லை
    1.உள்ளமை வரையெல்லை  (Local Scope):
    • ஒரு செயற்கூறுவின் உடற்பகுதியின் உள்ளே அல்லது உள்ளமை வரையெல்லையில் மாறியை அறிவிப்பது உள்ளமை மாறி எனப்படும்.
    உள்ளமை மாறியின் விதிமுறைகள்:
    • உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
    •  செயற்கூறினுள் மாறி உருவாக்கப்படும் போது அது உள்ளமைவாக அமையும்.
    •  செயற்கூறு இயக்கப்படும்போது மட்டுமே உள்ளமை மாறிகள் உருவாக்கப்படும்.
    •  எடுத்துக்காட்டு:
                  def loc():
                         y=0          # local scope
                 print(y)
                 loc()
    • வெளியீடு:       0

    2. முழுதளாவிய வரையெல்லை (Global Scope):
    • முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுக முடியும் எந்த ஒரு செயற்கூறு வரையெல்லைக்கு வெளியேயும் மாறியை வரையறுத்து உருவாக்க முடியும்
    குளோபல் வரையெல்லை சிறப்புச் சொல்லின் விதிமுறைகள்:
    • செயற்கூறுக்கு வெளியே மாறியை அறிவிக்கும் போது அது தானமைவாக குளோபல் ஆகும் 'global' என்ற சிறப்புச் சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை.
    • செயற்கூறினுள் முழுதளாவிய மாறியை படிக்க மற்றும் எழுத 'global' சிறப்புச்சொல் பயன்படுத்த வேண்டும்.
    • செயற்கூறுவிற்கு வெளியே 'global' என்ற சிறப்புச் சொல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
    • எடுத்துக்காட்டு:
                            x = 0
                           def add():
                                        global x
                                         x=x+5
                          add()
                          print ("Global X:", x)
    • வெளியீடு:
    Global X:5
    18. பின்வரும் உள்ளிணைந்த செயற்கூறுகளை விளக்குக.
    (a) id()            (b) chr()            (c) round()           (d) type            ()(e) pow()
     
    செயற்கூறு
    விளக்கம்
    பொதுவடிவம்
    எடுத்துக்காட்டு 

    id ()

     
    கொடுக்கப்பட்ட பொருளின் நினைவக முகவரியைத் திருப்பி அனுப்பும்.
    Id (object)
    x=15 print ('Address of x is :",id (x))
    வெளியீடு:
    Address of x is: 1357486752

    chr()

     
    கொடுக்கப்பட்ட ASCII மதிப்பிற்கு யுனிக்கோடு எழுத்தை திருப்பி அனுப்பும்.
    Chr(i)

    c=65

    print (chr (c))
    வெளியீடு:
     
    (c) round()
    கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அருகே உள்ள முழு எண்ணாக மாற்றி திருப்பி அனுப்பும்.
    1. முதல் செயலுருபு கொடுக்கப்பட்ட எண்ணைக் குறிக்கும்
    2. இரண்டாவது செயலுருபு தசம புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
    round
    (number
    [,ndigits])
    x= 10.57 print (round (x,1))
    வெளியீடு:
    10.6

     

    (d) type()

     
    கொடுக்கப்பட்ட பொருளின் தரவின வகையைத் திருப்பி அனுப்பும்.
    Type (object)

    x= 15 print (type (x))

    வெளியீடு:
    <class 'int'>
     

    (e) pow()

     

    கொடுக்கப்பட்ட

    எண்ணின் a b அடுக்கு பெருக்கத்தை திருப்பி அனுப்பும்.

    Pow

    (a,b)
    a= 5
    b= 2
    print (pow (a,b))
    வெளியீடு: 25
     

     

      19. இரண்டு எண்களின் LCM கண்டுப்பிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
    நிரல்:

    x=int(input("Enter first number:"))
    y=int(input("Enter second number:"))
    if x>y:
          min=x
    else:
         min=y
    while(1):
    if((min%x == 0) and (min % y == 0)):
         print("LCM is:",min)
         break
    min=min+1
    வெளியீடு:
    Enter first number:2
    Enter second number:3
    LCM is: 6 

    20. தற்சுழற்சி செயற்கூறு பற்றி எடுத்துக்காட்டுன் விளக்குக.
    •  தற்சுழற்சி செயற்கூறு தன்னைத் தானே அழைக்கும்.
    • தற்சுழற்சி செயற்கூறு கொடுக்கப்படும் நிபந்தனையை அடிப்படை நிபந்தனை எனப்படும்.
    • ஒவ்வொரு தற்சுழற்சி செயற்கூற்றிக்கும் அடிப்படை நிபந்தனை கொடுக்கப்பட்ட வேண்டும் இல்லையென்றால் மடக்கு காலவரையின்றி இயங்கும்.
    • தற்சுழற்சி செயற்கூறின் செயல்பாடு:
    • 1. தற்சுழற்சி செயற்கூறு வெளிபுற குறிமுறையிலிருந்து அழைக்கப்படும்.
    • 2. அடிப்படை நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் நிரலானது ஏற்ற வெளியீடு கொடுத்து வெளியேறும்
    • 3. இல்லையெனில், செயற்கூறானது தேவையான செயற்பாட்டை இயக்கும் மேலும் தற்சுழற்சி முறையில் தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும்.
    • எடுத்துக்காட்டு:
    def fact(n):
              if n == 0:
                         return 1
             else:
                        return n* fact (n-1)
             print (fact (5))
    • வெளியீடு:    120


     


     

     

     

     









    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive