12th Computer Science - Book Back Answers - Chapter 1 - Tamil Medium Guides

 



 


    Plus One / 12th Computer Science - Book Back Answers - Chapter 1 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Computer Science - Chapter 1: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Chapter 1 – Computer Science from the Tamil Nadu State Board 12th Standard Computer Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Computer Science Chapter 1 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடம் 1: செயற்கூறு

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு

    1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
    (அ) துணை நிரல்கள்
    (ஆ) கோப்புகள்
    (இ) Pseudo குறிமுறை
    (ஈ) தொகுதிகள்
    விடைக்குறிப்பு:
    (அ) துணை நிரல்கள்

    2. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய நிரல் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
    (அ) துணை நிரல்கள்
    (ஆ) செயற்கூறு
    (இ) கோப்புகள்
    (ஈ) தொகுதிகள்
    விடைக்குறிப்பு:
    (ஆ) செயற்கூறு

    3. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
    (அ) துணை நிரல்கள்
    (ஆ) செயற்கூறு
    (இ) வரையறை
    (ஈ) தொகுதிகள்
    விடைக்குறிப்பு:
    (இ) வரையறை

    4. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    (அ) துணை நிரல்கள்
    (ஆ) செயற்கூறு
    (இ) அளப்புருக்கள்
    (ஈ) செயலுருபு
    விடைக்குறிப்பு:
    (ஈ) செயலுருபு

    5. செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    (அ) செயலுருபுகள்
    (ஆ) துணை நிரல்கள்
    (இ) செயற்கூறு
    (ஈ) செயற்கூறு
    விடைக்குறிப்பு:
    (அ) செயலுருபுகள்

    6. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
    (அ) { }
    (ஆ) ( )
    (இ) [ ]
    (ஈ)<>
    விடைக்குறிப்பு:
    (ஆ) ( )

    7. பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
    (அ) இயக்க அமைப்பு
    (ஆ) நிரல் பெயர்ப்பி
    (இ) இடைமுகம்
    (ஈ) தொகுப்பான்
    விடைக்குறிப்பு:
    (இ) இடைமுகம்

    8. பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
    (அ) இயக்க அமைப்பு
    (ஆ) நிரல் பெயர்ப்பி
    (இ) செயல்படுத்துதல்
    (ஈ) தொகுப்பான்
    விடைக்குறிப்பு:
    (இ) செயல்படுத்துதல்

    9. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் ஒரே மாதிரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
    (அ) Impure செயற்கூறு
    (ஆ) Partial செயற்கூறு
    (இ) Dynamic செயற்கூறு
    (ஈ) Pure செயற்கூறு
    விடைக்குறிப்பு:
    (ஈ) Pure செயற்கூறு

    10. அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
    (அ) impure செயற்கூறு
    (ஆ) Partial செயற்கூறு
    (இ) Dynamic செயற்கூறு
    (ஈ) Pure செயற்கூறு
    விடைக்குறிப்பு:
    (அ) impure செயற்கூறு


    II. குறு வினாக்கள்

    1. துணைநிரல் என்றால் என்ன?
    • ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே துணை நிரலாக்கமாகும்.
     2. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.
    • செயற்கூறு என்பது குறிமுறையின் ஒரு அலகு ஆகும்.
    • இது பெரும்பாலும் ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்படும்.
    • செயற்கூறானது பல வகை உள்ளீடுகளைக் கொண்டு செயல்பட்டு நிலையான வெளியீட்டைத் தருகிறது.
     3. X:(78) இதன் மூலம் அறிவது என்ன?
    • X:=(78), இது ஒரு செயற்கூறு வரையரை ஆகும்.
    • இங்கு, 78 என்ற மதிப்பானது 'X' என்ற பெயருடன் பிணைக்கப்படுகிறது.
     4. இடைமுகத்தையும், செயல்படுத்துதலையும் வேறுபடுத்துக.
    இடைமுகம்
    செயல்படுத்துதல்
    ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையை வரையறுக்கிறது, ஆனால் அவற்றை உண்மையில் செய்யக்கூடியது இல்லை.
    இடைமுகத்தில்
    வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது.
      
    5. பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை
    i) let sum x y:
    return x + y                                              சாதாரண செயற்கூறு
    ii) let disp:
    print 'welcome'                                         சாதாரண செயற்கூறு
    iii) let rec sum num:
     if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num                                               தற்சுழற்சி செயற்கூறு

    III. சிறு வினாக்கள்

    1. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?
    • ஒரு பொருளை முறையாக உருவாக்கி வழங்குவதற்கும் அதனை செயல்படுத்துவதற்கும் தேவையான இடைமுகத்தை இனக்குழு வார்ப்புரு குறிப்பிடுகிறது.
    • செயற்கூறுகளைப் பொருளுக்கு அனுப்புவதன் மூலம் பொருளின் பண்புகளையும் பண்புக்கூறுகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.
     2. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
    • strlen என்பது pure செயற்கூறாகும்.
    • ஏனென்றால், செயற்கூறு அளபுருவாக ஒரே ஒரு மாறியை எடுத்துக்கொண்டு அதனுடைய நீளத்தை கணக்கிடுகிறது.
    • இந்த செயற்கூறு வெளி நினைவகத்தில் இருந்து உள்ளீட்டை எடுத்துக்கொள்கிறது, ஆனால் மதிப்புகளை மாற்றுவதில்லை.
     3. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை?எடுத்துக்காட்டுடன் விளக்குக?
    • ஒரு செயற்கூறு அந்த வரையறை தொகுதியின் வெளியே உள்ள மாறிகள் அல்லது செயற்கூறுகளைச் சார்ந்து இருந்து ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் செயற்கூறு ஒரே மாதிரியாக இயக்கப்படும் என கூற இயலாது.
    • செயற்கூறின் உள்ளே உள்ள மாறியானது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
    • எடுத்துக்காட்டாக, random() என்கிற கணித செயற்கூறு ஒரே மாதிரியான அழைப்புக் கூற்றுக்கு வெவ்வேறு விதமான வெளியீடுகளைக் கொடுக்கும் 
    4. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக. 
    Pure செயற்கூறு
    Impure செயற்கூறு
    Pure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் அளபுருக்களை பொறுத்தே அமையும்.
    அதே அளபுருக்களைக் கொண்டு அழைத்தால் எப்பொழுதும் அதே திருப்பி அனுப்பும் மதிப்பே கிடைக்கும்.
    இந்த செயற்கூறு அளபுருக்களை மாற்றம் செய்யாது.
    Impure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் பொறுத்து அமையாது. அளபுருக்களை
    அதே அளபுருக்களைக் கொண்டு அழைத்தால் வெவ்வேறான திருப்பி அனுப்பும் மதிப்பு கிடைக்கும்.
    இந்த செயற்கூறு அளபுருக்களை மாற்றம் செய்யும்.
     
    5. ஒரு செயற்கூறிக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.
    • செயற்கூறுவின் வெளியே மாறியை மாற்றம் செய்வது என்பது பக்கவிளைவுகளில் ஒன்றாகும்.
                எடுத்துக்காட்டு:
                        y:= 0
                        let inc (x: int): int: =
                        y:= y + x
                        return (y)
    • மேலே கூறப்பட்ட எடுத்துக்காட்டில், y-ன் மதிப்பு செயற்கூறு வரையறையின் உள்ளே மாறுவதால் விடையானது ஒவ்வொரு முறையும் மாறும்.
    • inc() செயற்கூறுவின் பக்க விளைவு என்னவென்றால் வெளிப்புற மாறியான y ன் மதிப்பை மாற்றுவதாகும்.

    IV. பெரு வினாக்கள்

    1. அளபுருக்கள் என்றால் என்ன?
    (அ) தரவு வகை இல்லாத அளபுருக்கள்
    (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?
    • அளபுருக்கள் என்பது செயற்கூறு வரையரையில் உள்ள மாறிகள் ஆகும்.
    (அ)தரவு வகை இல்லா அளபுருக்கள்
        (requires: b>=0)
            (returns: a to the power of b)
        let rec pow a b:=
            if b=0 then 1
            else a pow b (a-1)
    • மேலேயுள்ள செயற்கூறு வரையறையில் 'b' என்ற மாறி அளபுரு ஆகும்.
    • மாறி 'b'க்கு அனுப்பப்படும் மதிப்பானது செயலுருபு ஆகும்.
    • செயற்கூறின் முன் நிபந்தனை (requires) மற்றும் பின் நிபந்தனை (return) கொடுக்கப்பட்டுள்ளது.
    • இங்கு நாம் எந்த தரவினத்தையும் குறிப்பிடவில்லை
    • மேலே உள்ள எடுத்துக்காட்டில், தரவு வகை(data type) விதிப்படி "if கோவை", "மதிப்பு 1"-யைத் திருப்பி அனுப்புவதால் அந்த கோவை முழுவதுமே 'int' தரவு வகையை கொண்டிருக்கும்.
    • செயற்கூறின் திருப்பி அனுப்பும் மதிப்பும் int ஆகவே இருக்கும்.
    • 0 மற்றும் * பயன்படுத்துவதால் 'a' மற்றும் 'b'-யின் வகையும் int ஆகும்.
    (ஆ)தரவு வகையுடன் கூடிய அளபுரு
        (requires: b>0)
            (returns: a to the power of b)
        let rec pow (a: int) (b: int): int :=
            if b=0 then 1
            else a pow b (a-1)
    • இங்கு நாம் வெளிப்படையாகவே தரவு வகைகளை குறிப்பிட்டுள்ளோம்.
    • 'a' மற்றும் 'b' தரவு வகைகுறிப்பு (type annotations) எழுதும் போது, அடைப்புக்குறிக்குள் ( ) அவசியமானது ஆகும்.
    • தரவு வகைக்கு வெளிப்படையாக தரவு வகை குறிப்பு எழுதுவது பிழைச் செய்தியைத் திருத்தம் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
     2. பின்வரும் நிரலில்
    let rec gcd a b :=
    if b <> 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்:
        ged
    ஆ) தற்சுழற்சி செயற்கூறு கூற்று:
        let rec ged a b :=
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்:
        "a" மற்றும் “b"
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று:
        ged b (a mod b)
    உ) தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக:
        return a

     
    3. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    Pure செயற்கூறு
    Impure செயற்கூறு
    ஒரே மாதிரியான அதே அளபுருக்களை அனுப்பும் போது, சரியான விடையைத் தரும்.
    Pure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் அளபுருக்களை  பொறுத்தே அமையும்.
    அதே அளபுருக்களைக் கொண்டு அழைத்தால் எப்பொழுதும் அதே திருப்பி அனுப்பும் மதிப்பே கிடைக்கும்.
    இந்த செயற்கூறு அளபுருக்களை மாற்றம் செய்யாது.
    எ.கா:
    let square x
         return: x * x
    செயற்கூறுக்கு அளபுருக்களை அனுப்பாத போதும், செயற்கூறின் உள்ளே உள்ள மாறியானது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
    Impure செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் அளபுருக்களை பொறுத்து அமையாது.
    அதே அளபுருக்களைக் கொண்டு அழைத்தால் வெவ்வேறான திருப்பி அனுப்பும் மதிப்பு கிடைக்கும்.
    இந்த செயற்கூறு அளபுருக்களை மாற்றம் செய்யும்.
    எ.கா:
        let a := random()
    if a > 10 then
         return: a
    else
                   return: 10
     
    4. இடைமுகம் மற்றும் செயல்படுத்துதலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    இடைமுகம்
    • ஒரு பொருள் (Object) செய்யக்கூடிய செயல்களின் தொகுப்பு இடைமுகம் ஆகும்.
    • ஆனால், உண்மையில் அவற்றை செய்யக்கூடியது இல்லை.
    • எடுத்துக்காட்டாக, மின் விளக்கின் சுவிட்ச்சை அழுத்தும் போது மின் விளக்கு ஒளிர்கிறது. அது எவ்வாறு ஒளிர்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டியதில்லை.
    இடைமுகத்தின் பண்புகள்
    • ஒரு பொருளை முறையாக உருவாக்கி வழங்குவதற்கும் அதனை செயல்படுத்துவதற்கும் தேவையான இடைமுகத்தை இனக்குழு வார்ப்புரு குறிப்பிடுகிறது.
    • செயற்கூறுகளைப் பொருளுக்கு அனுப்புவதன் மூலம் பொருளின் பண்புகளையும் பண்புக் கூறுகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.
    செயல்படுத்துதல்
    • இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது
    • பொருள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு நிறை வேற்றப்படுகிறது என்பதை செயல்படுத்துதல் ஆகும்.
    எடுத்துக்காட்டு:
    • காரை ஓட்டும் நபர் அந்த காரின் உட்புற செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
    • காரின் வேகத்தை அதிகப்படுத்த, அவர் காரின் துரிதப்படுத்தியை (accelerator) அழுத்தி விரும்பிய பண்பை பெறுவார்.
    • இங்கு துரிதப்படுத்தி என்பது கார் ஓட்டுநருக்கும், இயந்திரத்துக்கும் இடையேயான இடைமுகம் ஆகும்.
    • இதில், அழைக்கும் செயற்கூறு இவ்வாறு இருக்க வேண்டும் speed(70): இது ஒரு இடைமுகமாகும்.
    • உட்புறமாக, காரின் செயல்பாட்டை கார் ஓட்டுநரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
    • இதனால், இடைமுகத்தை செயல்படுத்துதலில் இருந்து பிரித்து வைக்கப்படுகிறது.


     


     

     

     

     









    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive