ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: தமிழக அரசு புகார் எண் வெளியீடு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 4, 2020

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: தமிழக அரசு புகார் எண் வெளியீடு


 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: தமிழக அரசு புகார் எண் வெளியீடு


தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது.


இதுபற்றி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


"தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.2020 முதல் 18.11.2020 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free - 1800 425 6151) மூலம் புகார் தெரிவிக்கலாம்.

சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் சிறப்பு செயலாக்கப் பிரிவின் (Special Flying Squad) மூலம் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது."

Post Top Ad