செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப தினமும் காலையில இதுல ஒன்ன குடிங்க போதும்... - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, November 21, 2020

செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப தினமும் காலையில இதுல ஒன்ன குடிங்க போதும்...


உங்களின் காலை வழக்கம் என்ன? சூடான ஒரு கப் காபி சாப்பிடுவதை விரும்புவீர்களா அல்லது நேராக காலை உணவை சாப்பிடுவீர்களா? நீங்கள் இந்த இரண்டு வகைகளில் எதைச் சேர்ந்தவராக இருந்தாலும், உங்களின் காலை வழக்கத்தை உடனே மாற்ற வேண்டும்.

பொதுவாக காலையில் எழும் போது, நமது உடலின் மெட்டபாலிசம் மெதுவாக இருக்கும், வயிற்றின் pH அளவு அதிகமாக இருக்கும் மற்றும் நீரிழப்புடன் இருப்போம். இந்நிலையில் ஒரு ஹெவியான உணவு அல்லது காப்ஃபைனை வெறும் வயிற்றில் அனுப்பும் போது, அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.

பொதுவாக 12 மணிநேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, நமது வயிறு மற்றும் குடல் பஞ்சு போன்று மென்மையாகிவிடும். இந்த நேரத்தில் இது அதிக சத்துக்களை உறிஞ்சக்கூடியதாக இருக்கும். எனவே காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒருசில சத்து நிறைந்த பானங்களை அருந்தும் போது, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நாள் முழுவதும் சிறப்பாகவும் செயல்பட முடியும்.

இக்கட்டுரையில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டிய பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அருகம்புல் ஜூஸ
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இது உடல் எடையைக் குறைப்பது, சரும பிரச்சனைகளை சரிசெய்வது, அதிக உணவு உட்கொள்ளவைக் குறைப்பது, செல்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, இரத்த ஓட்டத்தை தூண்டுவது, களைப்பை குறைப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகளை உடலுக்கு வழங்கும்.

எலுமிச்சை ஜூஸ்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, காலையில் குடியுங்கள். இது புத்துணர்ச்சி அளிப்பதுடன், இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும், உடலின் pH அளவைப் பராமரிக்க உதவும் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும். இதில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேன்
உங்களின் காலை பானம் மிகவும் சுவையானதாக இருக்க நினைத்தால், எலுமிச்சை நீருடன் இஞ்சி சாறு மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பானத்தை வெதுவெதுப்பான நிலையில் காலையில் குடிப்பது, செரிமான மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, அஜீரண கோளாறு, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும். மேலும் இந்த பானம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பானத்தைக் குடிக்கும் வழக்கத்தைக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு முதலில் கொதிக்கும் நீரில் இஞ்சியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

எலுமிச்சை, இஞ்சி, பட்டை, மஞ்சள், மிளகு மற்றும் தேன் கலந்த பானம்
இந்திய உணவுகளின் மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதோடு இவற்றில் உள்ள மருத்துவ குணங்களால் ஆயுர்வேதத்திலும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பட்டை, மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அது குடல் ஆரோக்கியத்தை பன்மடங்கு மேம்படுத்தும். அதிலும் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று, குளிர்காலத்தில் சந்திக்கும் சளி, காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, தேன் மற்றும் பட்டை கலந்த பானம்
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் நிறைந்துள்ளன. ஆரோக்கியமாக இருக்க இவற்றை டயட்டில் சேர்க்க வேண்டும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை வெறும் வயிற்றில் குடித்தால், வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் உடனடியாக நீங்கும். அதோடு, இது வயிறு அல்லது குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, தேன், பூண்டு சாறு மற்றும் ஒரு சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

துளசி பானம்
துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர்காலத்தில் காலையில் எழுந்ததும் குடிப்பது நல்லது. இதனால் துளசி செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமானம் சிறப்பான நடைபெறச் செய்யும். மேலும் இந்த டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், சரும பிரச்சனைகளைப் போக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். துளசி பானத்தின் சுவையை மேம்படுத்த அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

தைம், இஞ்சி, மிளகு மற்றும் மஞ்சள் பானம்
தைம் மற்றும் மிளகு சளித் தேக்க பிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. அதிகளவிலான சளி, சைனஸ் குழியை அடைத்து, பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் சுவாச பாதை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நினைத்தாவ், இந்த பானத்தைக் காலையில் குடியுங்கள். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் தைம், 1 மிளகு, சிறிது துருவிய இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

முடிவு
காலையில் எழுந்ததும் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் நம் உள்ளுறுப்பின் ஆரோக்கியம் உள்ளது. நீங்கள் காலை எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால், நாளின் பிற்பகுதியில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒருவேளை நீங்கள் மிகவும் சிம்பிளான பானத்துடன் ஒரு நாளை தொடங்க நினைத்தால், ஒரு டம்ளர் சுடுநீர் குடித்தாலே போதுமானது.

Post Top Ad