வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI-ல் தத்தளிப்பவர்களுக்கு- சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, November 23, 2020

வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI-ல் தத்தளிப்பவர்களுக்கு- சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!!!


    வீட்டுக் கடன் லட்ச லட்சமாகவாங்கிவிட்டு கடனை விட இரண்டுமடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல்  தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாகதிரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையைமொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாதுஎன்பதாலும், திரும்பக்

கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும்அசலில் வரிச் சலுகை கிடைக்கிறதுஎன்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கிஇருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனைவிரைவாக கட்டி முடிக்கவே பலரும்விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன்வாங்கி இருந்தாலும் அதனைசராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டிமுடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள்தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம்வரை கட்டினால், கட்டும் வட்டிஅதிகமாக இருக்கும். இதனை ஓர்உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள்(360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம்தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1)



இப்படி கடைசி வரைக்கும் கடனைக்கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப்பின்பற்றி வட்டியைக் கணிசமாகமிச்சப்படுத்தலாம். அவை பற்றி...

(1) மாதம் தோறும் குறிப்பிட்டதொகையை அதிகரித்துக் கட்டுதல்!

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்குபதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டிவந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வதுமாதத்திலே முடிந்துவிடும். இங்கேவட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில்ரூ.25 லட்சம் மிச்சமாகும்.(பார்க்க : அட்டவணை 2)


(2) ஆண்டு தோறும் தவணைஅதிகரித்து கட்டுதல்!

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில்கட்டும் வீட்டுக் கடனுக்கு உரியதவணையை கட்டி விட்டு, அதன்பிறகுஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்டதொகையை அதிகரித்துவரும்பட்சத்தில் வட்டி கணிசமாகமிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டுதவிர, அடுத்து வரும் ஆண்டுகளில்தவணையை மாதம் ரூ.5,000 வீதம்அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன்360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கேவட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 3)


(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகைகட்டுதல்!

வீட்டுக் கடன் தவணை தொகையைஅப்படியே கட்டிவரும் நிலையில்இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்குகுறிப்பிட்ட தொகையை அதிகரித்துவருவது மூலமும் வீட்டுக் கடனுக்கானவட்டியில் கணிசமாக ஒரு தொகையைமிச்சப்படுத்த முடியும். உதாரணமாகஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம்கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார்என்றால், அவரது கடன் 159-வதுமாதத்தில் முடிந்துவிடும். இங்கேவட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 4)

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளைபின்பற்றி வீட்டுக் கடனை விரைந்துஅடைக்க முயலுங்கள்!

Post Top Ad