அரசுப்பள்ளிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 29, 2020

அரசுப்பள்ளிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்!கோவைஎலச்சிபாளையம் அரசுநடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்தஅப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்  ஒருவர், ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாகவழங்கியுள்ளார்.


கோவைகருமத்தம்பட்டி பேரூராட்சிக்குஉட்பட்ட எலச்சிபாளையம் கிராமத்தில்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச்சேர்ந்த குழந்தைகள் படிக்க ஏதுவாக1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப்பள்ளியில் தற்போது 174 மாணவர்கள்படித்து வருகின்றனர். இடப்பற்றாக்குறை நிலவி வந்ததால்உயர் நிலைப்பள்ளியாக அப்பள்ளி தரம்உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப் பள்ளிக்குச்செல்ல வேண்டுமெனில் மாணவர்கள்15 கிலோமீட்டர் பயணித்து அரசூர், தெக்கலூர், சூலூர் பகுதிகளுக்குச்செல்ல வேண்டிய நிலை இருந்துவருகிறது.


எனவே, அப்பகுதியைச் சேர்ந்ததன்னார்வலர்கள், பொதுமக்கள்இணைந்து பள்ளியைத் தரம் உயர்த்தமுயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அரசுத் தரப்பை அனுகியபோது, இடம்இருந்தால் கட்டிடத்தைக்கட்டிக்கொடுப்பதாகத்தெரிவித்துள்ளனர். இதுகுறித்துஅப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்  ராமமூர்த்தியிடம் தெரிவித்தவுடன், அவர் தனக்குச் சொந்தமான ரூ.3 கோடி  மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத்தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து எலச்சிபாளையம் கிராமமக்கள் கூறுகையில், "கருமத்தம்பட்டிபேரூராட்சிப் பகுதியில் 1 லட்சத்துக்கும்அதிகமானோர் உள்ளனர். இருப்பினும், அரசு உயர்நிலைப்பள்ளி இல்லாததால்எலச்சிபாளையத்தில் பள்ளியைத் தரம்உயர்த்தத் தொடர்ச்சியாகப் பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். தொழிலதிபர் ராமமூர்த்தியிடம்தெரிவித்தவுடன் நடுநிலைப் பள்ளிக்குஅருகே 1.50 ஏக்கர் பரப்பளவிலானதனது நிலத்தை வழங்கி உயர்நிலைப்பள்ளி கட்ட ஆவனசெய்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்தமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், தொலைவில் உள்ளபள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகள்சென்று வீடு திரும்பும் வரைஅச்சத்துடனேயே பெற்றோர் இருக்கும்சூழல் தவிர்க்கப்படும். இடத்தைத்தானமாக அளித்த ராமமூர்த்திக்குநன்றி தெரிவிக்கும் விதமாக ஊர்மக்கள் சார்பில் நாளை (நவ.29) பாராட்டு விழா நடத்த ஏற்பாடுசெய்துள்ளோம். இடம்கிடைத்துள்ளதால் உயர்நிலைப்பள்ளியாக உடனே தரம் உயர்த்தஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


தந்தை வழியில் மகனும் உதவி

இதுகுறித்துத் தொழிலதிபர்ராமமூர்த்தி கூறுகையில், "எலச்சிபாளையம் கிராமம் விவசாயம்மற்றும் விசைத்தறித் தொழிலைப்பிரதானமாகக் கொண்டுள்ளது. இங்குகுழந்தைகள் படிப்பதற்காக 1957-ல்என்னுடைய தந்தை பள்ளிக்குநிலத்தைத் தானமாகக் கொடுத்து, பள்ளியும் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது மாணவர்களின் படிக்கும்ஆர்வம் அதிகரித்துள்ளதால்கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளிஇல்லாததால் அதைக் கட்ட கிராமமக்கள் முயற்சிகள்மேற்கொண்டுவந்தது குறித்துஎன்னிடம் தெரிவித்தனர்.

அதன்படி நிலத்தை அரசுக்குத்தானமாக வழங்கி உள்ளேன். இதனால்இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள்எந்தவித சிரமமும் இல்லாமல் கல்விபயில முடியும். இந்த இடத்தில்மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு, இங்குபயிலும் மாணவர்கள் வாழ்வில்முன்னேறினால் அதுவே எனக்குமிகுந்த மனநிறைவைத் தரும். மேலும்பள்ளிக்காக நிலம் வழங்க எனக்குவாய்ப்புக் கொடுத்த கிராம மக்களுக்குநன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்பள்ளிக்குத் தேவையான உதவிகளைஇயன்றவரை செய்யத் தயாராகஉள்ளேன்" என்றார்

Post Top Ad