உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, November 27, 2020

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.


சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற சர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

உலகம் முழுதும், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வி தரம், மாணவர் -- ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள், மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகிறது. இதன்படி, 2021ம் ஆண்டில், உலக அளவிலான சிறந்த கல்வி நிறுவன பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், உலக அளவில், சிறந்த கல்வி நிறுவனம் என்ற முதல் இடத்தை, அமெரிக்காவின், எம்.ஐ.டி., எனப்படும், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.அடுத்த இரண்டு இடங்களையும், அமெரிக்காவின் ஸ்டாண்போர்டு மற்றும் ஹாவர்டு பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன.உலக அளவில், சிறந்த, 500 கல்வி நிறுவனங்களில், இந்தியாவை சேர்ந்த எட்டு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளன. மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு, 172வது இடம் கிடைத்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., 275வது இடத்தில் உள்ளது. இதை தவிர, ஐ.ஐ.டி., டில்லி, கரக்பூர், கான்பூர், ரூர்கி, கவுஹாத்தி மற்றும் கர்நாடகாவின் பெங்ளூருவில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஆசிய அளவில், சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வாகி உள்ளது.

Post Top Ad