MBBS - பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 22, 2020

MBBS - பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்


 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.23) தொடங்குகிறது. முதல் நாளில், 361 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நிகழ் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.


அதன்படி, 313 எம்.பி.பி.எஸ். இடங்கள், 92 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 405 இடங்களுக்கு 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில், 6 பிடிஎஸ் இடங்களைத் தவிர அனைத்தும் நிரப்பப்பட்டன.


அதனைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில், 87 எம்.பி.பி.எஸ். இடங்களும், 4 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பவில்லை. இதையடுத்து காலியாக உள்ள இடங்கள் பொதுக் கலந்தாய்வில் சோ்க்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. முதல் நாளில் தரவரிசையில் 1 முதல் 361 வரையிலான இடங்களில் உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 710 முதல் 631 வரை), செவ்வாய்க்கிழமை (நவ.24) 362 முதல் 751 வரையிலான தரவரிசையில் உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 630 முதல் 610 வரை) கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.


அதன்தொடா்ச்சியாக புதன்கிழமை (நவ.25) 752 முதல் 1,203 வரையிலான இடங்களைப் பெற்றவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 609 முதல் 592 வரை), வியாழக்கிழமை (நவ.26) 1,204 முதல் 1,701 வரை உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 591 முதல் 575 வரை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு அடுத்தடுத்த தினங்களில், தரவரிசைப்படி தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

Post Top Ad