தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கான சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 4, 2020

தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கான சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை


 தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கான சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

 நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவலின்படிதமிழகத்தில் தமிழில் படிப்பதை ஊக்குவிக்கவே  வகையில் மாணவ மாணவிகளுக்கு தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2019-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் முதல் நிலை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றிப்பெற்றேன்.

நேர்முகத் தேர்வு பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் தேர்வாகவில்லை.

தமிழத்தில் அரசு வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீடு சலுகை பெற எனக்கு தகுதியுண்டு.

இருப்பினும் அந்த சலுகை எனக்கு வழங்கப்படவில்லை. தொலை நிலைக்கல்வியில் படித்தவர்களுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகை வழங்கப்படுகிறது.


எனவே, தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு பட்டியலுக்கு தடை விதித்து, தொலை நிலைக் கல்வி இல்லாமல் நேரடியாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அடிப்படையாக கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் - 1 பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் பயின்று, தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற தமிழில் ஏதாவது ஒரு பட்டத்தை தொலை நிலைக் கல்வியில் பெறுகின்றனர். அவர்களுக்கு தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது என்றனர்.


அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் தமிழில் படிப்பவர்கள் அருகி, மருகி வருகின்றனர். அதை ஊக்குவிக்கவே இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அந்தச் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? என கேள்வி எழுப்பினர்.


பின்னர், தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Post Top Ad