Tamil Nadu Board 12th Standard Computer Science - Chapter 3: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Chapter 3 – Computer Science from the Tamil Nadu State Board 12th Standard Computer Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Computer Science Chapter 3 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடம் 3: வரையெல்லை
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
(அ) வரையெல்லை
(ஆ) நினைவகம்
(இ) முகவரி
(ஈ) அணுகுமுறை
விடைக்குறிப்பு:
(அ) வரையெல்லை
2. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?
(அ) வரையெல்லை
(ஆ) மேப்பிங்
(இ) பின் பிணைத்தல்
(ஈ) முன் பிணைத்தல்
விடைக்குறிப்பு:
(ஆ) மேப்பிங்
3. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
(அ) ::
(ஆ) :=
(இ) =
(ஈ) = =
விடைக்குறிப்பு:
(இ) =
4. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் ஆகும்.
(அ) வரையெல்லை
(ஆ) மேப்பிங்
(இ) பிணைத்தல்
(ஈ) Namespaces
விடைக்குறிப்பு:
(ஈ) Namespaces
5. எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
(அ) உள்ளமை வரையெல்லை
(ஆ) முழுதளாவிய வரையெல்லை
(இ) தொகுதி வரையெல்லை
(ஈ) செயற்கூறு வரையெல்லை
விடைக்குறிப்பு:
(அ) உள்ளமை வரையெல்லை
6. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.
(அ) செயல்முறை நிரலாக்கம்
(ஆ) தொகுதி நிரலாக்கம்
(இ) நிகழ்வு இயக்க நிரலாக்கம்
(ஈ) பொருள் நோக்கு நிரலாக்கம்
விடைக்குறிப்பு:
(ஆ) தொகுதி நிரலாக்கம்
7. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.
(அ) கடவுச் சொல்
(ஆ) அங்கீகாரம்
(இ) அணுகல் கட்டுப்பாடு
(ஈ) சான்றிதழ்
விடைக்குறிப்பு:
(இ) அணுகல் கட்டுப்பாடு
8. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.
(அ) public உறுப்புகள்
(ஆ)protected உறுப்புகள்
(இ) pecured உறுப்புகள்
(ஈ) private உறுப்புகள்
விடைக்குறிப்பு:
(ஈ) private உறுப்புகள்
9. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?
(அ) public உறுப்புகள்
(ஆ) protected உறுப்புகள்
(இ) pecured உறுப்புகள்
(ஈ) private உறுப்புகள்
விடைக்குறிப்பு:
(அ) public உறுப்புகள்
10. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.
(அ) public உறுப்புகள்
(ஆ) protected உறுப்புகள்
(இ) pecured உறுப்புகள்
(ஈ) private உறுப்புகள்
விடைக்குறிப்பு:
(ஆ) protected உறுப்புகள்
II. குறு வினாக்கள்
1வரையெல்லை என்றால் என்ன?- வரையெல்லை என்பது மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின் அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்.
2. மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?
- மாறிகளுக்கு வரையெல்லை பயன்படுத்துவது சிறந்த வழிமுறையாகும், ஏனென்றால் அது ஒரே ஒரு வரையறைக்குள் மாறியை உட்படுத்துகிறது.
- மாறியின் வரையெல்லை என்பது அது குறிமுறையில் எங்கு புலப்படுகிறதோ அல்லது காணப்படுகிறதோ அந்தப் பகுதியாகும்.
3. மேப்பிங் என்றால் என்ன?
- மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் எனப்படும்.
- = என்ற குறியீடு, நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை பிணைக்கிறது (மேப்பிங்) செய்கிறது.
4. Namespaces சிறுகுறிப்பு வரைக?
- Namespaces என்பது மாறியின் பெயரை ஒரு பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்.
- எ.கா: a:=5 இங்கு, a என்பது 5 என்ற முழு எண்ணுடன் மேப் செய்யப்படுகிறது.
5. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.
Private:
- பைத்தான் ஒரு மாறி அல்லது வழிமுறையின் பெயருக்கு முன்னே இரட்டை அடிக்கோடிடும் (-) வழக்கத்தைப் பரிந்துரைத்தால் அது Private அணுகியல்பை கொண்டிருக்கும்.
- .: எ.கா: self._n1 = n1
Protected:
பைத்தான் ஒரு மாறி அல்லது வழிமுறையின் பெயருக்கு முன்னே ஒற்றை அடிக்கோடிடும் (_) வழக்கத்தைப் பரிந்துரைத்தால் அது Protected அணுகியல்பை கொண்டிருக்கும்.
.: எ.கா: self._n1 = n1
III. சிறு வினாக்கள்
. 1. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?- உள்ளமை வரையெல்லை, நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும்.
- செயற்கூறு எப்பொழுதும் மாறியின் பெயரை முதலில் அதன் உள்ளமை வரையெல்லையில் பார்வையிடும் அந்த வரையெல்லையில் இல்லையென்றால் மட்டுமே வெளி வரையெல்லையில் சோதிக்கும்.
- எடுத்துக்காட்டு.
Disp():
a := 7
→ உள்ளமை மாறி
print a
Disp()
- வெளியிடு: 7
2. முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?
- நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும்.
- அதாவது, முழுதளாவிய மாறிகளை நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும் வெளிப்புறமும் அணுகமுடியும்.
- எடுத்துக்காட்டு.
→ முழுதளாவிய மாறி
Disp():
a := 7
→ உள்ளமை மாறி
print a
Disp()
print a
வெளியிடு:
7
10
3. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?
- ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது பின்னலான செயற்கூறு எனப்படும்.
- மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் ஒரு மாறி அறிவிக்கப்பட்டால், உள் செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடியும்.
- இதுவே அடைக்கப்பட்ட வரையெல்லை எனப்படும்.
- நிரல்பெயர்ப்பி ஒரு நிரலில் மாறியை தேடும்பொழுது அது முதலில் உள்ளமை வரையெல்லையில் தேடும்.
- பின்னர் அடைக்கப்பட்ட வரையெல்லையில் தேடும்.
- எடுத்துக்காட்டு:
a:=10
Disp1():
print a
Disp1()
print a
Disp():
- வெளியிடு:
- 10
10
4. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?
- அணுகல் கட்டுப்பாடு என்பது கணினி சூழலில் உள்ள வளங்களை யாரெல்லாம் பார்வையிட என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு மற்றும் பயன்படுத்த முடியும் தொழில்நுட்பமாகும்.
- இது பாதுகாப்பின் ஒரு அடிப்படைக் கருத்தாகும்.
- இது பொருளுக்கான ஆபத்தைக் குறைக்கிறது.
- அதாவது அணுகல் கட்டுப்பாடு என்பது தரவை அணுகுவதற்கான குறிப்பிடப்பட்ட கட்டுப்பாடாகும்.
color:= Red
mycolor():
b:=Blue
myfavcolor():
g:=Green
print color, b, g
myfavcolor()
print color, b
mycolor()
print color
வெளியீடு:
Red Blue Green
Red Blue
Red
மாறிகளின் வரையெல்லை:
|
மாறி
|
வரையெல்லை
|
|
color
|
முழுதளாவிய வரையெல்லை
|
|
b |
அடைக்கப்பட்ட வரையெல்லை
|
|
g
|
உள்ளமை வரையெல்லை
|
வரையெல்லை:
- வரையெல்லை என்பது மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின் அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்.
- மாறியின் வரையெல்லை வகைகள்:
- LEGB விதி வரையெல்லை தேடப்பட வேண்டிய வரிசையை தீர்மானிக்கப் பயன்படுகிறது.
1. உள்ளமை வரையெல்லை:
1. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?
- உள்ளமை வரையெல்லை, நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும்.
- செயற்கூறு எப்பொழுதும் மாறியின் பெயரை முதலில் அதன் உள்ளமை வரையெல்லையில் பார்வையிடும் அந்த வரையெல்லையில் இல்லையென்றால் மட்டுமே வெளி வரையெல்லையில் சோதிக்கும்.
- எடுத்துக்காட்டு.
a := 7 → உள்ளமை மாறி
print a
Disp()
வெளியிடு: 7
II. முழுதளாவிய வரையெல்லை:
- நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கும் வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் முழுதளாவிய மாறிகள் எனப்படும்.
- அதாவது, முழுதளாவிய மாறிகளை நிரலின் அனைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் அணுகமுடியும்.
- எடுத்துக்காட்டு.
→ முழுதளாவிய மாறி
Disp():
a := 7
→ உள்ளமை மாறி
print a
Disp()
print a
வெளியிடு:
7
10
III. அடைக்கப்பட்ட வரையெல்லை:
- ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது பின்னலான செயற்கூறு எனப்படும்.
- மற்றொரு செயற்கூறு வரையறையை, தன்னுள் கொண்ட ஒரு வெளி செயற்கூறினுள் ஒரு மாறி அறிவிக்கப்பட்டால், உள் செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடியும்.
- இதுவே அடைக்கப்பட்ட வரையெல்லை எனப்படும்.
- நிரல்பெயர்ப்பி ஒரு நிரலில் மாறியை தேடும்பொழுது அது முதலில் உள்ளமை வரையெல்லையில் தேடும்.
- பின்னர் அடைக்கப்பட்ட வரையெல்லையில் தேடும்.
- எடுத்துக்காட்டு:
a:=10
Disp1():
print a
Disp1()
print a
Disp():
வெளியிடு:
10
10
IV. உள்ளிணைந்த வரையெல்லை:
- உள்ளிணைந்த வரையெல்லையனானது நிரல் வரையெல்லையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனைத்து பெயர்களையும் கொண்டிருக்கும்.
- நிரலாக்க மொழியின் நூலக செயற்கூறினுள் வரையறுக்கப்பட்ட மாறி அல்லது தொகுதி உள்ளிணைந்த வரையெல்லையைக் கொண்டுள்ளது.
- இவைகள், நூலக கோப்புகள் நிரலில் செயல்பட தொடங்கியவுடன் இறக்கப்படும்.
- எடுத்துக்காட்டு: Built in/module scope மென்பொருளுடன் தொடர்புடைய நூலக கோப்புகள்
2. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எழுதுக?
தொகுதி பண்பியல்கள் பின்வருமாறு:
1. தொகுதிகள் தரவு, தகவல் மற்றும் தருக்க செயலாக்கத்தைக் கொண்டுள்ளன.
2. தொகுதிகள் தனியாக தொகுக்கப்பட்டு நூலகத்தில் சேமிக்கப்படும்.
3. தொகுதிகள் நிரலில் சேர்க்க முடியும்.
4.ஒரு பெயரையும், சில செயல்படுத்தப்படுகின்றன. அளபுருக்களையும் பயன்படுத்தி தொகுதி பிரிவுகள்
5. ஒரு தொகுதியின் பிரிவுகள் மற்ற தொகுதிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
3. தொகுதி நிரலாக்கத்தின் பயன்களை எழுதுக?
- குறைந்த வரிகளைக் கொண்ட குறிமுறையை எழுதினால் போதுமானது.
- மறுபயனாக்கத்திற்கும் பலமுறை குறிமுறை தட்டச்சு செய்வதை தவிர்ப்பதற்கு, ஒற்றை செயல்முறையை உருவாக்கவேண்டும்.
- நிரல்கள் மிக எளிதாக வடிவமைக்கப்படுகின்றன. ஏனெனில், முழு குறிமுறையும் சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு சிறிய குழுவினரால் கையாளப்படுகிறது.
- தொகுதி நிரலாக்கம் பல நிரலர்களை ஒரே பயன்பாட்டில் வேலை செய்ய அனுமதிக்கிறது.
- பல கோப்புகளில் இந்த குறிமுறை சேமிக்கப்படுகிறது.
- குறிமுறை சிறியதாக, எளியதாக, புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
- துணைநிரல்களாக அல்லது செயல்கூறுகளாக இருப்பதால் பிழைகளை எளிதாக கண்டு பிடிக்க இயலும்.
- ஒரே குறிமுறை பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படலாம்.
- மாறிகளின் வரையெல்லையை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.








0 Comments:
Post a Comment