11th Computer science - Book Back Answers - Chapter 9 - Tamil Medium Guides


    Plus One / 11th Computer Science - Book Back Answers - Chapter 9 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard Computer science - Chapter 9: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Chapter 9 – Computer science from the Tamil Nadu State Board 11th Standard Computer science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Computer science Chapter 9 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 9 :C++ ஓர் அறிமுகம்

    I.சரியான விடையைத் தேர்ந்துதேடுத்து எழுதுக

    1. C++ -யை உருவாக்கியவர் யார்?
    (அ) சார்லஸ் பாபேஜ்
    (ஆ) ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப்
    (இ) பில் கேட்ஸ்
    (ஈ) சுந்தர் பிச்சை
    விடைகுறிப்பு:
    (ஆ) ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப்

    2. C ++ க்கு முதலன்முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?
    (அ) சிபிபி
    (ஆ) மேம்பட்ட சி
    (இ) இனக்குழுக்கள் உடன் சி
    (ஈ) சி உடன் இனக்குழுக்கள்
    விடைகுறிப்பு:
     (இ) இனக்குழுக்கள் உடன் சி

    3. C++ என பெயர் சுட்டியவர் யார்?
    (அ)) ரிக்மாஸ்சிட்டி
    (ஆ) ரிக் பிஜர்னே
    (இ) பில் கேட்ஸ்
    (ஈ) டென்னிஸ் ரிட்சி
    விடைகுறிப்பு:
     (அ)) ரிக்மாஸ்சிட்டி

    4. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:
    (அ) நிரல்
    (ஆ) நெறிமுறை
    (இ) பாய்வுப்படம்
    (ஈ) வில்லைகள்
    விடைகுறிப்பு:
     (ஈ) வில்லைகள்

    5. பின்வரும் செயற்குறிகளில் C ++ இன் தரவு ஈர்ப்பு செயற்குறி எது?
    (அ) >>
    ஆ)<<
    (இ)<>
    (ஈ) A
    விடைகுறிப்பு:
     (அ) >>

    6. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை இல்லை?
    (அ) நிரல்பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுக்கு சிறப்பு சொற்கள் என்று பெயர்.
    (ஆ) ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்.
    (இ) முழுஎண் மாறிலி தசமபுள்ளி இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
    (ஈ) அடுக்கு மாறிலிகளின் வடிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது
    விடைகுறிப்பு:
     (ஆ) ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்.

    7. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரியனா சரநிலையுரு ஆகும்?
    (அ) A
    (ஆ) 1232
    (இ) 'Welcome'
    (ஈ) “1232"
    விடைகுறிப்பு:
     (ஈ) “1232"

    8. உயர்நிலை மொழியில் எழுதப்படும் நிரல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    (அ) இலக்கு குறிமுறை
    (ஆ) மூல குறிமுறை
    (இ) இயங்கக்கூடிய குறிமுறை
    (ஈ) இவை அணைத்தும்
    விடைகுறிப்பு:
     (ஆ) மூல குறிமுறை

    9.a=5, b=6; எனில் a& b யின் விடை என்ன?
    (அ) 4
    (ஆ) 5
    (இ) 1
    (ஈ) 0
    விடைகுறிப்பு:
     (அ) 4

    10. தொகுப்பு நேர (Compile time) செயற்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    (அ) sizeof
    (ஆ) pointer
    (இ) virtual
    (ஈ) this
    விடைகுறிப்பு:
     (அ) sizeof
     
    Part II 
    1. C++-ல் எத்தனை வகையான தரவினங்கள் உள்ளன?
    (அ) 5
    (ஆ) 4
    (இ) 3
    (ஈ) 2
    விடைகுறிப்பு:
    (இ) 3
     
    2. C++க்கு முதலன்முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?
    (அ) signed
    (ஆ) int
    (இ) float
    (ஈ) char
    விடைகுறிப்பு:
     (அ) signed

    3.
    பின்வரும் கூற்றுகளின் விடையை கண்டறிக?
    char ch= 'B';
    cout << (int) ch;
    (அ) B
    (ஆ) b
    (இ) 65
    (ஈ) 66
    விடைகுறிப்பு:
     (ஈ) 66

    4. 
    மிதப்புப் புள்ளி மதிப்பை குறிப்பதற்கு பின்னொட்டாக பயன்படும் குறியுரு எது?
    (அ) F
    (ஆ) C
    (இ) L
    (ஈ) D
    விடைகுறிப்பு:
     (அ) F

    5.
    Dev C++?  short int  x;என்ற கூற்றில் மாறியில் அறிவிப்புக்கு எத்தனை பைட்டுகள் நினைவகத்தில் ஒதுக்கப்படும்
    (அ) 2
    (ஆ) 4
    (இ) 6
    (ஈ) 8
    விடைகுறிப்பு:
     (அ) 2

    6.
    பின்வரும் கூற்றுகளின் வெளியீட்டைகண்டறிக. 
     char ch = 'A';
    ch = ch + 1;
    (அ) B
    (ஆ) Al
    (இ) F
    (ஈ) IA
    விடைகுறிப்பு:
     (அ) B

    7. பின்வருவனவற்றுள் எது தரவினங்களின் பண்புணர்த்தி அல்ல?

    (அ) signed
    (ஆ) int
    (இ) long
    (ஈ) short
    விடைகுறிப்பு:
     (ஆ) int

    8.
    பின்வரும் செயற்குறிகள் எது தரவினங்களின் அளவை தருகிறது?
    (அ) sizeof( )
    (ஆ) int ( )
    (இ) long ( )
    (ஈ) double ( )
    விடைகுறிப்பு:
     (அ) sizeof( )

    9.
    எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?
    (அ) $
    (ஆ) #
    (இ) &
    (ஈ) !
    விடைகுறிப்பு:
     (இ) &

    10.endl கட்டளைக்கு மாற்றாக பயன்படுவது
    (அ) \t
    (ஆ) \b
    (இ) 10
    (ஈ) \n 
    விடைகுறிப்பு:
     (ஈ) \n

    II. குறு வினாக்கள்:

    1. வில்லைகள் என்றால் என்ன? C++ -ல் உள்ள வில்லைகளை கூறுக.
    • ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு, வில்லைகள் அல்லது மொழித் தொகுதி என்று அழைக்கப்படுகிறது.
    • வகைகள்:
    • சிறப்புச்சொற்கள்
    • குறிப்பெயர்கள்
    • நிலையுருக்கள்
    • செயற்குறிகள்
    • நிறுத்தற்குறிகள்

    2. சிறப்புச்சொற்கள் என்றால் என்ன? சிறப்புச்சொற்களை குறிப்பெயர்களாக பயன்படுத்தலாமா?
    • C ++ -நிரல் பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்கள் (reserved words), சிறப்புச்சொற்கள் ஆகும்.
    • சிறப்புச்சொற்களை குறிப்பெயர்களாக பயன்படுத்த முடியாது.

    3. பின்வரும் மாறிலிகள் எந்த வகை மாறிலிகள் ஆகும்?
    (i) 39
    (ii) 032
    (iii) 0XCAFE
    (iv) 04.14
    i) 39                -  Integer / முழு எண் மாறிலி
    ii) 032             -  Octal / எண்ம எண் மாறிலி
    iii) OXCAFE  -  Hexadecimal / பதினாறுநிலை மாறிலி
    iv) 04.14         -  Floating Point / மிதப்புப்புள்ளி மாறிலி

    4. கீழ்க்கண்டமெய்யான மாறிலிகளை அடுக்குகுறி வடிவில் எழுதுங்கள்:
    (i) 23.197
    (ii) 7.214
    (iii) 0.00005
    (iv) 0.319
    i) 23.197     = 0.23197 x 102  => 0.23197E2
    ii ) 7.214     = 0.7214 x 101    => 0.7214E1
    iii) 0.00005 = 0.5 x 10-4         => 0.5E-4
    iv) 0.319     = 3.19 x 10-1       => 0.0319E-1

    5. n=10; எனில், n>>2; ன் விடை என்ன? 
    விடை:
    n =1010 = 10102
    n=10    0   0   0   0   1    0   1   0
    n>>2    0   0   0   0   0    0   1   0
    (n>>2) = (00000010)2

    6. பொருத்துக:
    A
    B
    (a) வகுமீதி
    (1) வில்லைகள்
    (b) வரம்புச்சுட்டி
    (2) வகுத்தலின் மீதி
    (c) தரவு ஈர்ப்பு
    (3) நிருத்தக்குறிகள்
    (d) மொழித் தொகுதி
    (4) தரவு பெறும்
     விடை:
    A
    B
    (a) வகுமீதி
    (2) வகுத்தலின் மீதி        
    (b) வரம்புச்சுட்டி
    (3) நிருத்தக்குறிகள்
    (c) தரவு ஈர்ப்பு
    (4) தரவு பெறும்
    (d) மொழித் தொகுதி
    (1) வில்லைகள்
     
    Part II 

    1. const சிறப்பு சொல் பற்றி எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு எழுதுக.
    • const சிறப்பு சொல் மாறியின் அணுகு நிலையை மாற்றுகிறது அல்லது முறைப்படுத்துகிறது.
    • எனவே இது அணுகுநிலை பண்புணர்த்தி எனவும் அழைக்கப்படுகிறது.
    • எடுத்துக்காட்டு:
    • const int num = 100;
    • num - ன் மதிப்பு இந்த நிரல் முழுவதும் 100 என இருக்கும், இயக்கத்தின் போது மாறாது.
     
    2. setw() வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன?
    • setw() கையாளுகை செயற்கூறு வெளியீட்டிற்காக ஒதுக்கப்பட்ட புலத்தின் அகலத்தை வரையறுக்கிறது.
    • வெளியீட்டில் எழுதப்பட வேண்டிய குறைந்தபட்ச குறியுரு எண்ணிக்கையை புலத்தின் அகலம் நிர்ணயிக்கிறது.
     
    3. குறியுரு (char) தரவினம் ஏன் முழு எண் தரவினமாக கருதப்படுகிறது?
    • குருயுரு தரவினம் ஏற்றுக் கொள்ள கூடிய அனைத்து ASCII குறியுருக்களை பெற்று திருப்புகிறது.
    • இது முழு எண் வகையாக கருதப்படுகிறது.
    • ஏனெனில், அனைத்து குறியுருக்களும் நினைவகத்தில் அதனுடைய தொடர்புடைய ASCII குறியீடுகளாகவே குறிக்கப்படுகின்றன. 
     
    4. மேற்கோள் மாறிகள் என்றால் என்ன? அதன் பயன் யாது?
    • முன்னரே, வரையறுக்கப்பட்ட மாறிகளுக்கு ஒரு மறுபெயரை குறிப்புகள் வழங்குகின்றன.
    • குறிப்புகளின் அறிவிப்பு மாறியின் அடிப்படை தரவினத்துடன் & குறியீட்டையும் கொண்டிருக்கும். 
    • குறிப்பு மாறியின் பெயரானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாறியின் மதிப்பை எடுத்துக்கொள்ளும்.
    • கட்டளை அமைப்பு:
    • <type> <& reference_variable> = <original_variable>
     
    5. பின்வரும் C++ கூற்றுகள் சமமானதா என்பதை கண்டறிக.(I) char ch = 67; (II)charch = 'C';
    • ch = 67; மற்றும் charch = 'C'; ஆகிய இரண்டு கூற்றுகளும் சமமானதே.
    • ஏனேனில் C- ன் ASCII குறியீடு 65 ஆகும்.
     
    6. 56L மற்றும் 56 இடையே உள்ள வேறுபாடு என்ன?
    • 56L இது L (Long )என்ற பண்புணர்த்தியுடன் வருவதால் இதற்கு 4 bytes நினைவகம்
    • ஒதுக்கப்படும்.
    • 56 இது எந்த பண்புணர்த்தியும் இல்லாமல் வருவதால் int என்ற தரவினமுடன் 2 bytes நினைவகம் ஒதுக்கப்படும்.
     
    7. பின்வருவனவற்றுள் எது தகுதி வாய்ந்த மாறிலி என கண்டறிந்து, அதனுடைய வகையை குறிப்பிடுக.
    (i) 0.5 (ii) 'Name' (iii) '\t' (iv) 27,822
    i) 0.5          -  தகுதி வாய்ந்த மாறிலி ["மிதப்பு புள்ளி மாறிலி"]
    ii) 'Name'  -  தகுதியில்லா மாறிலி
    iii) '\t'        -  தகுதி வாய்ந்த மாறிலி ["குறியுறு மாறிலி"]
    iv) 27,822  - தகுதியில்லா மாறிலி
     
    8. x மற்றும் y என்பது இரண்டு இரட்டை மிதப்புப் புள்ளி மாறி என்றால் அதனை முழு எண்ணாக மாற்ற பயன்படும் C++ கூற்றை எழுதுக.
    விடை:
    double x=11.5; y=3.5;
    int a,b;
    a=int (x)
    b = int (y);
     
    9. num=6 என்று முதலில் கொடுக்கப்பட்டால் பின்வரும் கூற்றின் விடையை காண்க.
    (a) cout << num;
    (b) cout << (num==5);
    விடை:
    (a) 6
    (b) 0/False
     
    10. பின்வரும் இரண்டு கூற்றில் எது தகுதியானது என கண்டறிந்து அதன் விடையை எழுதுக.
    (i) int a; a = 3,014; தவறான கூற்று
    (ii) int a; a=(3,014); சரி, 014 என்பது எண்ம எண். இது பதின்ம எண்ணாக மாற்றப்பட்டு 'a' என்ற மாறியில் '12' என்ற மதிப்பு இருத்தப்படும்

    III.சிறு வினாக்கள்:

    1. சிறப்புச்சொற்கள் (keywords) மற்றும் குறிப்பெயர்கள் (identifiers) க்கு இடையே உள்ள வேறுபாடுகளை விவரி?
    சிறப்புச்சொற்கள்
    குறிப்பெயர்கள்
    C ++ -நிரல் பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்கள் (reserved words), சிறப்புச்சொற்கள் ஆகும்
    குறிப்பெயர்கள் என்பது C++ நிரலில் பயனரால் வரையறுக்கப்பட்ட, மாறிகள், செயற்கூறுகள், அணிகள், இனக்குழுக்கள் ஆகியவைக்கு கொடுக்கப்படும் பெயர்களாகும்.
    எடுத்துக்காட்டு: void, main,bal
    எடுத்துக்காட்டு: Name, NUM,Total_sal
     
    2. C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தியா? எழுத்து வடிவ உணர்த்தி (case sensitive) என்பதன் பொருள் என்ன?
    • C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தி (case sensitive) மொழியாகும்.
    • எனவே, சிறப்புச்சொற்கள் சிறிய எழுத்துக்களில் இருக்க வேண்டும்.
    • சிறிய எழுத்துக்கள் மற்றும் பெரிய எழுத்துக்கள் வெவ்வேறாக கருதப்படும்.
     
    3. "=" மற்றும் "== வேறுபடுத்துக.
    "="
    "=="
    மதிப்பிருத்து செயற்குறி
    ஒப்பீட்டுச் செயற்குறி
    ஒரு மதிப்பிருந்து கூற்றின் வலப்பக்கம் இருக்கும் மதிப்பைஇடப்பக்கம் உள்ளமாறியில் இருத்தும்.
    இரு செயலேற்பிகளும் ஒப்பிடப்பட்டு ஒப்பீட்டின் அடிப்படையில் விடை 1 அல்லது 0 என வரும்.
    எடுத்துக்காட்டு: a=10;
    எடுத்துக்காட்டு: a==b
     
    4. a=10, b=15; எனில் a^b – யின் மதிப்பு என்ன ?
    a = 10     1     0     1     0     
    b = 15     1     1     1     1
    (a^b) = (00000101)2 = 510
     
    5. தொடரியல் பிழை (Syntax error ) மற்றும் இயக்க நேர பிழை (Run time error ) இவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
    தொடரியல் பிழை
    இயக்க நேர பிழை
    C++ ன் இலக்கண விதிமுறைகள் மீறப்படும் போது தொடரியல் பிழைகள் ஏற்படுகின்றன.
    நிரலை இயக்கும் போது, இயக்க நேரப்பிழை தோன்றலாம். காரணம், Open முறையில்லாத செயல்முறைகளால் இந்த பிழை ஏற்படும்.
    எ.கா: கூற்று அரைப்புள்ளியுடன்
     () முடிக்கப்படவில்லை.
    எ.கா:இல்லாதஒரு கோப்பை நிரலானது திறக்கமுற்படும் போது இயக்க நேரப்பிழை ஏற்படுகிறது.
     
    6. தொடரியல் பிழை (Syntax error ) மற்றும் இடையே உள்ள வேறுபாடுகளை கூறுக. தர்க்கரீதியான பிழை (Logical error) இவற்றிக்கு
    தொடரியல் பிழை
    தர்க்கரீதியான பிழை
    C++ ன் இலக்கண விதிமுறைகள் மீறப்படும் போது தொடரியல் பிழைகள் ஏற்படுகின்றன.
    நிரலானது இலக்கண விதிமுறைப்படி சரியாக இருந்து தருக்க(logic) முறைப்படி தவறாக உள்ளது. ஆகையால் சொற்றொடர் பிழை தருக்கபிழை, என்றும் அழைக்கப்படும்.
    எ.கா: கூற்று அரைப்புள்ளியுடன் ()முடிக்கப்படவில்லை.

    எ.கா: மாறி / செயற்குறி / இயக்கப்படும்

    வரிசை போன்றவற்றில் ஏதேனும் தவறு இருத்தல்

     
    7. தலைப்புக் கோப்பின் பயன் யாது?
    • #என்பது ஒரு முன்செயலி நெறியுறுத்தும்.
    • #include<iostream> எனும் கூற்று, iostream என்னும் தலைப்புக் கோப்பினை நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு நிரல் பெயர்ப்பிக்கு உணர்த்துகிறது.
    • உள்ளீடு / வெளியீடு ( cin மற்றும் cout செயல்பாடுகளை பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் iostream என்னும் தலைப்பு கோப்பை ஒவ்வொரு C++ நிரலிலும் இணைக்க வேண்டும்.
     
    8. main செயற்கூற்றின் சிறப்பு யாது.?
    • C++ நிரலானது செயற்கூறுகளின் தொகுப்பாகும்.
    • ஒவ்வொரு C++ நிரலும் main() செயற்கூறினைக் கட்டாயமாக்கப் பெற்றிருக்க வேண்டும்.
    • செயல்படுத்தப்படும் கூற்றுகள் main() செயற்கூறினுள் இருக்கவேண்டும்.
     
    Part II 
     
    1. C++-ல் கணக்கீட்டுச் செயற்குறிகள் யாவை? ஒரும, இரும செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.
    கணக்கீட்டுச் செயற்குறிகள் (Arithmetic Operators):
    • கணக்கீட்டுச் செயற்குறிகள் எளிய கணிதச் செயல்பாடுகளாகிய கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற கணக்கீடுகளை செயல்படுத்துகிறது.
    • (i) ஒரும செயற்குறிகள் (Unary Operators) - ஒரே ஒரு செயலேற்பியை மட்டும் ஏற்கும்.
    • எடுத்துக்காட்டு: a++;
    • (ii) இரும செயற்குறிகள் (Binary Operators) - இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும்.
    • எடுத்துக்காட்டு: a+b;
     
    2. ஒப்பீட்டு செயற்குறிகளும், தருக்கச் செயற்குறிகளும் எந்த வகையில் தொடர்புடையவை?
    ஒப்பீட்டுச் செயற்குறிகள் (Relational Operators):
    • ஒப்பீட்டுச் செயற்குறிகள் செயலேற்பிகளுக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது.
    • ஒப்பீட்டுச் செயற்குறிகள் இரண்டு செயலேற்பிகள் மீது செயல்படுத்தப்படும் போது, விடையானது பூலியன் மதிப்பாக (TRUE/FALSE) இருக்கும்.
    தருக்கச் செயற்குறிகள் (Logical Operators):
    • தருக்கச் செயற்குறிகள், தருக்க மற்றும் ஒப்பீட்டு கோவைகளை மதிப்பிட பயன்படுகிறது.
    • தருக்க செயற்குறிகள் செயலேற்பிகளாகிய ஒப்பீட்டு கோவைகளின் மீது செயல்படுகிறது.
     
    3. பின்வரும் C++ கோவையை மதிப்பிடுக. இங்கு x, y, z என்பது முழு எண்கள் மற்றும் m, n என்பது மிதப்புப் புள்ளி எண்கள்
    x5, y = 4 மற்றும் m=2.5;
    (i) n = x + y/x;
    =5+4/5
    =5+0 (× மற்றும் y முழு எண்கள்) 
    =5
    (ii) z = m* x + y;
    = 2.5*5+4 (m>மிதப்புப் புள்ளி எண், மிதப்புப் புள்ளியாக மாற்றப்படும்)
    = 12.5+4'
    = 16 (2 is int type. So '.2', the fractional part is discarded)
    (iii) z = (x++) * m + x;
    = 5*2.5 + x
    = 12.5+5
    = 18 (z முழு எண், மிதப்புப் புள்ளி பகுதி நீக்கப்பட்டது.)

    IV. நெடு வினாக்கள்:

    1. C++ -ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.
    • இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும்
    • C++ செயற்குறிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
    • 1. கணக்கீட்டுச்செயற்குறிகள் (Arithmetic Operators)
    • 2. ஒப்பீட்டுச்செயற்குறிகள் (Relational Operators)
    • 3. தருக்கச்செயற்குறிகள் (Logical Operators)
    • 4. மதிப்பிருத்து செயற்குறிகள் (Assignment Operators)
    • 5. நிபந்தனைச்செயற்குறிகள் (Conditional Operator)
    (1). கணக்கீட்டுச் செயற்குறிகள் (Arithmetic Operators):
    • கணக்கீட்டுச் செயற்குறிகள் எளிய கணிதச் செயல்பாடுகளாகிய கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற கணக்கீடுகளை செயல்படுத்துகிறது.
    செயற்குறிகள்

    செயல்பாடு

    எடுத்துக்காட்டு

    +
    கூட்டல்
    10+5=15
    -
    கழித்தல்
    10-5=15
    *
    பெருக்கல்
    10*5 = 50
    /
    வகுத்தல்
    10/5 = 2 (வகுத்தலின் ஈவு)
    %
    முழு எண் வகுமீதி
    10 % 3 = 1(வகுத்தலின் மீதி)
     (2). ஒப்பீட்டுச்செயற்குறிகள் (Relational Operators):
    • ஒப்பீட்டுச் செயற்குறிகள் செயலேற்பிகளுக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது.
    • ஒப்பீட்டுச் செயற்குறிகள் இரண்டு செயலேற்பிகள் மீது செயல்படுத்தப்படும் போது, விடையானது பூலியன் மதிப்பாக (TRUE/FALSE) இருக்கும்.  
    செயற்குறி
    செயல்பாடு

    எடுத்துக்காட்டு

    விடப்பெரிது
    a > b
    விடச்சிறிது
    a < b
    >=
    விடப்பெரிது அல்லது நிகர்
    a >= b
    <=
    விடச்சிறிது அல்லது நிகர்
    a <= b
    =
    நிகரானது
    a == b
    !=
    நிகரில்லை
    a != b
    (3). தருக்கச் செயற்குறிகள்(Logical Operators):
    • தருக்கச் செயற்குறிகள், தருக்க மற்றும் ஒப்பீட்டு கோவைகளை மதிப்பிட பயன்படுகிறது.
    • தருக்க செயற்குறிகள் செயலேற்பிகளாகிய தருக்க கோவைகளின் மீது செயல்படுகிறது.
    செயற்குறி
    செயல்பாடு
    விளக்கம்
    &&
    AND
    இரண்டு கோவைகளும் சரியெனில் 1 (True) என்ற மதிப்பை தரும். இல்லை எனில் 0 (False) என்ற மதிப்பை தரும்.
    ||
    OR
    ஏதேனும் ஒரு கோவை சரியெனில் 1 (True) என்ற மதிப்பை தரும். இல்லை எனில் 0 (False) என்ற மதிப்பை தரும்.
    !
    NOT
    ஒரு செயலேற்பி அல்லது கோவை 1 (True) எனில் இந்த செயற்குறியானது 0 (False) என்னும் மதிப்பைதரும். 0 (False) எனில் 1 (True) மதிப்பை தரும்.
     (IV). மதிப்பிருத்து செயற்குறிகள் (Assignment Operators):
    • செயற்குறி = (சமம்) என்பது மதிப்பிருத்து செயற்குறி ஆகும்.
    • ஒரு மதிப்பிருந்து கூற்றின் வலப்பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருத்தும்.
    செயற்குறி
    செயற்குறியின் பெயர்
    எடுத்துக்காட்டு
    +=
    கூட்டல் மதிப்பிருத்து
    a+= 5; (ie, a = a + 5)
    -=
    கழித்தல் மதிப்பிருத்து
    a-=5;(ie. a= a-5)
    *=
    பெருக்கல் மதிப்பிருத்து
    a*= 5; (ie. a = a * 5)
    /=
    வகுத்தல் மதிப்பிருத்து
    a/= 5; (ie. a = a / 5)
    %=
    வகுமீதி மதிப்பிருத்து
    a%= 5; (ie. a = a % 5)
    (V). நிபந்தனைச் செயற்குறிகள் (Conditional Operator):
    • C++இல் உள்ள ஒரே ஒரு நிபந்தனைச் செயற்குறி ( ?:) உள்ளது.
    • இது ஒரு மும்ம செயற்குறி ஆகும்.
    • இந்த செயற்குறி if ... else கட்டுப்பாட்டு கூற்றுக்கு மாற்றாகப் பயன்படுகிறது.
     
    2. பிழைகளின் வகைகள் யாவை?

     





    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive