Tamil Nadu Board 11th Standard Computer science - Chapter 3: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Chapter 3 – Computer science from the Tamil Nadu State Board 11th Standard Computer science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Computer science Chapter 3 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 3 : கணினிஅமைப்பு
I.சரியான விடையைத் தேர்ந்துதேடுத்து எழுதுக
(அ) உள்ளீட்டுச் சாதனங்கள்
(ஆ) வெளியீட்டுச் சாதனங்கள்
(இ) நினைவக சாதனங்கள்
(ஈ) நுண்செயலி
விடைகுறிப்பு:
(ஈ) நுண்செயலி
2.பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?
(அ) கணித ஏரணச்செயலகம்
(ஆ) கட்டுப்பாட்டகம்
(இ) கேச் நினைவகம்
(ஈ) பதிவேடு
விடைகுறிப்பு:
(இ) கேச் நினைவகம்
3. எத்தனை பிட்டுகள் கட்டமைக்கும் ஒரு வேர்டை?
(அ) 8
(ஆ) 16
(இ) 32
(ஈ) பயன்படுத்தப்படும் செயலியைப் பொருத்தது
விடைகுறிப்பு:
(ஈ) பயன்படுத்தப்படும் செயலியைப் பொருத்தது
4.பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும் போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும்?
(அ) லொகேட்டர் (Locator)
(ஆ) என்கோடர் (Encoder)
(இ) டிகோடர் (Decoder)
(ஈ) 4 (Multiplexer)
விடைகுறிப்பு:
5. பின்வருவனற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?
(அ) Intel P6
(ஆ) AMD K6
(இ) Pentium III
(ஈ) Pentium IV
விடைகுறிப்பு:
(இ) Pentium III
6.எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?
(அ) வன் வட்டு
(ஆ) முதன்மை நினைவகம்
(இ) கேச் நினைவகம்
(ஈ) புளு- ரே நினைவகம்
விடைகுறிப்பு:
(இ) கேச் நினைவகம்
7. ஒரு 8 -பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?
(அ) 28
(ஆ) 1024
(இ) 256
(ஈ) 8000
விடைகுறிப்பு:
8. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?
(அ) 4.7 GB
(ஆ) 5.5 GB
(இ)7.8GB
(ஈ) 2.2 GB
விடைகுறிப்பு:
9. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது?
(அ) தொகுதி
(ஆ) பகுதி
(இ) பிட்ஸ்
(ஈ) தடங்கள்
விடைகுறிப்பு:
(இ) பிட்ஸ்
10.கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?
(அ) USB
(ஆ) Ps/2
(இ) SCSI
(ஈ) VGA
விடைகுறிப்பு:
(ஈ) VGA
II. குறு வினாக்கள்:
நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள்:
- a) கடிகார வேகம் (Clock Speed)
- b) கட்டளைத் தொகுப்பு (Instruction Set)
- c) வேர்டு அளவு(Word Size)
- ஒரு தரவின் மீது செயல்பாடுகளைச் செயல்படுத்துவதற்காக, கணிப்பொறிக்கு கொடுக்கப்படும் கட்டளைகளே அறிவுறுத்தல் எனப்படும்.
- நிரலின் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மையச்செயலகத்தில் சேமித்து வைக்கும் ஒரு சிறப்பு பதிவேடு தான் நிரல் பதிவேடு (Program Counter) ஆகும்.
- உயர் வரையறை பல்லூடக என்றும் இடைமுகம் ஒலி / ஒளி இடைமுகம் சுறுக்கப்படாத ஒலி மற்றும் ஒளி தரவுகளைக் கணிப்பொறி திரையகம், புரொஜெக்டர் டிஜிட்டல் தொலைக்காட்சி ஆகியவற்றிக்கு கொடுக்கப் பயன்படுகின்றது
- EPROM-ல் புற ஊதா ஒளி செலுத்தி தகவல்கள் அழிக்கப்படுகிறது.
III.சிறு வினாக்கள்:
1. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
|
கணிப்பொறி அமைப்பு
|
கணிப்பொறி
கட்டமைப்பு
|
|
கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை
உள்ளடக்கியது.
|
கணிப்பொறி கட்டமைப்பு என்பது கணிப்பொறியை வடிவமைப்பதில்
ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருது கோளுடன் கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது.
|
2. தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக.
தரவின் அகலத்தின் அடிப்படையில் நுண்செயலி கட்டளைகளைச் செயலாக்கும்.
தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியின் வகைகள்:
8 - பிட் நுண்செயலி
16 - பிட் நுண்செயலி
32 - பிட் நுண்செயலி
64 - பிட் நுண்செயலி
3. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக.
நுண்செயலியை வகைப்படுத்தும் போது கட்டளைத் தொகுதியின் அளவு ஒரு முக்கியமான கருத்தாக அமையும்.
கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகள்:
1) RISC:
RISC என்பது Reduced Instruction Set Computers.
எடுத்துக்காட்டு: Pentium IV, Intel P6, AMD K6 மற்றும் K7.
2)CISC:
CISC என்பது Complex Instruction Set Computers.
எடுத்துக்காட்டு: Intel 386 & 486, Pentium, Pentium II, III
4. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக.
|
PROM
|
EPROM
|
|
நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம்
Programmable
Read-Only Memory - PROM
|
அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம்
EPROM
- Erasable Programmable Read-Only Memory
|
|
PROM
ஒரு அழியா நினைவகம் ஆகும்.
|
EPROM
அழிக்கக்கூடிய ஒரு வகையான சிறப்பு நினைவகம் ஆகும்.
|
|
PROM
ல் ஒரு முறை நிரல்களை எப்பொழுதும் எழுதிவிட்டால்
அழியாமலிருக்கும்.
|
EPROM-ல் புற ஊதா ஒளி செலுத்தி தகவல்கள் அழிக்கப்படுகிறது.
|
5. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்பு முகங்களை எழுதுக. (Any 3)
(1) தொடர் தொடர்பு முகம்(serial port)
பழைய கணினிகளில் வெளிக்கருவிகளை CS Knowledge இணைப்பதற்க பயன்படுத்தப்பட்டது
(2) இணையான தொடர்பு முகம் (Parallel Port)
பழைய கணினிகளில் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது
(3) USB தொடர்பு முகம்
மொபைல்கள், அச்சுபொறிப் போன்ற வெளிக்கருவிகளை இணைக்க பயன்படுகிறது.
(4) VGA இணைப்பான
புரொஜெக்டர் அல்லது காட்சி திரையைக் கணினியுடன் இணைப்பதற்குப் பயன்படும்.
(5) AUDIO PLUGS
கணினியுடன் ஒலிபெருக்கி, மைக்ரோபோன், மற்றும் தொலைபேசி போன்றவற்றை இணைப்பதற்கு பயன்படுகிறது.
(6) PS2 Port
சுட்டி மற்றும் விசைப்பலகையைக் கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
(7) SCSI Port
வன்வட்டு, பிணைய இணைப்பிகள் கணினியுடன் இணைப்பதற்குப் பயன்படுகிறது.
6.CD மற்றும் DVD வேறுபடுத்துக.
|
CD
|
DVD
|
|
CD → CD-ROM
|
DVD → Digital Versatile Disc / Digital
Video
Disc
|
|
CD
-ல் தரவுகள் துணுக்குகளாக சேமிக்கப்படுவது PITS
எனப்படும்
|
DVD
-ல் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களை கொண்டு, மேலும் ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு
அடுக்குகளில் தரவுகளை சேமிக்கும்
|
|
கொள்ளளவு -700 MB
|
கொள்ளளவு - 4.7 GB வரை
|
|
லேசர் மூலம் படிக்கும்
|
லேசர் மூலம் படிக்கும்
|
|
அலுமினியம் அல்லது தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்.
|
வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்.
|
7. ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?
| ஃபிளாஷ் நினைவகம் | EEPROM |
| ஃபிளாஷ் நினைவகம் ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறா சேமிக்கும் சாதனமாகும். | EEPROM-ல் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது. |
| ஃபிளாஷ் நினைவகம் ஒரு EPROM, EEPROM வகையைச் சார்ந்தது | EEPROM ஒரு சிறப்பு PROM வகையைச் வகையைச் சார்ந்தது |
| மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும் | மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும் |
| வேகமான அணுகல் நேரத்தை வழங்குகிறது. | மெதுவாக இயங்கும் நினைவகம் |
IV. நெடு வினாக்கள்:
- ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்க்காணும் அதன் பண்பியல்களை அடிப்படையாக கொண்டது:
- a) கடிகார வேகம் (Clock Speed)
- b) கட்டளைத் தொகுப்பு (Instruction Set)
- c) (Word Size)
- கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை நுண்செயலி உள்ளே உள்ள கடிகாரம் கட்டுப்படுத்துகிறது.
- இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும்.
- கணிப்பொறியின் வேகத்தை மெகாஹெர்ட்ஸ்) மற்றும் ஜிகாஹெர்ட்ஸ்
- அளவில் அளக்கப்படுகிறது.
- நுண்செயலியைச் செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அடிப்படை இயந்திர நிலை அறிவுறுத்தல் தொகுதிகளைக் கட்டளைத் தொகுப்பு என்கிறோம்.
- இந்த கட்டளைகளின் தொகுதி பின்வரும் செயல்களை செயல்படுத்துகிறது.
- எண்கணிதசெயல்முறைகள்
- தருக்கசெயல்முறைகள்
- கட்டுப்பாட்டு நகர்வு
- உள்ளீடு / வெளியீடு
- வேர்டின் அளவு என்பது ஒரு தடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும்.
- ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையை பொருத்ததாகும்.
2. படித்தல்/ எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக.
- மையச் செயலகம் (CPU), தரவு நினைவகப் தரவு பதிவேடுகளையும் (MDR) மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் (MAR) கொண்டுள்ளது.
- நினைவகத்திற்கும் மற்றும் மையச் செயலகத்திற்கும் இடையே தேவையான தரவைத் CS Knowledge நினைவக தரவு பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
- நிரலின் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மையச்செயலகத்தில் சேமித்து வைக்கும் ஒரு சிறப்பு பதிவேடு தான் நிரல்பதிவேடு ஆகும்.
- பாட்டை(bus) என்பது கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொகுப்பு ஆகும்.
- RAM- யில் உள்ள வேர்டின் அளவும் நினைவக தரவு பதிவேட்டின் அளவும் ஒன்றாகும்.
- 8-பிட் செயலியான Intel 8085 யில் நினைவக தரவு பதிவேடும் மற்றும் RAM-யில் உள்ள வேர்டின் அளவும் 8 பிட் ஆகும்.
- READ செயல்பாடு தரவுகளை (பிட்டுகளை) வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேடுகளுக்கு அனுப்பும்.
- படிக்கும் செயல் என்பது தரவினை நினைவகத்திலிருந்து (வேர்டிலிருந்து) எடுத்து MDR -க்கு கொண்டு செல்வதை குறிக்கும்.
- WRITE செயல்பாடு தரவுகளை (பிட்டுகளை) நினைவக தரவு பதிவேடுகளில் இருந்து வேர்டிற்கு அனுப்பும்
- எழுதுதல் செயல் என்பது தரவினை MDR -லிருந்து நினைவகத்திற்கு (வேர்டிற்கு) கொண்டு செல்வதை குறிக்கும்.
- அதில் 1 என்றால் படிப்பதற்கும், 0 என்றால் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டைக் குறிக்கும்.

- ப்ளூ ரே வட்டில் 50 GB வரை தரவுகளை சேமிக்கலாம்.
- DVD (DIGITAL VERSATILE DISC) 4.7 GB வரை தரவுகளை சேமிக்கலாம்.
- CD (COMPACT DISC) 700 MB வரை தரவுகளை சேமிக்கலாம்.
- வன்வட்டு ஒரு காந்த வட்டாகும்.
- வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுக்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும்.
- வன்வட்டுகள் ஒன்று அல்லது இரட்டை பக்க வட்டுக்களாக இருக்கும்.
- கணிப்பொறியின் முதன்மை நினைவகம் நேரடி அணுகல் நினைவகம் (Random Access Memory) என்றும் அழைக்கப்படுகிறது.
- இது கணிப்பொறியில் ஒரு ஒருங்கிணைந்த சுற்றுகளாக பொருத்தப்பட்டுள்ளது.
- கணிப்பொறியில் இங்கு தான் இயக்க அமைப்பு, பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள தரவுகள் கணினியின் செயலியால் அணுகும்.
- RAM ஒரு தற்காலிக நினைவகம் ஆகும்.
- முதன்மை நினைவகம் READ மற்றும் WRITE செயல்களை அனுமதிக்கும்.
- கேச் நினைவகம் அதிவேகமான, விலை உயர்ந்த நினைவகம் ஆகும்.
- கேச் நினைவகம் அடிக்கடி தேவைப்படும் தரவுகளை சேமிக்கும்.
- அதனால் இது நினைவகத்தில் உள்ள தரவைத் திரும்ப எடுத்தலை துரிதப்படுத்தும்.
- முதன்மை நினைவகத்தின் அளவை விட இது சிறியது.
4. ROM ன் வகைகளைப் பற்றி விளக்கமாக எழுதுக.
1) (ROM) - Read-Only Memory:
- படிக்க மட்டும் நினைவகம் (ROM) கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம்.
- இதில் தரவுகள் ஒரு முறை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.
- இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு செய்யப்பட்டு விடுவதால் அதில் மாற்றம் செய்யமுடியாது.
- ROM-ல் கணினியைத் துவங்குவதற்கான மிக முக்கிய நிரல்களைச் சேமித்து வைக்கும்.
- ROM படிக்க மட்டும் மற்றும் அழியா நினைவகம்.
- நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும்.
- இதில் தரவுகள் ஒரு முறை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.
- PROM,ROM-ல்இருந்து மாறுபட்டதாகும்.
- PROM தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும்.
- PROM-ல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை எழுக்திகொள்ளலாம்.
- PROM Burner பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள் எழுதப்படுகின்றது.
- அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும்.
- இதில் புறஊதா ஒளி மூலம் தகவல்கள் அழிக்கப்படுகிறது.
- EPROM-ல் தகவல்கள் புறஊதா ஒளி செலுத்தும் வரை தகவல்களைச் சேமித்து வைக்கும்.
- புறஊதா ஒளியை செலுத்தி PROM-ன் உள்ளடக்கத்தை அழித்தும், மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் எழுதலாம்.
- EPROM பொதுவாக தனியாள் கணினியில் பயன்படுத்தப்படுகிறது.
- ஏனெனில்உற்பத்தியாளர்கள் கணினியை வழங்குமுன் PROM-ன் உள்ளடக்கத்தை மாற்றி,
- மேம்படுத்தி அல்லது நீக்க வேண்டியவற்றை அழிக்க முடியும்.
- EEPROM ஒரு சிறப்பு PROM வகையைச் சார்ந்த நினைவகம் ஆகும்.
- இதில் உள்ள தரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம்.
- மற்ற PROM வகையைப்போல மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது.
- EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.







0 Comments:
Post a Comment