11th Computer science - Book Back Answers - Chapter 14 - Tamil Medium Guides

    Plus One / 11th Computer Science - Book Back Answers - Chapter 14 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard Computer science - Chapter 14: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Chapter 14 – Computer science from the Tamil Nadu State Board 11th Standard Computer science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Computer science Chapter 14 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

    I.சரியான விடையைத் தேர்ந்துதேடுத்து எழுதுக

    1. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் குறிப்பிடுகின்றோம். செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.
    (அ) தரவு செயற்கூறுகள்
    (ஆ) inline செயற்கூறுகள்
    (இ) உறுப்பு செயற்கூறுகள்
    (ஈ) பண்புக் கூறுகள்
    விடைகுறிப்பு:
    (ஈ) பண்புக் கூறுகள்
     
    2.பின்வரும் உறுப்புச் செயற்கூறினைப் பற்றிய கூற்றுகளில் எது சரி அல்லது தவறு?
    i) புள்ளி செயற்குறி மூலம் ஒரு உறுப்புச் செயற்கூறு, இன்னொரு உறுப்புச் செயற்கூறினை நேரடியாக அழைக்கலாம்.
    ii) இனக்குழுவின் private தரவுகளை உறுப்புச் செயற்கூறு அணுக முடியும்
    .
    (அ) i-சரி, ii -சரி
    (ஆ) i-தவறு, ii-சரி
    (இ) i-தவறு,ii சரி
    (ஈ)i-தவறு, ii –தவறு
    விடைகுறிப்பு:
     (ஆ) i-தவறு, ii-சரி

    3. ஒரு உறுப்பு செயற்கூறு, இன்னொரு உறுப்பு செயற்கூறைப் புள்ளி செயற்குறியைப் பயன்படுத்தாமல் நேரடியாக அணுகலாம் என்பதை எவ்வாறு குறிப்பிடலாம்.
    (அ) துணை செயற்கூறு
    (ஆ) துணை உறுப்பு
    (இ) பின்னலான உறுப்பு செயற்கூறு
    (ஈ) துணை உறுப்பு செயற்கூறு
    விடைகுறிப்பு:
     (இ) பின்னலான உறுப்பு செயற்கூறு

    4. இனக்குழுவுக்குள் வரையறுக்கப்படும் செயற்கூறுகள் எந்த செயற்கூறுகளைப் போல் இயங்குகின்றன?
    (அ) inline செயற்கூறுகள்
    (ஆ) inline அல்லாத செயற்கூறுகள்
    (இ) Outline செயற்கூறுகள்
    (ஈ) தரவு செயற்கூறு
    விடைகுறிப்பு:
     (அ) inline செயற்கூறுகள்

    5. பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?
    (அ) Private
    (ஆ) Protected
    (இ) Public
    (ஈ) முழுதளாவிய
    விடைகுறிப்பு:
    (அ) Private

    6. கீழ்கண்ட நிரலில் எத்தனை பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன?  
    class x
    int y;
    public:
    x (int z) (y=z;}
    x1 [4];
    int main ( )
    {x x2(10);
    return 0;}

    (அ) 10
    (ஆ) 14
    (இ) 5
    (ஈ)2
    விடைகுறிப்பு:
     (இ) 5

    7. ஆக்கி செயற்கூறு பற்றிய பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா எனக் கூறு.
    i) ஆக்கிகள் private பகுதியில் அறிவிக்கப்பட வேண்டும்
    ii) பொருள்கள் உருவாக்கப்படும் போது, ஆக்கி தானாகவே இயக்கப்படும்.

    (அ) சரி, சரி
    (ஆ) சரி, தவறு
    (இ) தவறு, சரி
    (ஈ) தவறு தவறு
    விடைகுறிப்பு:
     (இ) தவறு, சரி

    8. பின்வரும் முன்வடிவுக்கு கீழ்கண்டவற்றுள் எந்த ஆக்கி இயக்கப்படும்?
    add display (add &); //add
    இனக்குழுவின் பெயர்

    (அ) தானமைவு ஆக்கி
    (ஆ) அளபுருக்களுடன் கூடிய ஆக்கி
    (இ) நகல் ஆக்கி
    (ஈ) அளபுருக்கள் இல்லாத ஆக்கி
    விடைகுறிப்பு:
    (இ) நகல் ஆக்கி
     

    II. குறு வினாக்கள்:

    1. உறுப்புகள் என்றால் என்ன?
    • இனக்குழுவானது உறுப்புகளை உள்ளடக்கியதாகும்.
    • மற்றும் உறுப்பு செயற்கூறுகள் என உறுப்புகளானது தரவு உறுப்புகள் வகைப்படுத்தப்படும்.
    • தரவு உறுப்புகள் என்பவை தரவு மாறிகள் எனப்படும்.
    • உறுப்பு செயற்கூறுகள் என்பவை ஓர் இனக்குழுவானது குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்ய உதவும் செயற்கூறுகளாகும்.

    2. பயனர் வரையறுத்த தரவினம் வகையான கட்டுரு, இனக்குழு வேறுபடுத்திக் காட்டுக.
    • கட்டுரு மற்றும் இனக்குழுவிற்கு இடையேயான வேறுபாடானது, கட்டுரு உறுப்புகளானது கொடாநிலையாக Public அணுகியல்புடணும், இனக்குழுவின் உறுப்புகளானது Private அணுகியல்புடணும் இருக்கும்.
    • கட்டுரு வரையறுக்க struct என்னும் சிறப்பு சொல் பயன்படுகிறது.
    • இனக்குழு வரையறுக்க class என்னும் சிறப்பு சொல் பயன்படுகிறது.

    3. பொருள் நோக்கு நிரலாக்கு குறிமுறை (OOP) அடிப்படையில் இனக்குழு மற்றும் பொருள் பற்றி வேறுபடுத்திக் காட்டுக.
    இனக்குழு
    பொருள்
    தரவையும் அதனோடு தொடர்புடைய செயற்கூறினையும் இணைத்து வைப்பது இனக்குழுவாகும்.
    இனக்குழுவை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொருள் பயன்படுகிறது.
    இனக்குழு பயனர் வரையறுக்கும் தரவினமாகும். இனக்குழுவானது ஒரே மாதிரியான பொருள்களின் குழுவைக் குறிக்கிறது.
    இனக்குழுவில் அறிவிக்கப்படும் மாறியானது பொருள்கள் (objects) எனப்படும்.
    பொருள்கள் இனக்குழுவின் சான்றுரு எனவும் அழைக்கப்படும்.

    4. நிரல்பெயர்ப்பி தாமாகவே ஆக்கியை உருவாக்கிக்கொள்ள முடிந்தாலும், ஆக்கி வரையறுப்பு ஏன் சிறந்த வழக்கம் என்று கருதப்படுகிறது?
    • நிரல்பெயர்ப்பி தாமாகவே ஆக்கியை உருவாக்கிக்கொள்ள முடிந்தாலும் பொருளுக்கு மதிப்பு இருத்த முடியாது.
    • ஆக்கியின் வரையறுப்பில் பெயரை வெளிப்படையாக கொடுக்கும் போது பொருளை உருவாக்கி தொடங்கி வைக்க முடிகிறது.
    • இதனால், அளபுருக்களை ஏற்கும் ஆக்கி அழைக்கப்படுகிறது மற்றும் தரவு இழப்புக்கான வாய்ப்பு ஏற்படாது.

    5. அழிப்பியின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
    • அழிப்பி என்பது, ஒரு பொருளை உருவாக்கும்போது, ஆக்கியால் பொருளுக்கென ஒதுக்கப்படும் நினைவகப் பகுதியை விடுவிக்கும் ஒரு செயற்கூறாகும்.
    • இதுவும் இனக்குழுவின் பெயரையேக் கொண்டிருக்கும். ஆனால் ~என்னும் குறியைப் பெயரின் முன்னொட்டாக கொண்டிருக்கும்.

    III.சிறு வினாக்கள்:

    1. பின்வரும் நிரலில் கட்டளை அமைப்புப் பிழை ஏதேனும் இருப்பின், அவற்றை நீக்கி, பிழையைக் கோடிட்டு காட்டி, நிரலை மாற்றி எழுதவும்.
    #include<iostream>
    #include<stdio.h>
    class mystud
    {
    int studid=1001;
    char name[20];
    public
    mystud()
    {
    }
    void register ()
    {
    cin>>stdid;gets(name);
    }
    void display()
    {
    Cout<<studid<<”:”<<name<<endl;
    }
    }
    int main()
    {
    mystud MS;
    register.MS();
    MS.display();
    }
    பிழை திருத்தப்பட்ட நிரல்
    #include<iostream>
    #include<stdio.h>
    using namespace std;
    class mystud
    {
    int studid;
    char name[20];
    public:
    mystud()
    {
    cout<<”Enter the Stud id:”;
    cin>>studid;
    }
    void reg()
    {
    cout<<”Enter the Name:”;
    cin>>name;
    cout<<”Student Id”<<’\t’<<’\t’<<”Name”<<’\n’;
    }
    void display()
    {
    cout<<studid<<’\t’<<’\t’<<name<<endl;
    }
    };
    int main()
    {
    mystud MS;
    MS.reg();
    MS.display();
    return 0;
    }
     
    2. நிரலின் இயங்கு நேரத்தில் ஒரு பொருளை எவ்வாறு தொடங்கி வைப்பது என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் எழுதுக.
    • இயங்கு நேரத்தில் தொடக்க மதிப்புகள் கொடுக்கப்பட்டால் அது இயங்கு நிலையில் தொடங்குதல் எனப்படும்.
    எடுத்துக்காட்டு:
    #include<iostream>
    using namespace std;
    class X
    {
    int n;
    public:
    X (int p)
    {
    n=p;
    }
    void disp()
    {
    cout<<"\n Roll number: " <<n;
    }
    };
    int main()
    {
    int a; float b;
    cout<<"\n Enter the Roll Number:";
    cin>>a;
    X x(a); // dynamic initialization
    x.disp();
    return 0;
    }
    வெளியீடு:
    Enter the Roll Number: 1201
    Roll number: 1201

    3. Public அணுகுமுறையில் ஆக்கிகள், அழிப்பிகள் அறிவிப்பினால் விளையும் நன்மைகள் யாவை?
    • Public அணுகுமுறையில் ஆக்கிகள், அழிப்பிகள் அறிவிப்பினால்,
    • ஓர் இனக்குழு பொருள் உருவாக்கப்படும்போது ஆக்கி தானாகவே இயக்கப்படும்.
    • ஓர் இனக்குழு பொருளின் பயன்பாடு முடிவுக்கு வரும்போது அழிப்பி தானாகவே இயக்கப்படும்.

    4. கீழே கொடுக்கப்பட்டுள்ள C++ நிரலைக் கொண்டு (i) & (ii) வினாக்களுக்கான விடைகளைத் தருக.
    class TestMeOut
    {
    public:
    ~TestMeOut() //Function 1
    {cout<<"Leaving the examination hall"<<endl;}
    TestMeOut() //Function 2
    {cout<<"Appearing for examination"<<endl;}
    void MyWork() //Function 3
    {cout<<"Attempting Questions//<<endl;}
    };
    (i) பொருள் நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு-1 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுது அது அழைக்க/ இயக்கப்படுகிறது?
    • செயற்கூறு-1 என்பது அழிப்பி செயற்கூறாகும்.
    • ஓர் இனக்குழு பொருளின் பயன்பாடு முடிவுக்கு வரும்போது அழிப்பி தானாகவே இயக்கப்படும்.
    (ii) பொருள்நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு-2 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுது அது இயக்க/ அழைக்கப்படுகிறது?
    • செயற்கூறு -2 என்பது ஆக்கி செயற்கூறாகும்.
    • ஓர் இனக்குழு பொருள் உருவாக்கப்படும்போது ஆக்கி தானாகவே இயக்கப்படும்.
     

    IV. நெடு வினாக்கள்

    1. ஆக்கி, அழிப்பி வேறுபாடு தருக
    ஆக்கி
    அழிப்பி
    ஆக்கியின் பெயர் இனக்குழுவின் பெயராகவே இருக்க வேண்டும்.
    அழிப்பியின் பெயரானது ~ என்ற முன்னொட்டு குறியுடன் கூடிய இனக்குழுவின் பெயரையேக் கொண்டிருக்கும்.
    ஆக்கி அளபுருக்களின் பட்டியலைக் கொண்டிருக்கும்.
    அழிப்பி, செயலுருபுகளை ஏற்காது.
    ஆக்கி எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது.
    அழிப்பி எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது.
    ஆக்கி செயற்கூறு, பணி மிகுக்கப்பட முடியும்.
    அழிப்பி பணிமிகுக்கப்பட முடியாது.
    பயனர் வரையறுக்கும் ஆக்கி இல்லாத போது நிரல்பெயர்ப்பி ஓர் ஆக்கியை உருவாக்கிக்கொள்ளும்.
    பயனர் அழிப்பியை வரையறுக்காத போது நிரல்பெயர்ப்பி ஓர் அழிப்பியை உருவாக்கிக்கொள்ளும்.
    ஓர் இனக்குழு பொருள் உருவாக்கப்படும் போது ஆக்கி தானாகவே இயக்கப்படும்.
    ஓர் இனக்குழு பொருளின் பயன்பாடு முடிவுக்கு வரும்போது அழிப்பி தானாகவே இயக்கப்படும்.
    ஆக்கியைத் தருவிக்க முடியாது.
    அழிப்பியைத் தருவிக்க முடியாது.

    2. கீழ்காணும் வரையறுப்புகளுடன் Resort என்னும் ஓர்இனக்குழுவைவரையறுக்கவும்
    private உறுப்புகள்
    Rno // அறைஎண்ணைஇருத்தி வைக்கும் தரவு உறுப்பு
    Name //பயனரின் பெயரைஇருத்தி வைக்கும் தரவு உறுப்பு
    Charges // ஒரு நாளுக்குரிய கட்டணத்தைஇருத்தி வைக்கும் தரவு உறுப்பு
    Days // நாட்களின் எண்ணிக்கையைஇருத்தி வைக்கும் தரவு உறுப்பு
    Compute () // Days * Charges கொண்டுமொத்த தொகையைகணக்கிடும் செயற்கூறு 
    //மொத்த தொகை11000 ரூபாய்க்கு மேல் இருந்தால், மொத்த மொத்த தொகையைக்கணக்கிட 1.02 * Days *Charges
    Public member:
    getinfo() // பெயர், அறைஎண், கட்டணம், நாட்கள் போன்ற தகவல்களை உள்ளீடாகப்பெறும் செயற்கூறு
    dispinfo () // உள்ளிடப்பட்டதரவுகள் மற்றும் Compute செயற்கூறினைப்பயன்படுத்தி கணக்கிட மொத்த தொகையைவெளியிடும் செயற்கூறு

    நிரல்:
    #include<iostream>
    using namespace std;
    class RESORT
    {
    private:
    int Rno, Days, Charges;
    char Rname[20];
    int compute()
    {
    if(Days* Charges > 11000)
    return (Days * Charges * 1.02);
    else
    return (Days * Charges);
    }
    public:
    GetInfo()
    {
    cout<< "\n Enter customer name:";
    cin>>Rname;
    cout<< "\n Enter charges per day:";
    cin>>Charges;
    cout<< "\n Enter Number of days:";
    cin>>Days;
    cout<<"\n Enter Room Number:";
    cin>>Rno;
    }
    DispInfo()
    {
    cout<<"\n Room Number:" <<Rno;
    cout<<"\n Customer name:" <<Rname;
    cout<<"\n Charges per day:" <<Charges;
    cout<<"\n Number of days:" <<Days;
    cout<<"\n Total Amount:" <<compute();
    }
    };
    int main()
    {
    RESORT S;
    S.GetInfo();
    S.DispInfo();
    }
    வெளியீடு:
    Enter customer name: ILAKKIA
    Enter charges per day: 1500
    Enter Number of days: 3
    Enter Room Number:101
    Room Number: 101
    Customer name: ILAKKΙΑ
    Charges per day: 1500
    Number of days:3
    Total Amount: 4500
    Process exited after 23.81 seconds with return value 0
    Press any key to continue

    3. கீழ்காணும் நிரலுக்கு வெளியீடு எழுது.
    #include<iostream>
    using namespace std;
    class student
    {
    int rno, marks;
    public:
    student(int r,int m)
    { cout<<"Constructor "<<endl;
    rno=r;
    marks=m;
    }
    void printdet()
    {
    marks=marks+30;
    cout<<"Name: Bharathi"<<endl;
    cout<<"Roll no: "<<rno<<"\n";
    cout<<"Marks: "<<marks<<endl;
    }
    };
    CS Knowledge Opener
    int main()
    {
    student s(14,70);
    s.printdet();
    cout<< "Back to Main";
    return 0;
    }
    வெளியீடு:
    Constructor
    Name: Bharathi
    Roll no: 14
    Marks: 100
    Back to Main
    Process exited after 0.07184 seconds with return value 0
    Press any key to continue

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive