தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்பு துவக்கம்



புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கியுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் முதல், தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் வகுப்புகள் நடக்கவில்லை; 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே, சில மாதங்கள் வகுப்புகள் நடந்தன.கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகரித்ததால், சில மாதங்களே நடந்த வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன. 



பின், மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டது. எனவே, ஆன்லைன் வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1 முதல் புதிய கல்வியாண்டு துவங்கியது. இதையடுத்து, பெரும்பாலான தனியார் பள்ளிகள், ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ளன. குறிப்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும், தினமும் மூன்று மணி நேரத்துக்கு மேலாக, ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.



முதற்கட்டமாக, பொது தேர்வுகள் எழுத உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.ஊரடங்கு காலம் முடிந்ததும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும், விரைவில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கும் என, தனியார் பள்ளிகள் தரப்பில், மாணவர்களின் மொபைல் போனுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive