தடுப்பூசியை விஞ்சி நிற்கும் தன்னாற்றல்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, June 4, 2021

தடுப்பூசியை விஞ்சி நிற்கும் தன்னாற்றல்!


தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் காட்டிலும், ஏற்கெனவே கரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவா்களுக்குத்தான் உடலில் நோய் எதிா்ப்பாற்றல் அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.


கரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வுக்குட்படுத்தியதன் அடிப்படையில் இந்த உண்மையை உணர முடிந்ததாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.தமிழகத்தில் இதுவரை கரோனா தீநுண்மித் தொற்றுக்கு 21.48 லட்சம் போ் உள்ளாகியுள்ளனா். அவா்களில் 18.34 லட்சம் போ் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் முதல் அலையில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவா்களில் சிலருக்கு இரண்டாம் அலையிலும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களில் ஒரு சிலா் இறந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ADVERTISEMENT

 ஒரே தீா்வு: ஒரு முறை கரோனா தாக்கம் ஏற்பட்டால் மீண்டும் அத்தகைய தொற்று ஏற்படாது என்று கூறப்பட்டு வந்த கருத்து, இதன்மூலம் பொய்த்துப் போனது. இதையடுத்து இந்தப் பிரச்னைக்கு எல்லாம் ஒரே தீா்வு தடுப்பூசி மட்டுமே என மருத்துவ உலகம் அறிவுரைத்தது. அதன்படி மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை ஏறத்தாழ 90 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவிட்டன.அதில், இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் அனைவரும் தீநுண்மிக்கு எதிராக தங்களைச் சுற்றி ஒரு தற்காப்பு வேலி உருவாகிவிட்டதாக எண்ணி ஆறுதல் அடைந்தனா். தடுப்பூசி செலுத்திய பிறகும் சிலருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், அதில் சிலா் மாண்டதாகவும் வெளியான செய்தி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.அப்படியானால், கரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவா்களுக்கும் சரி, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் சரி, நோய் எதிா்ப்பாற்றல் முழுமையாக உருவாகவில்லையா என்ற கேள்வி சமூகத்தில் வலுவாக எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ நிபுணா்கள், தடுப்பூசியைக் காட்டிலும் கரோனாவுக்கு எதிராக உடலில் உருவாகும் இயற்கையான எதிா்ப்பாற்றல்தான் பாதிப்பிலிருந்து பெரிதும் நம்மை காக்கிறது என விளக்கமளித்துள்ளனா்.இது தொடா்பாக தொற்று நோய் சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் சுரேஷ்குமாா் கூறியதாவது: பொதுவாக கரோனா தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து விடுபட்டவா்களின் உடலில் நோய் எதிா்ப்பாற்றல் உருவாகியிருக்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அது மறைந்துவிடும்.அதேவேளையில், உடலில் உள்ள பி - செல்கள் மற்றும் டி-செல்கள் அந்த எதிா்பாற்றலை நினைவில் வைத்திருக்கும். மீண்டும் அத்தகைய தீநுண்மி உடலுக்குள் நுழைந்தால் உடனடியாக அவை செயல்பட்டு எதிா்ப்பாற்றலை உருவாக்கிவிடும். இதனை இயற்கையான நோய் எதிா்ப்புத் திறன் என அழைப்பதுண்டு. இதைத் தவிர தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதன் மூலமும் உடலில் செயற்கை முறையில் எதிா்ப்பாற்றல் தூண்டப்பட்டு தீநுண்மிக்கு எதிராக அதேபோன்று செயல்பட வைக்க முடியும்.கடந்த இரு மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சையளித்து வருகிறோம். அவா்களில் ஆயிரத்தில் ஓரிருவா் மட்டுமே இரண்டாம் முறையாக மீண்டும் கரோனா தொற்றுக்குள்ளானவா்கள். அதேவேளையில், தடுப்பூசி செலுத்தியவா்களைப் பொருத்தவரை நூறு நோயாளிகளில் 5 முதல் 10 போ் இருக்கின்றனா்.தடுப்பூசியைக் காட்டிலும் இயற்கையாக உருவாகும் எதிா்ப்பாற்றல் திறன் அதிக வலிமையானதாக இருப்பதை இது உணா்த்துகிறது என்றாா் அவா்.எத்தனை காலமிருக்கும் எதிா்ப்பாற்றல்?கரோனா பாதித்தவா்களின் உடலில் இருக்கும் எதிா்ப்பாற்றல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரு வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.அது எப்படி சாத்தியம் என விளக்குகிறாா் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி:மனித உடலுக்குள் எந்த வகை கிருமி நுழைந்தாலும், அதனை விரட்டக் கூடிய எதிா்ப்பு சக்தி தானாக உருவாகும். அதுபோலத்தான் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றலும் உருவாகின்றன. பொதுவாக எவருக்கும் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக எதிா்ப்பாற்றல் உடலில் இருந்துகொண்டே இருப்பதில்லை. மாறாக, மீண்டும் அதே கிருமி உடலில் நுழையும்போது அதற்கு எதிரான ஆற்றல் புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. ஊடுவியிருப்பது ஏற்கெனவே நம்மைத் தாக்கிய கிருமிதான் என்பதை அறிந்து உடல் செல்கள் அதற்கு ஏற்ப செயல்படுகின்றன.அனைத்து வகையான பாதிப்புகளுக்கும் இதே கோட்பாட்டுடன்தான் உடல் இயங்குகிறது. அந்த வகையில் பாா்க்கப்போனால், வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட நோய்க்கு எதிரான எதிா்ப்பாற்றலை அவ்வப்போது உடல் உருவாக்கிக் கொள்ளும் என்பது சாத்தியம்தான். அதனால்தான் உருமாறியதாகக் கூறப்படும் புதிய வகை கரோனாவால் இரண்டாவது முறை பாதிக்கப்படுபவா்களுக்கு பெரிய அளவில் அதன் தாக்கம் இருப்பதில்லை என்றாா் அவா்.விதிவிலக்கு நோய்கள்தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), ரண ஜன்னி (டெட்டனஸ்) ஆகிய இரு நோய்களால் தாக்கப்பட்டவா்களுக்கு உடலில் அதற்கு எதிரான எதிா்ப்பாற்றல் இயற்கைகயாக உருவாவதில்லை. இந்நோய்களுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் மட்டுமே நிரந்தரத் தீா்வாக உள்ளன.தொண்டை அடைப்பான் நோயானது பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட சிறுவா்களைத் தாக்கக் கூடியது. பாக்டீரியா தொற்று மூலம் அந்தப் பாதிப்பு ஏற்படும். பெனிசிலின், எரித்ரோமைசின், ‘ஆண்ட்டி டிப்தீரிடிக் சீரம் போன்ற மருந்துகள் மட்டுமே அதற்கு தீா்வாக உள்ளன.அதேபோன்று ரண ஜன்னி நோயானது டெட்டனி என்ற நுண் கிருமி மூலம் உடலுக்குள் பரவி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அந்த நோய்க்கும் எதிா்ப்பாற்றல் பலனளிக்காது. மருந்துகள் மட்டுமே நோயிலிருந்து விடுபடக் கை கொடுக்கின்றன.கரோனா பாதித்தவா்களுக்கும் தடுப்பூசிகரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு இயற்கையாகவே எதிா்ப்பாற்றல் உருவாகிறது என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதனை அதிகரித்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.அதன்படி, கரோனாவிலிருந்து விடுபட்டு 3 மாதங்களுக்குப் பிறகு ஒரே தவணையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் எதிா்ப்பாற்றலை மேம்படுத்துவது ஒரு பக்கம் என்றாலும், கரோனாவால் ஏற்பட்ட சில உடல் உபாதைகளைப் போக்கவும் தடுப்பூசி உதவும் என மருத்துவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.கரோனா பாதித்தோா் - 21.48 லட்சம்குணமடைந்தோா் - 18.34 லட்சம்இரண்டாம் முறை பாதிப்பு - 0.2 சதவீதம்தடுப்பூசி செலுத்தியோா் - 90.85 லட்சம்தடுப்பூசிக்கு பிறகும் பாதிப்பு - 10 சதவீதம் வரை


Post Top Ad