தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 5/2021 , விளம்பர எண் 580 இல் 05.06.2021 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022 , பருவத்தில் சேருவதற்கான ( Qualifying examination for admission to Rashtriya Indian Military College , Dehradun , for January 2022 Term ) நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதியானது 10.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தேர்விற்கான எழுத்துத் தேர்வானது தற்போதைய COVID - 19 சூழ்நிலை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது . மேலும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.