பிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 11, 2021

பிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்!


பிரபல சமூகவலைதளமான பேஸ்புக் Read First என்ற வசதியை சோதனை முறையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி இனி பேஸ்புக்கில் பதிவிடப்படும் செய்தி லிங்குகளை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர முடியாது.

பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பையோ அல்லது படத்தையோ மட்டும் பார்த்துவிட்டு செய்தியை படிக்காமலேயே அதன் லிங்கை ஷேர் செய்ய முயன்றால், அந்த செய்தியை முழுமையாக படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்ற பாப்- அப் திரையில் தோன்றும்.

பயனர்களை முழுமையாக ஒரு செய்தியை அறிந்து கொள்ள வைக்கவும், போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும் இந்த வசதி பயன்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post Top Ad