கல்வித்துறையின் துரித நடவடிக்கைக்கு IAS அதிகாரி அவசியம் தேவை - TNTA ஆசிரியர் சங்கம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, May 20, 2021

கல்வித்துறையின் துரித நடவடிக்கைக்கு IAS அதிகாரி அவசியம் தேவை - TNTA ஆசிரியர் சங்கம்


கல்வித்துறையின் துரித நடவடிக்கைக்கு IAS அதிகாரி அவசியம் தேவை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சீரமைப்பு காலத்தின் கட்டாயம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
 
        ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கல்வி வழங்குவதற்காக 1824 ல் போர்டு ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் தொடங்கப்பட்டது அதன்பிறகு 1854 ல் பள்ளிக்கல்வி இயக்கம் (DPI) தொடங்கியபிறகு 1960-70 களில் கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு இருந்தகாலம் பொற்காலம் என்றால் அது மிகையில்லை.1985 வரை எவ்விதமாற்றமின்றி இயங்கிவந்தப் பள்ளிக்கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவந்து 1985-86 களில் மாவட்டக்கல்வி அலுவலர்,முதன்மைக்கல்வி அலுவலர்கள் தேர்வின்மூலம் நேரடி நியமனம் செய்யபட்டார்கள். அதன்பிறகு ஆசிரியர்கள் உயர் பதவிக்கு வருவது குறைந்து தற்போது 38 மாவட்டங்களில் ஆசிரியர்களாக இருந்து படிப்படியாக பதவிஉயர்வுமூலம் (CEO) முதன்மைக்கல்வி அலுவலகர்களாக இருப்பவர்கள் தற்போது 5 க்கும் குறைவே.
 
            ஆசிரியர்கள் Ceo வாக வருவதே பெரும்பாடாக உள்ளநிலையில் மேலும் எப்படி ஊயர்பதவிக்கு வரமுடியும் ? கால் நூற்றாண்டு காலமாக இணைஇயக்குநராகவோ இயக்குநராகவோ ஆசிரியர்கள் வரமுடியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க ஆசிரியர் உரிமை பறிக்கப்படுகிறது பாரம்பரியமிக்கப் பதவி பறிபோகிறது எனக்கூச்சலிடுவது வேடிக்கையாக உள்ளது. அதுகூடபரவாயில்லை. எவ்வித கல்வி அனுபவமின்றி நேரிடைத்தேர்வின் மூலம் வந்து பதவி உயர்வின் உயர்பதவிக்கு வந்துவிடுகிறார்கள். இதனால் கல்வித்துறையினை மேம்படுத்தமுடியாமல் சாதி,அரசியல் மற்றும் சில சங்கத் தலைவர்களின் பிடியில் சிக்கி பல்வேறு முறைகேடுகள் நடந்ததை நாடே அறியும். இதனால் ஆசிரியர்,தலைமையாசிரியர் பதவி உயர்வு, பணபலன்கள் கிடைக்காமல் நீதிமன்றத்தில் 3000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏராளமான ஆசிரியர்கள் பாதிப்பில் உள்ளார்கள்.மேலும் 1996 முன்னரே ஆசிரியர்கள் உயர்பதவிக்கு வருவதை தடுக்கப்பட்டதை அப்போதையத் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மைநிலைமை இந்நிலையினையறிந்து மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் எடுத்த அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து கல்விச் சீர்த்திருத்தத்தைக் கொண்டுவருவதை வரவேற்காமல் எதிர்ப்பு தெரிவிப்பது விந்தையாகவுள்ளது. 
 
   எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பதையே சிலர் வாடிக்கையாகவேவைத்துள்ளார்கள். இனி IAS அதிகாரியின் கட்டுபாட்டில் துரித நடவடிக்கை மூலம் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு ஏழை,எளியோர் படிக்கும் அரசுப்பள்ளிகள் தரம் உயரும் என்பதில் வியப்பில்லை. மேலும் கல்விச்சீர்த்திருத்தத்தினை மேற்கொள்ளும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.மேலும் பணிகள் விரைவாக நடக்கும்பொருட்டு மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களிடம் குவிந்துள்ள வேலைப்பளுவினை குறைக்கும் வகையில் ஏற்கனவே 2010 ல் கொண்டுவரப்பட்டக் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவர் (SSA) பணியினை மீண்டும் வழங்கிடப் பரிசீலிக்கவேண்டுகின்றோம். கூடுதல் Ceo விற்கு சமக்ரசிக்ஷா மற்றும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை மேற்பார்வையிடும் பணியினை வழங்கிடும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
 
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

Post Top Ad