வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறும்போது ஆதார் அட்டையில் ஆன்லைனிலேயே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது கடினமாக இருக்கிறது. இனி மக்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே தங்கள் முகவரியைப் புதுப்பிக்க முடியும்.
இதற்காக ஆதார் மையத்திற்கு செல்ல தேவையில்லை. ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற விரும்பினால், UIDAI இன் அதிகாரப்பூர்வ தளமான https://uidai.gov.in/ -க்கு செல்லவும். இங்கே Address Request (Online)-ஐ கிளிக் செய்யவும். இதைச் செய்தபின் புதிய விண்டோ திறக்கும். Update Address என்ற ஆப்ஷனை இங்கே கிளிக் செய்யவும். பின்னர் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். இதற்குப் பிறகு, அங்கு கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, வாடகை ஒப்பந்தத்தின் PDF நகல் பதிவேற்றப்பட வேண்டும். உங்கள் மொபைலில் OTP வரும். OTP ஐ நிரப்பிய பின், Submit பொத்தானை அழுத்தவும். இதைச் செய்வதன் மூலம் சில நாட்களுக்குப் பிறகு உங்கள் ஆதாரில் முகவரி மாறும்.