பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க நடவடிக்கை: கிராம அளவில் குழு அமைக்க திட்டம்


பல்வேறு காரணங்களால் பள்ளிகளில் இடையில் படிப்பை நிறுத்திய குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுள்ளது. பொருளாதார நிலை, வாழ்வாதாரம் இல்லாமல் ஏழ்மை நிலை, குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தும் நிலை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இந்த இடைநிற்றல் உள்ளது. இதையடுத்து, பள்ளி இடைநிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கிராம அளவில் குழுக்களை நியமித்து பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் மத்திய அரசு கேட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதற்கு பிந்தைய காலத்தை அளவீடாக கொண்டு பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றல் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் எத்தனை பேர். அவர்கள் தற்போது யாருடைய பராமரிப்பில் உள்ளனர் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இந்த குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை அரசு ஆய்வு செய்து கேரள மாநிலத்தைப்போல் அவர்களுக்கு இலவச கல்வி, சிறப்பு நிதி உதவி ஆகியவற்றை செய்து தரவேண்டும் என்றார்.கொரோனா தொற்று காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை அரசு கவனித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர் ஆலிவர் தெரிவித்துள்ளார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive