அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் முறையாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்- உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி


அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் யுஜிசிதகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில்முறையாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்என்று உயர் கல்வித்துறை அமைச்சர்பொன்முடி தெரிவித்துள்ளார் .
இதுகுறித்துச் சென்னையில்இன்று செய்தியாளர்களிடம் பொன்முடி


அளித்த பேட்டி:

'💢'புதிய கல்விக்கொள்கை குறித்து ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் அது மாநில உரிமைகளில்தலையிடுவது. அதை ஆரம்பத்தில் இருந்தேநாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே புதியகல்விக் கொள்கை குறித்து ஒருகுழுவை நியமித்தார். நானும் பள்ளிக் கல்வித்துறைஅமைச்சராக இருந்த தங்கம் தென்னரசும்சேர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி அதில்உள்ள குறைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

💢அந்த அடிப்படையில்நிச்சயமாகப் புதிய கல்விக் கொள்கைதமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது. முதல்வர்ஆலோசனையின்படி உயர் கல்வித்துறை அமைச்சராகநானும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகஅன்பில் மகேஸ் பொய்யாமொழியும் துறைரீதியாக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

💢அரசுக் கல்லூரிகளில்பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று தவறுதலான முறையில்கடந்த ஆட்சிக் காலங்களில் வாக்குறுதிஅளிக்கப்பட்டது. அவை எதையும் நம்பிசம்பந்தப்பட்டவர்கள் ஏமாற வேண்டாம். முதல்வருடன்கலந்து பேசி, உயர் கல்வித்துறைச் செயலருடன் ஆலோசித்து, முறையாகப் பணி நிரந்தரம் செய்யஉள்ளோம்.

💢யுஜிசி தகுதிமற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். இதில் தரகர்களின் குறுக்கீட்டையாரும் நம்ப வேண்டாம். இந்தவிவகாரத்தில் தனிப்பட்ட வகையில் பணம் பெறுபவர்கள்நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்''.

இவ்வாறுஅமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive