இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் ஜூன் 7 முதல் www.incometaxgov.in என்ற புதிய இணையதளம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை இயங்காது என்றும், பழைய போர்ட்டலில் இருந்து புதிய போர்ட்டலுக்கு மாற்றம் பணிகள் 6 நாட்களில் நிறைவடைந்து ஜூன் 7 முதல் புதிய இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய வலைதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்ட்டல் மாற்றம் செய்யும் பணிகள் இருப்பதால் புகார்கள், விசாரணைகளுக்கான தீர்வுகளின் தேதியை ஜூன் 10க்கும் பிறகு நிர்ணயித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு ஏற்ப வருமான வரி தாக்குல் செய்வதற்கான தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 7ஆம் தேதிக்கு பிறகு புதிய இணையதளத்தில் பயனாளர்கள் எளிமையான முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்