வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி ஆணை எப்போது கிடைக்கும் என்ற, கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள், 2019 டிசம்பரில் துவங்கின. இதற்கு, 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, 2020 மார்ச்சில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, தொடர் நடவடிக்கைகள் முடங்கின.பின், 2021 ஜனவரி முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன. பிப்., முதல் வாரத்தில் தரவரிசை அடிப்படையிலான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு காரணமாக, அடுத்தகட்ட பணிகள் முடங்கின. தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தற்போதாவது இவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படுமா என்ற, கேள்வி எழுந்து உள்ளது. புதிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என, தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.