தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்கு 7,500 வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மளிகை பொருட்கள்:
தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் பொழுது சில தளர்வுகள் மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மளிகை, காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றினை மக்கள் வீடுகளுக்கு நேரடியாக வண்டிகள் மூலம் சென்று விற்பனை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்கு சென்னை மாநகராட்சி புதிய வழிமுறை ஒன்றை கையாண்டுள்ளது. அதன்படி மக்கள் தங்களது அருகே உள்ள மளிகை கடைகளுக்கு போன் மூலமாகவோ அல்லது நேரில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கூறி விட வேண்டும் என்றும் அதனை வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் இல்லத்திற்கு நேரடியாக வந்து விநியோகம் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் கூடவோ, அல்லது கடையை முழுமையாக திறக்கவும் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி சுமார் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து கடை வியாபாரிகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சென்னையை போல் அனைத்து நகராட்சி மாநகராட்சிகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருகிறது.