வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் புயல் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், தமிழக கடலோர பகுதி, வங்க கடல் பகுதிகளுக்கு 22, 23 ஆகிய தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.