கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகளை வெளியிட்டு மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு வெளியட்டுள்ளது.
வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்,
எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 077 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதித்த 31 லட்சத்து 29 ஆயிரத்து 878 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.