சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் 1.70 கோடி கொரோனா நிதி!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் சிரமபட்டனர்...அவர்களுக்கு உதவுவதற்காக சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் தன் சொந்த விருப்பத்தின் பேரில் பாதிப்பு அடைந்த சேலம் மாவட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு தங்களால் முடிந்த அளவு எவ்வளவு நிதி அளிக்கும் முடியுமோ அதை பள்ளிவாரியாக COVID -19 SALEM DISTRICT என்ற பெயரில் டிடி or செக் எடுத்து அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.நிதி அளிப்பது பற்றி யாரையும் கட்டாயபடுத்த கூடாது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.இதனை அன்போடு ஏற்றுக்கொண்டு அனைவரும் தங்களால் முடிந்த 1000,2000,5000,10000,20000, 25000,50000(ஒரு சிலர்)....மன நெகிழ்வோடு அளித்தனர்.மொத்தமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒரு கோடியே எழுபது லட்சம் (1.70 கோடி) நிதிக்கான வங்கி வரைவோலையினை இன்று மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் திரு.செ.கார்மேகம் ஐயா மற்றும் மாண்புமிகு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.S.R.பார்த்திபன் ஐயா அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி ஐயா அவர்களிடம் சேலம் மாவட்ட பள்ளிகல்வித்துறை சார்பாக ம வழங்கபட்டது.மேலும் சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ள திரு செ.கார்மேகம் ஐயா அவர்கள் ஏற்கனவே சேலம் மாவட்ட CEO வாக பணியாற்றிவுள்ளார். அவர்களின் சீரிய முயற்சியாலும்,நம் மதிப்பிற்குரிய சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி ஐயா அவர்களின் முயற்சியாலும் நம் சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையானது மக்கள் மனதில் உயர்ந்த இடம்பிடித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive