EL சரண்டர்மே மாதம் முதல் வழங்கலாம் தெளிவுரை : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 4, 2021

EL சரண்டர்மே மாதம் முதல் வழங்கலாம் தெளிவுரை :




கடந்த ஆண்டு போடப்பட்ட அரசாணை GO (ms) No:48 நாள்: 27.4. 2020 ல் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக 27.4.2020 முதல் 26.4 2021 வரை ஓராண்டு காலம் தடைசெய்யப்பட்ட காலமாக (Suspended for a period of one year from this 27.4.2020) என குறிப்பிடப்பட்டு இருப்பதால் அந்த காலத்திற்கு சரண்டர் வழங்க இயலாது எனவும் ....



1.5 .2021 க்கு பிறகு சரண்டர் செய்யும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் அந்த ஓராண்டை கணக்கில் சேர்க்காமல் விட்டு விட்டு வழக்கம்போல் 15 (அ) 30 நாட்களுக்கு அவரவர் ஒப்படைப்பு மாதத்தில் சரண் செய்து அதற்குரிய பணப்பலனை பெற்றுக் கொள்ளலாம் என்றும்...



 தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை: 12 நாள்:08.02.2021அன்று போடப்பட்டுள்ள அரசாணையின்படி (They shall be cancelled and earned leave re - credited to the leave account of the Govt.Servant. ) செயல்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.



 கடந்த ஆண்டு *2020 ஏப்ரல் மாதத்தில் சரண் விடுப்பு செய்து பணப்பலன் பெற முடியாத ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இவ்வாண்டு 28.04.2021 க்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சரண்டரை ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெற முடியுமா? என்று கேட்டதற்கு*.... 



இது குறித்து தெளிவுரை கேட்டு மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு தபால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதற்கான தெளிவுரை வந்த பின்பு தான் அது குறித்து முடிவு செய்ய முடியும் எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.



எனவே மே மாதம் முதல் அவரவர் EL சரண்டர் செய்யும் மாதத்தில் கொரோனா கால நிறுத்திவைப்பு ஓராண்டை (27.4.20 - 26.4.21) எந்தக் கணக்கீட்டிலும் சேர்க்காமல் அதற்கு முந்தைய கணக்கின் படி ஒப்படைப்பு செய்யலாம் என TNPTF மாநில அமைப்பு தெளிவுரை வழங்கி உள்ளது. அனைவரும் மே மாதத்தில் சரண்டர் கோர முடியாது. 



ஆசிரியர்கள் இதனடிப்படையில் தங்கள் EL சரண்டர் ஒப்படைப்பு விண்ணப்பத்தினை சார்ந்த மாதத்தில் அளித்து பணபலனாக பெற்றுக் கொள்ளலாம்.





மே மாதம் முதல் EL சரண்டர் விண்ணப்பம் அலுவலகத்தில் அளிக்கலாம். (27.4.20 - 26.4.21) ஓராண்டை கணக்கில் சேர்க்காமல் கடைசியாக நீங்கள் ஒப்படைப்பு செய்ததை வைத்து நாட்கள் இறுதி செய்யவும்.

எ.கா

ஏப்ரல் 2020க்கு பிறகு 15 நாள் ஒப்படைப்பு செய்திருக்க வேண்டியவர்கள் (அதாவது 2019ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை EL ஒப்படைப்பு செய்யாதவர்கள்) தற்போது 15 நாட்களே ஒப்படைக்க முடியும். 



ஏப்ரல் 2020க்கு பிறகு 30 நாள் சரண்டர் செய்திருக்க வேண்டியவர்கள் (அதாவது 2018 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை EL ஒப்படைப்பு செய்யாதவர்கள்) தற்போது 30 நாட்கள் சரண்டர் செய்யலாம்.


Post Top Ad