கொரோனா நோய்த்தொற்று தடுப்பு - தன்னார்வலர்களின் பணிகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, May 10, 2021

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு - தன்னார்வலர்களின் பணிகள்





1. முகக்கவசம் , தனிநபர் இடைவெளியினை வலியறுத்தி காவல்துறை , சுகாதாரத்துறை , வருவாய்த்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுதல் 
2. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் விபரங்கள் சேகரித்தல் 

3. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் கண்காணித்தல் பணியை மேற்கொள்ளுதல் 

4. வீட்டுதனிமையில் உள்ளவர்களுக்கு நாள்தோறும் தேவையான உதவிகளை செய்தல் மற்றும் நம்பிக்கை ஊட்டும் பணிகளை மேற்கொள்ளல் 

5. காய்ச்சல் முகாம்களில் பொதுமக்களை கலந்துகொள்ள செய்தல் , அவர்களை வரிசைப்படுத்துதல் , பெயர்களை பதிவுசெய்தல் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல் 

6. தடுப்பூசி முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி முகாமில் பங்கேற்க செய்தல் 

7. நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் பீதி அடையாமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதல்களை வழங்குதல் 

8. நோய்த்தொற்று பரிசோதனை மையத்தில் ( Screening Centre ) சுகாதாரத்துறையினருக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல் 

9. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி தேவையெனில் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தால் 

10. அரசு கோவிட் கேர் சென்டரில் தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல் 

11. இறுதி சடங்கிற்கு உண்டான வழிகாட்டுதல்களை வழங்குதல் 

12. அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை முறையாக கடைபிடிக்காமல் இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தல் 

13. ஊரடங்கு காலத்தில் வறுமைநிலையில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை தன்னார்வ அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்தல் 

14. தன்னார்வ அமைப்புகள் மூலம் உதவிகள் ஏதேனும் வழங்கப்பட்டால் அதனை முறையாக வழங்குவதை உறுதிசெய்தல் மற்றும் அதன் விபரம் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தன்னார்வ ஒருங்கிணைப்பாளருக்கு உடனுக்குடன் தெரிவித்தால் 

15. மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவ்வப்போது தெரிவிக்கப்படும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுதல் 


Post Top Ad