வருமான வரி செலுத்த காலக்கெடு நீட்டிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, May 1, 2021

வருமான வரி செலுத்த காலக்கெடு நீட்டிப்புமத்திய அரசு வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்:நாட்டில் தொடர்ந்து கொரோனாவால் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தினை அறிவித்து வருகிறது. அதில் கடந்த ஆண்டு தொழிற்துறையில் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலர் தங்களது வேலையினை இழந்தனர். இப்படியாக இருக்க, பலரும் வருமான வரி கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். வருமான வரி என்பது ஒருவர் தான் சம்பாரிக்கும் பணத்தில் குறிப்பிட்ட ஒரு அளவு பணத்தினை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். இந்த வரி ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்தாற்போல மாறும். இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்களது வேலையினை இழந்த காரணத்தாலும், அதேபோல் பல நிறுவனங்களுக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும் மத்திய அரசு வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து இருந்தது. தற்போது மீண்டும் இந்த கால அவகாசத்தினை வரும் மே மாதம் 31 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. ஏப்ரல் மாதத்துடன் இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

Post Top Ad