கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக , இந்தியா முழுவ தும் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன . இந்நிலையில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர் பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடனும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் . இதில் , புதிய கல்விக் கொள்கையில் ஆன்லைன் வழிக்கல்வியை ஊக்கப்படுத் துவது , ஆன்லைன் கல்வியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.