பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக படிக்க அழைப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, May 2, 2021

பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக படிக்க அழைப்பு.
தர்மபுரி, நல்லானூர் ஜெயம் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக பயில, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தருமம் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டம், நல்லானூரில், ஜெயம் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட தருமம் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு சேவை செய்யும் நோக்கில், கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, முற்றிலும் இலவச கல்வி அளிக்க, 25 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ECE, EEE, Mech., Cvil, Computer Science ஆகிய ஐந்து பிரிவு பாடப்பிரிவுகளுக்கும், தலா, ஐந்து பேர் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், பெற்றோரை இழந்து வறுமையில் உள்ளவர்கள், மேல் படிப்பு படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், மேற்படிப்பு படிக்க வசதியில்லாதவர்கள், கிராமப்புற அடித்தட்டு நிலையில் உள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதி வாய்ந்த ஏழை, எளிய மாணவர்கள், தருமம் அறக்கட்டளை நிர்வாகிகளை, 99441 70966, 98429 59971, 95970 12697 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post Top Ad