முதல்வருக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து
தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆன்லைன் வழிக் கூட்டமானது சங்கத்தின் மாநில தலைவர் தலைமையில் நேற்று (புதன்) இரவு நடந்தது.
அதில் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலன்கள், உரிமைகளை மாண்புமிகு. தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக புதிய அரசு பதவியேற்றதும் காவல்துறை அனுமதி பெற்று தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் இருந்து சமூக இடைவெளியுடன் அமைதிப் பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment