4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு


முதல்வர் ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. 

இந்த நிலையில் முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உள்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் உதயசந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், சமூக நலம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அனு ஜார்ஜ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து, நிதி, உணவு, சுகாதாரம்,உள்ளிட்ட துறைகள் உமாநாத்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வேளாண் உள்ளிட்ட துறைகள் சண்முகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.















0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive