கொரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் திட்டம் முதல்வர் இன்று துவங்கி வைக்கிறார்- இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்


தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் கொரோனாநிவாரண நிதி, பெண்களுக்கு கட்டணமில்லாபேருந்து பயணம், பால் விலைகுறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய அரசாணைகளில் அவர்கையெழுத்திட்டார். இதில் கொரோனா நிவாரணநிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்றுஅறிவித்திருந்தார்.
அதில், கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும்நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப்போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசிகுடும்ப


அட்டை வைத்துள்ள குடும்பங்கள்அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில்4,000 ரூபாய் வழங்கப்படும். சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய்செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரணதொகை முதல் தவணையாக மேமாதத்திலேயே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படிஇந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின்இன்று தொங்கி வைக்கிறார். கொரோனாதொற்று காரணமாக உணவுத்துறை அதிகாரிகள்இன்று முதல் 3 நாட்கள் வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்கதிட்டமிட்டுள்ளனர். இந்த டோக்கனில் கடையின்எண், பெயர், அட்டைத்தாரர் பெயர், தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நாள் ஒன்றுக்கு 200 பேருக்குகொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த டோக்கனை வழங்கி 15-ம்தேதி முதல் ரேஷன் கடைகளில்பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனாவிதிமுறைகளை பின்பற்றி கொரோனா நிவாரண தொகையைபெற்றுக் கொள்ள தமிழக அரசுஅறிவுறுத்தி உள்ளது.








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive