வி.ஐ.டி., சேர்க்கை நுழைவு தேர்வு வரும் 20க்குள் விண்ணப்பிக்கலாம்





வி.ஐ.டி., மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில், மத்திய அரசின் சீர்மிகு அந்தஸ்து பெற்ற, வி.ஐ.டி., கல்வி நிறுவனத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலுார் 'இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' என்ற வி.ஐ.டி., நிறுவனம், வேலுார், சென்னை, ஆந்திரா மற்றும் போபால் ஆகிய இடங்களில், நிகர் நிலை பல்கலையாக செயல்படுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த கல்வி நிறுவனத்தின் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.



இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு, 'ஆன்லைன்' வழியில், வரும், 28, 29, 31ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, 2020 நவம்பரில் துவக்கப்பட்டது. விண்ணப்பிக்க, 20ம் தேதி கடைசி நாள். நுழைவு தேர்வு விண்ணப்பம், கல்வி நிறுவனத்தில் இடம் பெற்றுள்ள படிப்பு விபரங்கள், மாணவர் சேர்க்கை நடவடிக்கை போன்றவை குறித்து, www.vit.ac.in என்ற இணையதளத்தில் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive