அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு



அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தநிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பள விகிதம் நிர்ணயிப்பது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வக்கீல் இரா.நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித்தரத்தினை உயர்த்தவும், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார். அப்போது, மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் ஆஜராகி, அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பினை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive