கரோனா தொற்றுக்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 2, 2021

கரோனா தொற்றுக்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு


கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டஅரசு பள்ளிதலைமை ஆசிரியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டைமாவட்டம், ஆற்காடு அடுத்த கலவையைச்சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவரது மனைவி சுந்தரி(56). இவர் திமிரி அடுத்த அல்லாளச்சேரிஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். கடந்த சில நாட்களுக்குமுன்பு இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, திமிரி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு நோய்த்தொற்று உறுதியாகவில்லை. இதனால், அவர் நிம்மதியடைந்தவீடு திரும்பினார். இந்நிலையில், நேற்றிரவு சுந்தரிக்கு திடீரென மூச்சுத் திணறல்ஏற்பட்டது.

உடனே, அவரது குடும்பத்தார் சுந்தரியைவாலாஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிடிஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு கரோனாதொற்று உறுதியானது. அப்போது, அவரது உடலில் ஆக்சிஜன்அளவு மிகவும் குறைந்ததால் உடனடியாகவாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே சுந்தரிபரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரதுஉடல் கரோனா வழிகாட்டுதல்படி, கலவைமயானத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. கரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை ஆசிரியை சுந்தரிக்கு, உதயகுமார், மோகன்குமார் என இரு மகன்கள்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post Top Ad