சிபிஎஸ்இ +2 மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய குழு அமைப்பு..!


சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய 12 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிர்வாகம் அமைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால்,பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.இந்த நிலையில்,உச்சநீதிமன்ற நீதிபதிகள்,மத்திய அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால்,எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து 3 வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறைந்தது 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் தினமும் இது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் இந்த ஆலோசனை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய 12 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிர்வாகம் அமைத்துள்ளது.

மேலும்,அந்தக் குழுவிடம் 10 நாட்களுக்குள் மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறும் சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive