டிஜிட்டல் பி.வி.சி ஆதார் அட்டை - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி!


ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். ஆதார் அட்டை அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். வங்கி பரிவர்த்தனைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். 

புதிய தொலைபேசி இணைப்பைப் பெறுவது முதல் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வது வரை அனைத்தும் இப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் விவரங்களை சரிபார்க்க ஆதார் கேட்கப்படும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம்.

உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தி கொள்ள முடியும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆன்லைனில் மாற்றி கொள்ளலாம். 

இந்த நிலையில், உங்கள் ஆதார் அட்டைக்கு புதிய தோற்றத்தை அளித்துள்ள UIDAI, பி.வி.சி ஆதார் அட்டை என்று அழைக்கப்படும் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

முந்தைய ஆதார் அச்சிடப்பட்ட வடிவத்தில் மட்டுமே கிடைத்தது, ஆனால் இப்போது புதிய மாற்றத்தின் கீழ், டிஜிட்டல் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது, இது எளிதாக எடுத்து செல்ல உதவுகிறது.

மேலும் இதில் ஒரே ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரையும் பதிவு செய்ய முடியும். இதற்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்து பணத்தை காட்டினால் உங்கள் பி.வி.சி ஆதார் அட்டை உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பி.வி.சி ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது?

* UIDAI-ன் போர்ட்டலில் resident.uidai.gov.in உள்நுழையவும்.

* my aadhaar -> order aadhaar pvc card என்பதை கிளிக் செய்யவும்.

* இப்போது தோன்றும் புதிய வலைத்தள பக்கத்தில் ஆதார் அட்டை எண், பதிவு எண் மற்றும் virtual அடையாள எண்ணை கவனமாக உள்ளிடவும்.

* பின்னர் கேப்சாவை உள்ளிட்டு sent OTP என்பதை கிளிக் செய்யவும், பின்னர் உங்கள் தொலைபேசிக்கு வந்த நம்பரை என்டர் செய்யவும்.

* உங்கள் அட்டையை ஆர்டர் செய்ய குறைந்தபட்சம் ரூ .50 செலுத்தவும். உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரிக்கு கார்டு வந்துவிடும்.

உங்களுடைய மொபைல் எண் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை எனில், நீங்கள் செய்ய வேண்டியது :

* https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

* உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்.

* அடுத்து உங்கள் security code-ஐ உள்ளிடவும். மேலும் 'my mobile not registered' என்பதைக் கிளிக் செய்க.

* உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு 'send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

* உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு OTP வரும். பின்னர் OTP ஐ உள்ளிடவும்.

* இப்போது நீங்கள் ரூ. 50 செலுத்தினால் நிறைவடைந்துவிடும். 2 வாரங்களுக்குள் நீங்கள் பதிவு செய்துள்ள முகவரிக்கு உங்கள் பி.வி.சி ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படும்.

பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி


கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎஃப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎஃப்ஓ) அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கொரோனா தொற்று சமயத்தில் இபிஎஃப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் (PMGKY) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான திருத்தத்தை அரசாணை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952-ல், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்தது.

இந்த விதிமுறையின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது இபிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக இபிஎஃப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம். குறைவான தொகைக்கும், உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும்.

இந்த கொரோனா கால முன்பணம், தொற்று காலத்தில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு குறிப்பாக ரூ.15,000-க்கும் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. தற்போது, வரை இபிஎஃப்ஓ 76.31 லட்சம் கொரோனா கால முன்பண கோரிக்கைகளை ஏற்று, உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.18,698.15 கோடி விநியோகித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை சமயத்தில், 'மியுகோமைகோசிஸ்' அதிகமாக பரவும் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கலான நேரத்தில், உறுப்பினர்களின் நிதி தேவைகளை தீர்க்க, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இபிஎஃப்ஓ முயற்சிக்கிறது.

ஏற்கெனவே முதல் முன்பணம் எடுத்த இபிஎஃப் உறுப்பினர்கள், தற்போது, 2வது முறையாக முன்பணம் எடுக்கலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள், முதல் முன்பணம் எடுத்ததற்கான விதிமுறைகளை போன்றதுதான்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது: ஜூன் 01 முதல் ஜூன் 20 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 01.06.2021 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லி, விக்யான் பவனில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க மத்தியக் கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆர்.சி.மீனா இன்று அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும்/ செயலாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ''ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற நாளை (ஜூன் 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 20 ஆகும்.

ஆசிரியர்கள் கூடுதலாகப் பங்கேற்கும் வகையில் மாநிலங்கள் விருது குறித்த அறிவிப்பைப் பரவலாக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கும் தேசிய நல்லாசிரியர் விருதை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கியது. கரோனா காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்களுக்கு எப்போது தேர்வு ? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்.



பிளஸ் 2 மாணவர்களின் எதிர்காலம் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல் நலனும், உயிரும் முக்கியம் என்று கருதுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொற்றுப் பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்துத் திருச்சியில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், கல்வி ஆண்டு முடிந்துவிட்டதால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டுள்ளீர்கள். கரோனா நோய் நம் அனைவருக்குமே புதிதுதான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசின் அனைத்துத் துறையினருக்குமே நடைமுறைச் சிக்கல் உள்ளது. கரோனா காலமாக இருப்பதால் குறிப்பிட்ட காலம் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் எவ்வளவு விரைவாகக் குறைகிறதோ, அதற்கேற்ப விரைவாக பிளஸ் 2 தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், மாணவர்களின் எதிர்காலம் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல் நலனும், உயிரும் முக்கியம் என்று கருதுகிறோம்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில் குழுவின் அறிக்கை வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளை அனைவரும் பார்ப்பீர்கள்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


5,300 பேர் நியமனம் - மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்க கோரிக்கை!



உதவி பொறியாளர் உட்பட, 5,300 பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க விண்ணப்பம் பெற்ற நிலையில், தேர்வு நடத்தாததால், மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்குமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், 600 உதவி பொறியாளர்; 500 இளநிலை உதவியாளர் கணக்கு; 1,300 கணக்கீட்டாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 பிப்., மார்ச் மாதங்களில் விண்ணப்பங்கள் பெற்றது. ஊரடங்கால், அந்த ஆண்டில் தேர்வு நடத்தவில்லை.நடப்பாண்டு துவக்கத்தில், 2,900 கள உதவியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா பரவலின் இரண்டாம் அலையால், மேற்கண்ட பதவிகளுக்கு, நடப்பாண்டு துவக்கத்தில் நடக்க இருந்த தேர்வை, மின் வாரியம் ஒத்திவைத்தது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், முந்தைய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட, 5,300 பதவிகளுக்கு தேர்வு நடத்தி, ஆட்கள் நியமிக்கப்படுவரா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில், அவகாசம் அளிக்குக்குமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


பாஸ்டேக் அட்டை: ஆணையம் எச்சரிக்கை!


சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, ரொக்க கட்டணத்திற்கு பதிலாக, மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாஸ்டேக் மின்னணு அட்டைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், www.ihmcl.co.in என்ற, இணையதளம் வாயிலாகவும், 'my Fastag' மொபைல் ஆப் வாயிலாகவும் வழங்கி வருகிறது. பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பண வங்கிகள் வாயிலாகவும், பாஸ்டேக் அட்டைகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கென கார் உள்ளிட்ட, இலகு ரக வாகனங்களுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்டேக் மின்னணு அட்டையை, வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச்சாவடிகளை கடக்கும் போது, அங்குள்ள கருவி வாயிலாக, சுங்க கட்டணம், வங்கி கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இது தொடர்பான குறுஞ்செய்தி, பதிவு செய்யப்பட்ட மொபைல்போன் எண்ணுக்கு வந்து சேரும். இந்நிலையில், 'ஆன்லைன்' வாயிலாக, பாஸ்டேக் அட்டைகள் வழங்கப்படுவதாக, அதிகளவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதை நம்பி பலரும், ஆன்லைனில் பாஸ்டேக் வாங்க, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார்கள் வருகின்றன. இதையடுத்து, 'ஆன்லைன் வாயிலாக, யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான விபரங்களை, ஆணையத்தின், '1033' என்ற, அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், etc.nodal@ihmcl.com. என்ற, மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொழில்நுட்பக் கல்லூரித் தேர்வுகள்; தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன், ஜூலை மாதத்தில் அரியர் தேர்வுகள்: உயர் கல்வித்துறை அறிவிப்பு.


பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வெழுதலாம் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, உயர் கல்வித்துறை இன்று (மே 31) வெளியிட்ட அறிக்கை:
"உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் அறிவுரைப்படி, பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மேற்படி தேர்வுகள் டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது. மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63% ஆகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேற்படி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வெழுதலாம். இதற்கான தேர்வுக் கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம். நடப்புப் பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணவர்களுக்கான (அரியர் தேர்வு உட்பட) தேர்வுகள் 14-06-2021 முதல் 14-07-2021 வரை நடைபெறும். மாணவர்கள் இதற்கான தேர்வுக் கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம்". இவ்வாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கரோனாவால் பள்ளியை மறந்த மாணவர்களுக்கு வீடுகளின் சுவர்கள் மூலம் கல்வி போதிக்கும் இளைஞர்கள்


கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன. இதனால், இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் இணையம், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பள்ளியை மறந்துவிட்டனர் என்று பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிமாணவர்கள் சுமார் 100 பேருக்கு,தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள்,வார்த்தைகள் உள்ளிட்டவற்றைவீடுகளின் சுவர்களில்எழுதி ஞாபகப்படுத்துகின்றனர். அவர்கள் வீதிகள்தோறும் சென்று,வீடுகளின் சுவர்களில் தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், வாய்ப்பாடு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வார்த்தைகள், தலைவர்களின் பொன்மொழிகள், திருக்குறள் உள்ளிட்டவற்றை எழுதி, பள்ளி மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகின்றனர்.
மேலும், கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் சுவர்களில் எழுதி, கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இளைஞர்களின் இந்த செயலை, பெற்றோர், பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்

அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் தள்ளிவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலர் (பொறுப்பு) இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து ஆய்வாளர் (கிரேடு-1) பணிக்கான நேர்முகத் தேர்வு ஜுன் 8 முதல் 11-ம் தேதிவரை தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. கரோனா தொற்றுகாரணமாக அத்தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின் னர் அறிவிக்கப்படும்.
அதேபோல, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உதவி மின் ஆய்வாளர், உதவிப் பொறியாளர் (மின்சாரம்), தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், ஜுன் 22 முதல் 30-ம்தேதி வரை நடைபெறுவதாக இருந்த, அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. ஏற்கெனவே நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளில் முடிவு வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் ஜுலை 20-ம் தேதி வெளியிடப்படும். மே பருவ துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2020 - 21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் – சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 31.05.2021





பொருள் : 2020 - 21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் – சார்ந்து,

பார்வை:
1. அரசாணை நிலை (எண்) 48, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள். 25.02.2021
2. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009
பார்வை (1)ல் காணும் அரசாணையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பெட்ரிருலேசன் பள்ளிகள் மற்றும் கயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மானராக்கர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பார்வை (இல் காணும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரியைச்
சட்டம், 2009 பிரிவு-16ல் "எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்தவொரு மாணவளையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்க்கியது வேண்டும். எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளிபெற்றக் கூடாது" என தெரியிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளில் ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி பள்ளிகளில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவயர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், கோவிட் - 19, பெருந்தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே, தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிமிக்கப்படும். மேலும் மாணாக்கர்களுக்கான விலைவில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் இதா நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.


பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செமஸ்டர் ரிசல்ட் வெளியீடு.



பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் பாலிடெக்னிக் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, டிச., முதல் பிப்., வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 2.28 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. அதில், 91.63 சதவீதமான, 2.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 574 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்களை, www.tndte.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் 'அரியர்' தேர்வு நடத்தப்படும்.
நடப்பு செமஸ்டர் மாணவர்களுக்கு, ஜூன் 14 முதல், ஜூலை 14 வரை தேர்வு நடத்தப்படும். இவற்றில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 4 முதல், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு எப்போது ? ஜூன் 7 க்கு பின் அறிவிப்பு !


பள்ளிகள் திறப்பு எப்போது ஜூன் 7 க்கு பின் அறிவிப்பு

முழு பொது முடக்கம் நீட்டிப்பு ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


தமிழகத்தில் முழு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மீட்பதற்காக, தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் மேலும் ஒருவார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால பொது முடக்கத்தால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும். இதற்காக முழு பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி, நோய்த் தொற்று சங்கிலியைத் துண்டிக்க முடியாது. எனவே, பொது முடக்கத்தால் மக்களுக்கு ஏற்படும் இடா்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், மளிகை, காய்கறி, பழங்கள் ஆகியன வீட்டருகே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேம்படுத்தப்பட்டு, பொது மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மருத்துவக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா். அதனை விரைவுபடுத்திடவும், அவா்களுடன் ஆலோசித்து நோய்த் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் கோவைக்கு பயணம் மேற்கொள்கிறேன். இது முழுக்க முழுக்க அரசு முறைப் பயணமாகும். அவசரகாலத் தேவையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமாகும். எனவே கட்சியினா் யாரும் என்னை நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆா்வம் காட்ட வேண்டாம். வரவேற்பு ஏற்பாடுகளையும் முற்றிலுமாகத் தவிா்த்திட வேண்டும்.
ஒருவார காலம் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் தழுவிய அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உணவு வழங்கும் பணியை திமுகவினா் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒருவா்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், " தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை இரண்டுக்கான நேர்முக தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும் இந்த நேர்முக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகிறது. இதனைப்போன்று ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகள் அடங்கிய உதவி மின் ஆய்வாளர், உதவி பொறியாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனருக்கான கலந்தாய்வு பணி நேர்முகத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகிறது.

ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருந்த துறைத்தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒரு சூப்பர் அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அப்படி என்ன அறிவிப்பு?



SBI வங்கிகொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒருசூப்பர் அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அப்படிஎன்ன அறிவிப்பு?

இதனால்வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் வாருங்கள்பார்க்கலாம்.

பொதுவாகநாம் வங்கிகளில் தொடங்கிய சேமிப்பு கணக்கில், கணக்கு தொடங்கிய கிளையில்பணம் எடுத்தும் கொள்ளும் வசதி உண்டு. அதே


வங்கி வாடிக்கையாளர் வேறு கிளைகளில் பணம்எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு பணமும் குறைவாகத் தான்எடுக்க முடியும்.

உச்ச வரம்பு அதிகரிப்பு ஆனால்கொரோனா காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்டேட் பாங்க் ஆப்இந்தியா (SBI) ஒரு சூப்பர் அறிவிப்பினைகொடுத்துள்ளது எனலாம்.

 அது நீங்கள் கணக்குதொடங்கிய கிளை தவிர மற்றகிளைகளிலும் பணம் எடுக்கும் உச்சவரம்பினை அதிகரித்துள்ளது தான் அந்த அறிவிப்பு.

கொரோனாகாலத்தில் பயனுள்ள அறிவிப்பு ஏனெனில்இன்றைய


காலகட்டத்தில் பலரும் கணக்கு தொடங்கியதுஒரு இடத்தில் என்றாலும், அவர்கள் வெளியூர்களில், வெளிமாநிலங்களில் வசிக்கலாம். ஆக அவர்களால் இந்தகொரோனா காலகட்டத்தில் அடிக்கடி வங்கி கிளைக்கு செல்லவும்முடியாது.

இப்படியானவர்களுக்குஎஸ்பிஐயின் இந்த அறிவிப்பு மிகபயனுள்ளதாகவே இருக்கும். செல்ப்செக் மூலம் ரூ. 1 லட்சம்எடுக்கலாம் இது கொரோனா காலத்தில்வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் விதமாக, எஸ்பிஐ செக்அல்லது பணம் எடுக்கும் படிவம்மூலம் திரும்ப பெறும் உச்சவரம்பினை அதிகரித்துள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியானது எஸ்பிஐ, செல்ப் செக்


போட்டு எடுக்கும் தொகை வரம்பினை, ஒருநாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. வித்ட்ராவல் பார்ம் மூலம் எவ்வளவு? இதே மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல்பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு25,000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம்.

இதே மூன்றாம் தரப்பு நபர் செக்மூலமாக பணம் எடுக்கும் வரம்ப்பானது50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பார்ம்மூலமாக மூன்றாம் தரப்பினர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக


மூன்றாம் தரப்பினரின் கே ஒய் சிவிவரங்கள் தரப்பட வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதுவரையில் அமல்

 எஸ்பிஐயின் இந்த அதிரடி மாற்றங்கள்செம்டம்பர் 30, 2021 வரையில் அமலில் இருக்கும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில்எஸ்பிஐ-யின் நிகரலாபம் 80.15% அதிகரித்து, 6,451 கோடி ரூபாயாக


அதிகரித்துள்ளது. இதுவட்டி வருவாய் அதிகரித்த நிலையில்கண்டுள்ளது. வருவாய் அதிகரித்துள்ள நிலையில்மோசமான கடன் விகிதங்களும் குறைந்துள்ளது.






கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு.



 கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இதனையொட்டி பிரதமர் மோடி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் வைப்பு தொகை தொடங்கப்படும். இது அவர்களுக்கு மாதாந்திர தனிப்பட்ட தேவைகளை கவனித்து கொள்வதற்கான மாதாந்திர நிதி உதவியை வழங்க பயன்படும். 18 வயதாகும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயர் கல்விக்கு உதவித் தொகை பெறுவதற்கு இது பயன்படும்.

அவர்கள் 23 வயதை அடையும்போது தங்களது டெபாசிட் தொகையை தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைக்காக பெறுவார்கள். குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு என அனைத்தையும் அரசு வழங்கும். இதன் காரணமாக அவர்கள் வலுவான குடிமக்களாக வளர்ந்து பிரகாசமான எதிர்காலத்தை பெறுவார்கள். இதுபோன்ற கடினமான தருணங்களில் ஒரு சமூகமாக நாம் குழந்தைகளை பராமரிப்பது, ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை விதைப்பதும் நமது கடமையாகும். கொரோனா நோய் தொற்றின் காரணமாக 2 பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர்களை இழந்த அனைத்து குழந்தைகளும் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் இந்த டெபாசிட் தொகையை பெறுவார்கள். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படும். தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து கட்டணங்கள் செலுத்தபப்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் கொரோனாவால் பலியாகும் பட்சத்தில், இஎஸ்ஐ பென்சன் திட்டத்தின் கீழ் தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் பென்ஷனாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் காப்பீடு பலன் தொகை 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த பலனும் அவர்களின் குடும்பத்திற்கு தரப்படும்.

கர்நாடகா அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் நலனுக்காக ‘‘முதல்வர் பால’’ என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பிள்ளைகளுக்கு மாதம் ₹3,500 நிவாரணம் வழங்கப்படும். 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளை சிறுவர் நல காப்பகத்தில் சேர்த்து பராமரிப்பதுடன் உண்டு உறைவிட பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்துள்ளவர்களுக்கு லேப்டாப், டேப் ஆகியவை வழங்குவதுடன் உயர்கல்வி படிக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். 21 வயது நிரம்பிய பெண்களுக்கு ₹1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அதை அவர்கள் திருமணம், சுயதொழில் அல்லது கல்வி என்று எந்த தேவைக்கும் பயன்படுத்தி கொள்ள சுதந்திரம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.


பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க நடவடிக்கை: கிராம அளவில் குழு அமைக்க திட்டம்


பல்வேறு காரணங்களால் பள்ளிகளில் இடையில் படிப்பை நிறுத்திய குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுள்ளது. பொருளாதார நிலை, வாழ்வாதாரம் இல்லாமல் ஏழ்மை நிலை, குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தும் நிலை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இந்த இடைநிற்றல் உள்ளது. இதையடுத்து, பள்ளி இடைநிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கிராம அளவில் குழுக்களை நியமித்து பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் மத்திய அரசு கேட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதற்கு பிந்தைய காலத்தை அளவீடாக கொண்டு பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றல் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் எத்தனை பேர். அவர்கள் தற்போது யாருடைய பராமரிப்பில் உள்ளனர் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இந்த குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை அரசு ஆய்வு செய்து கேரள மாநிலத்தைப்போல் அவர்களுக்கு இலவச கல்வி, சிறப்பு நிதி உதவி ஆகியவற்றை செய்து தரவேண்டும் என்றார்.கொரோனா தொற்று காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை அரசு கவனித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர் ஆலிவர் தெரிவித்துள்ளார்.


தேசிய அளவிலான முக்கிய உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


தேசிய அளவிலான முக்கிய உதவி எண்களை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனு விசாரணைக்கு வரும்நிலையில் , 12ம் வகுப்பு தேர்வை கைவிட முடிவு?



கொரோனா பாதிப்பால் மாநிலங்கள் திணறும் நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 9, 10, 11ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தேர்வு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி பொதுத் தேர்வுகள், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் பல்வேறு கட்டமாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநிலக் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் நடத்திய காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அப்போது, நோய்த் தொற்று குறைந்த பிறகே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முழுமையாகத் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 300 பேர், ஆஃப்லைன் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாற்று மதிப்பீட்டு முறையைக் கையாள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரும் மனுவை 31ம் தேதி(நாளை) உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதற்கிடையே சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு தேர்வை கைவிடுவது தொடர்பான ஒரு பரிந்துரையும் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கைவிடும்பட்சத்தில், 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் புதிய மதிப்பெண் பட்டியலை தயாரித்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஆனால், சில மாநிலங்கள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சிபிஎஸ்இ வட்டாரங்கள் கூறுகையில், ‘தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. ‘# கேன்சல்போர்டு எக்ஸாம்ஸ்’ என்று டுவிட்டரில் ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு தேர்வை ரத்து செய்வதற்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், ஜூன் முதல் வாரத்தில் கொரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்து, தேர்வு குறித்த முக்கிய முடிவுகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும். ஏற்கனவே, சிபிஎஸ்இ விருப்பத்தேர்வு ஏ மற்றும் பி வடிவத்திலான இரண்டு திட்டங்களை மாநில அரசுகளிடம் மத்திய கல்வி அமைச்சகம் பகிர்ந்து கொண்டது. மாநில அரசுகளும் தங்களது பரிந்துரையை வழங்கி உள்ளன. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூன் 1) முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறின.


தமிழகத்தில் மளிகை பொருட்கள் வழங்க புதிய திட்டம் – நாளை முதல் அமல்!!


தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்கு 7,500 வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மளிகை பொருட்கள்:
தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் பொழுது சில தளர்வுகள் மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மளிகை, காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றினை மக்கள் வீடுகளுக்கு நேரடியாக வண்டிகள் மூலம் சென்று விற்பனை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்கு சென்னை மாநகராட்சி புதிய வழிமுறை ஒன்றை கையாண்டுள்ளது. அதன்படி மக்கள் தங்களது அருகே உள்ள மளிகை கடைகளுக்கு போன் மூலமாகவோ அல்லது நேரில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கூறி விட வேண்டும் என்றும் அதனை வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் இல்லத்திற்கு நேரடியாக வந்து விநியோகம் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் கூடவோ, அல்லது கடையை முழுமையாக திறக்கவும் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி சுமார் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து கடை வியாபாரிகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சென்னையை போல் அனைத்து நகராட்சி மாநகராட்சிகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

2017,2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள் மூன்று மாத காலத்திற்குள் (27.08.2021) புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது


செய்தி வெளியீடு எண்:184
நாள்:30.05.2021
செய்தி வெளியீடு
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை(டி) எண்.204, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 28.05.2021-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.08.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இயக்குநர்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கரோனா பரிசோதனை செய்யும் முறை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


கரோனா வைரஸ் பாதித்துள்ளதா என அறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கண்டறியும் முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானது மான கரோனா பரிசோதனை முறையை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தை (நீரி) சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
தற்போது நாட்டில் கரோனா வைரஸ் பாதித்துள்ளதா என அறிய ஆர்டி-பிசிஆர் முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதில் முடிவுகள் தெரிய ஒரு நாளாகிறது. இந்நிலையில்தான் மிக விரைவில் முடிவுகளை அறியும் முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாக்பூரைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் உள்ளது.
இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.
கரோனா சோதனைக்கு வருபவர், தனது வாயில் உப்புநீரை எடுத்துக் கொண்டு அதை கொப்பளித்து சோதனை குழாயில் சேகரித்துக் கொடுக்க வேண்டும். பின்னர் இந்த நீரை ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து முடிவுகளை 3 மணி நேரத்தில் பெறலாம். உள்கட்டமைப்பு தேவைகள் ஒரு தடையாக இருக்கும் கிராமப்புற மற்றும் பழங்குடியின பகுதிகளுக்கு இந்த புதுமையான சோதனை தொழில்நுட்பம் பயனளிக்கும். இந்த தொழில்நுட்பத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஆர்டி-பிசிஆர் முறையில் சளி மாதிரி சேகரிப்பு முறைக்கு நேரம் தேவை. மேலும் சேகரிப்பு மையத்துக்கு மாதிரியைக் கொண்டு செல்வதிலும் சிறிது நேரம் இழக்கப்படுகிறது. அதே நேரத்தில் உப்புநீர் கொப்பளிப்பு முறை, ஆர்டி-பிசிஆர் முறை உடனடியாகவும், வசதியான முறையாகவும் அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இந்த புதுமையான தொழில்நுட்பத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட பலர் பாராட்டுதெரிவித்துள்ளனர். - பிடிஐ

தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து....! விலை எவ்வளவு தெரியுமா...?



டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 DG கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 2டிஜி புதிய கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதனை அடுத்து, இந்த புதிய தடுப்பு மருந்து, நேற்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக பத்தாயிரம் பாக்கெட்டுகள் நேற்று சந்தையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 DG கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல்துறையில் 4368 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


அஞ்சல்துறையில் காலியாகவுள்ள 4368 காலிப் பணியிடங்களுக்கு விண்ணபிக்க மே 29 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல்துறையில் காலியாகவுள்ள 4,368 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், பீகாரில் 1940 காலிப் பணியிடங்களும் உள்ளன. தகுதியான நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. www.appost.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு மாநிலங்களிலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில், இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசத்தை இந்திய அஞ்சல் துறை நீடித்துள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் வரும் மே 29 ஆம் தேதி வரை இந்திய அஞ்சல்துறை இணையதளத்துக்கு சென்று காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு; இந்திய அஞ்சல் துறை
பணியிடம் ; மகாராஷ்டிரா, பீகார்
காலிப் பணியிடங்கள்; 4,368 GDS Posts
விண்ணப்பிக்க கடைசி தேதி ; மே 29,2021
கல்வித் தகுதி ; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை:

* தகுதியான நபர்கள் www.appost.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்

• முகப்பு பக்கத்தில் இருக்கும் Apply online link -ஐ கிளிக் செய்ய வேண்டும்

• பதிவு எண்ணையும், எந்த வட்டத்துக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்

• முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்

• மீண்டும் ஒருமுறை விண்ணப்பத்தை சரிபார்த்து சமர்பிக்கவும்

• விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான உறுதி செய்யப்பட்ட பக்கத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC/EWS வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி, பெண்கள் மற்றும் PWD வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பக்கட்டணம் முழுவதும் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட்கார்டு வழியாக ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

வயது வரம்பு:

10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், 18 வயது முதல் 40 வயதுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் உட்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் இல்லை

ஊதிய விபரம்:

மேற்கூறிய காலிப் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ. 14,500 வரை வழங்கப்படும். பணியிடத்தின் அடிப்படையில் ஊதியம் மாறுபடும்.

ரயில்வே 3591 பேருக்கு வேலை அறிவிப்பு.! தேர்வு கிடையாது உடனே வேலை.!


மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

மேற்கு ரயில்வே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: மேற்கு ரயில்வே

பணி: Apprentice

மொத்த பணியிடங்கள்: 3591

தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ITI போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்

வயது வரம்பு: 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு.

நேர்முக தேர்வு: 26.05.2021

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவு- 100/, SC/ ST கட்டணம் இல்லை

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 25.05.2021

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.06.2021

விண்ணப்பிக்கும் இணையத்தளம்: Railway Recruitment Cell (rrc-wr.com)

பணி இடங்கள்:
மும்பை பிரிவு (எம்.எம்.சி.டி) - 738
வதோதரா (பி.ஆர்.சி) பிரிவு - 489
அகமதாபாத் பிரிவு (ஏடிஐ) - 611
ரத்லம் பிரிவு (ஆர்.டி.எம்) - 434
ராஜ்கோட் பிரிவு (ஆர்.ஜே.டி) - 176
பாவ்நகர் பட்டறை (பிவிபி) - 210
கீழ் பரேல் (பி.எல்) டபிள்யூ / கடை - 396
மஹாலக்ஷ்மி (எம்.எக்ஸ்) டபிள்யூ / கடை - 64
பாவ்நகர் (பிவிபி) வ / கடை - 73
தஹோத் (டி.எச்.டி) டபிள்யூ / ஷாப் - 187
பிரதாப் நகர் (பி.ஆர்.டி.என்) டபிள்யூ / ஷாப், வதோதரா - 45
சபர்மதி (எஸ்பிஐ) ENGG W / SHOP, அகமதாபாத் - 60
சபர்மதி (எஸ்பிஐ) சிக்னல் டபிள்யூ / ஷாப், அகமதாபாத் - 25
தலைமையகம் அலுவலகம் தலைமையகம் - 34

அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு !


*ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்*

         *கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் பட்ட கஷ்டங்களும் இழந்த இழப்புகளும் அதிகம்*

         *நமது உரிமைகளுக்காகவும் இழந்த இழப்புகளுக்காகவும் போராடிய பொழுது அந்த ஆட்சியாளர்கள் நம்மை படுத்திய பாட்டை நினைத்துப்பார்த்தால் இன்றும் நம் கண்களில் கண்ணீர் வரும்*

           *தமிழகத்தில் நல்லாட்சி அமையாதா என்று நாம் ஏங்கி இருந்த நேரத்தில் நாம் எண்ணியது போலவே தற்போது நல்லாட்சி அமைந்துள்ளது*

        *கோரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பதவியேற்ற நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அரசு நிர்வாகமும் இரவு பகல் பாராமல் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மிகத் தீவிரமாக உழைத்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்*

           *இந்த கடுமையான காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கும் நோக்கத்தில் சிலர் திட்டமிட்டு பல பொய்யான வதந்தியான செய்திகளை வலைதளங்களில் பரப்புவதை காண்கிறோம்*

           *அதில் ஒன்றுதான் ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைக்கப்படும் என்று பகிரப்பட்ட செய்தி. உடனே நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்*

         *மற்றொன்று ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்படும் என்பது. உடனே நமது மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதுபோன்ற எந்த உத்தரவும் அரசால் வழங்கப்படவில்லை என்று தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்*

     *சில ஊடகங்களும் செய்திகளை முந்தித் தருகிறேன் பேர்வழி என்ற கணக்கில் வலைதளங்களில் வதந்தியாக வரும் செய்திகளை உடனே ஒளிபரப்பு செய்கிறார்கள்*

           *நமது ஒரு சில பொறுப்பாளர்களும் அந்தச் செய்தியை உண்மை என்று நம்பி நமது குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள்*

      *இதனால் தேவையற்ற விவாதங்களும் ஒரு பதட்டமான சூழலும் ஏற்படுவதை காணமுடிகிறது*

  *எனவே இது போன்ற தமிழகத்தின் நல்லாட்சிக்கும் ஆசிரியர்களுக்கும் விரோதமாக பரப்பப்படும் பொய்ச் செய்திகளையும் வதந்திகளையும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் யாரும் நமது ஆசிரியர்கள் குழுக்களில் பகிர வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*

கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பால் கணித ஆசிரியர் உயிரிழப்பு.


திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி கணித ஆசிரியர் கருப்புப் பூஞ்சை நோய் தாக்கி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (37). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சின்னராசுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சின்னராசுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சின்னராசுக்குக் கண்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னராசு, சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி கணித ஆசிரியர் கருப்புப் பூஞ்சை நோயால் உயிரிழந்த சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்து, பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி!


கண்ணப்பனுக்கு புதிய பதவி.
*பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்து, பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி.
*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குநராக கண்ணப்பன் நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

கரோனா நிவாரணம்: ஓர் அரசுப் பள்ளியே சேர்ந்து கொடுத்த உண்டியல் நிதி


கரோனா 2வது அலையில் தமிழகமே தடுமாறி நிற்கும் நிலையில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்குப் பல்வேறு மாணவர்கள் தனி நபர்களாக நிதி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
ஆனால் ஈரோடு அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கே.ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்த நிதியை அளித்துள்ளனர். இதுகுறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.
''2008-ம் ஆண்டில் ஒரு நாள் மாணவர்களுக்கு நீதிநெறிக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது பிறருக்கு உதவி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சொன்னேன். ஒரு மாணவன் எழுந்து, 'நானும் இதுபோல உதவலாமா?' என்று கேட்டான். 'உன்னால் ஆன உதவிகளைச் செய்யலாம்' என்று கூறினேன். அன்றே மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் இணைந்து பேசி உண்டியல் திட்டத்தை ஆரம்பித்தனர்.
மைதானத்தில் கிடந்த பழைய தகர டப்பாவைச் சுத்தப்படுத்தி உண்டியலாக்கினர். 'எங்களுக்குக் கிடைக்கும் காசை மிச்சப்படுத்தி, அதை உண்டியலில் போடுகிறோம்' என்று தெரிவித்தனர். 'அந்தக் காசை இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம் டீச்சர்' என்றும் கூறினர். நன்னெறிக் கதைகளின் தாக்கம் இந்த அளவுக்கு உள்ளதை நினைத்து மகிழ்ந்தேன்.
அடுத்த நாள் முதல், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் உண்டியல் வைக்கப்பட்டது. மாணவர்களிடம் '50 காசு, 1 ரூபாய் என எவ்வளவாக இருந்தாலும் உண்டியலில் காசு போடுபவர்களுக்கு கைத்தட்டுங்கள், வாழ்த்துச் சொல்லுங்கள். உங்கள் வயதுக்கு இது மிகப்பெரிய தொகை' என்றேன். நாளடைவில் தினமும் மாணவர்கள் காசு போட ஆரம்பித்தனர். இதை ஒழுங்குபடுத்த ஆசைப்பட்டோம். அதன்படி, வழிபாட்டுக் கூட்டத்தின் இறுதியில் வழிநடத்தும் மாணவர், ''உதவி செய்வோம் வாருங்கள் தோழர்களே!'' என அழைப்பார். காசு கொண்டுவந்த மாணவர்கள், ''என் நாட்டுக்காகவும் என் மக்களுக்காகவும்'' என்று கூறி அவருடைய பெயரையும் ‌கூறி உண்டியலில் காசு போடுவர். மற்ற மாணவர்கள் வாழ்த்துகளைக் கூறி, கைகளைத் தட்டி மகிழ்வர்.
அதைவிடப் பெரிய ஆச்சரியம், காசு கொண்டு வராத மாணவர்களின் பெயரையும் சேர்த்துக் கூறி, கொண்டுவந்த மாணவன் உண்டியலில் பணம் போடுவான். ஒரு வகுப்பில் ஒரு மாணவன் மட்டுமே கொண்டு வந்தால், வகுப்பு மாணவர்கள் அனைவரின் பெயரையும் சேர்த்துக்கூறி, காசு போடுவான். உதாரணத்துக்கு, ''4ம் வகுப்பு மாணவர்கள்- நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும்'' என்று கூறி உண்டியலில் போடுவான்.
இதன்மூலம் உதவி மனப்பான்மையும் பணத்தின் முக்கியத்துவமும் அவர்களுக்குத் தெரிய வந்தது. அந்த ஆண்டின் முடிவில் எண்ணிப் பார்த்தபோது ரூ.2,000 இருந்தது. மாணவர்கள், 'எங்களைப் போல ஏழைக் குழந்தைகளுக்கு உதவலாம்' என்று கூறினர். 'அன்னை இல்லம்' என்ற ஆதரவற்றோர் மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்தோம்'' என்கிறார் ஆசிரியர் வாசுகி. உண்டியல் திட்டம் குறித்து நாளடைவில் பெற்றோருக்கும் குறித்துத் தெரிய வந்திருக்கிறது. அவர்களே தங்கள் குழந்தையின் பிறந்த நாளன்று சற்றே கூடுதல் தொகையைக் கொடுத்து உண்டியலில் போடச் சொல்ல ஆரம்பித்தனர். பள்ளிக்கு வரும் விருந்தினர்கள், மேசையில் இருக்கும் உண்டியலைப் பார்த்துத் தெரிந்துகொண்டு அவர்கள் விருப்பப்பட்ட தொகையையும் அதில் போட்டனர்.
இவ்வாறாகத் தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தப் பள்ளி மாணவர்கள் உண்டியல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். அந்தந்த ஆண்டின் இறுதியில், அப்போதைய தேவைக்கேற்ப உதவும் அவர்கள், கஜா புயல் நிவாரணத்துக்கு உதவியுள்ளனர். ஆதரவற்ற சிறுமியின் மருத்துவ சிகிச்சை, கேரள வெள்ளத்தின்போது முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பணம் என இவர்களின் சேவை நீண்டுள்ளது.
தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க ஒவ்வோர் ஆண்டும் உண்டியலில் சேர்ந்த மொத்தத் தொகை, அதைச் செலவிட்ட விதம் ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து, ஒட்டி, ஆவணப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுகுறித்து மேலும் பேசும் ஆசிரியர் வாசுகி, ''இப்போது கரோனா 2வது அலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1000 தொகையை ஆன்லைனில் அனுப்பியுள்ளோம். கடந்த ஆண்டு மாணவர்கள் உண்டியலில் சேமித்த பணம் இது. முந்தைய காலங்களில் தேவைப்படுவோருக்குப் பணமாக அனுப்பும் சூழலில், மாணவர்களையே நேரடியாக வங்கிக்கு அழைத்துச் செல்வோம். கரோனா காலம் என்பதால் ஆன்லைனிலேயே அனுப்பி விட்டோம்.
இதுவரை உண்டியல் மூலம் சுமார் 30 ஆயிரம் ரூபாயை எங்கள் ‌மாணவர்களே சேமித்து, உதவிகளைச் செய்திருப்பர். அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் வெறும் 41 பேர் மட்டுமே இதைச் செய்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். கிராமப்புறத்தில் இருந்து, ஏழ்மை நிலையில் வளர்ந்தாலும் என்னால் முடிந்ததை என் நாட்டுக்காகச் செய்வேன் என்ற எண்ணத்துடன் எங்கள் மாணவர்கள் வளர்வது ஓர் ஆசிரியராய் எனக்குப் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது. எங்கள் மாணவர்கள் பிற பள்ளி மாணவர்களுக்கும் முன்னுதாரணமாய் இருக்கட்டும்'' என்று நெகிழ்கிறார் ஆசிரியர் வாசுகி.
பிஞ்சுக் கரங்களின் இந்தக் கொடை நாளை மீதான நம்பிக்கை விதை...
சக உயிர்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட இந்த இளந்தளிர்களுக்குத் தலை வணங்குவோம்!

Flash News: 12-ம் வகுப்பு பொது தேர்வு ஆன்லைனில் கிடையாது: நேரடியாக நடைபெறும்- கல்வித்துறை அமைச்சர்


தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு ஆன்லைனில் நடைபெறாது என்றும் நேரடியாகவே பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தமிழக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 



மேலும் மருத்துவத்துறை அறிவுறுத்தலின்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்


பிளஸ்2 தேர்வுகள் ரத்தாகுமா: மனுவை வரும் 31ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்


'கோவிட் பரவலால் பிளஸ்2 பொதுத் தேர்வுகளை நடத்தாமல் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 31-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கோவிட்19 பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பிளஸ்2 தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாகத் தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது. இந்த தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப் போடுவதும்; முடிவு ஏதும் எடுக்காமல் இருப்பதும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும்பட்சத்தில் அது அவர்களது கல்வியை பாதிக்கும்.

10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும். அதனால், பிளஸ்2 வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.


இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அமர்வு, 'இந்த வழக்கை வரும் 31-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறோம். பிளஸ்2 தேர்வுகள் குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் சிபிஎஸ்இ ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அதனால் திங்கள் கிழமைக்குள் ஏதும் நடக்காது' எனத் தெரிவித்துள்ளனர்.




BREAKING || தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


💢🅱️#BREAKING || தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 



செவிலியர்கள், ஆய்வக நட்புநர்கள், கணினி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


மதுரையில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நட்புநர்கள், கணினி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

2021-மே மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என மாவட்டக் கருவூலர் அறிவிப்பு!



2021-மேமாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும்(Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என மாவட்டக் கருவூலர்அறிவிப்பு!

 

முதன்மைசெயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னைஅவர்களின் கட்செவி செய்தியில் , அனைத்துபணம் பெற்று வழங்கும் அலுவலர்களால்IFHRMS செயலியில் சமர்பிக்கப்படும் மே -2021 மாத ஊதியப் பட்டியல்களை( HARD COPY ) நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க இயலாத நிலையில் உள்ளபணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்ஊரடங்கு காலம் முடிவுற்ற பின்பட்டியல்களை நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் , பணம் பெற்ற வழங்கும்


அலுவலர்கள் பட்டியல்களை மென்பொருள் வாயிலாக கருவூலத்திற்கு அனுப்பியபிறகு , மென்பொருள் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு கருவூல பணியாளர்கள்அவ்வூதியபட்டியல்களை ஏற்பளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து , திருப்பூர்மாவட்ட கருவூல அலகில் மேற்கண்டவாறுபட்டியல்கள் ஏற்பளிப்பு செய்யபப்டும் பட்சத்தில் , உதவி கருவூல அலுவலர்கள்தங்களுக்குட்பட்ட பணம் பெற்று வழங்கும்அலுவலர்களிடம் இணைப்பில் கண்டுள்ள அட்டவணையை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலரின்கையொப்பத்துடன் ( Signed and Scanned Copy ) சம்பந்தப்பட்டகருவூலங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு தெரிவித்து , பெறப்படும் விவரங்களை பட்டியல்களுடன் ஒப்பிட்டு பட்டியல்களை ஏற்பளிக்க தொடர்புடைய பிரிவு கணக்கர்கள் / கண்காணிப்பாளர்கள்/ கூடுதல் கருவூல அலுவலர் / உதவிகருவூல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!


CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!




விருப்பம் உள்ள ஆசிரியர்கள் மட்டும் மருத்துவ சாராத பணியில் ஈடுபடுத்த வேண்டும்- GOVT LETTER


விருப்பம் உள்ள ஆசிரியர்கள் மட்டும் மருத்துவ சாராத பணியில் ஈடுபடுத்த வேண்டும்



கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய(26.05.21) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை


கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய(26.05.21) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை



BREAKING - மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு.



மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை காலஅவகாசம் - தமிழக மின்வாரியம்



பள்ளி , கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் - தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியீடு.



பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.


*ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
*ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை














Wanted Asst.Professor-last date of submission - 30.5.2021


VACANIES- DWARAKA DOSS GOVERDHAN DOSS VAOSHNAV COLLEGE- AUTONOMOUS) APPLICATION ARE INVIR=TED FOR THE POST OF ASST PROFESSOR UNDER UNAIDED STREAM IN THE FOLLOWING DISCIPLINES FROM CANDIDATE WHO SATISFY THE UGC QUALIFICATIONS NORMS-2018.

 LAST DATE OF SUBMISSION 30.5.2021

Teachers Wanted- All subjects- Requirement for the Acadamic year 2021-2022



Teachers Wanted- All subjects- Requirement for the Acadamic year 2021-2022- for enquiry 9790768666



அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் முதல் அலை கொரோனா பாதிப்பின்போது, தடுப்பூசி இன்றி உயிர்பலி ஏற்பட்டு வந்தது. தற்போது 2வது அலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. 

அதனால் நோய் குறைந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களில் தடுப்பூசி போடாதவர்கள், அருகே உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை பள்ளிக்கல்வித்துறை மூலம் இணையதளத்தில் உள்ள கோவிட்-19 ஷீட்டில் அப்டேட் செய்ய வேண்டும். அதில் முதல் தவணை தடுப்பூசியா? 2வது தவணை தடுப்பூசியா? எத்தனை தடுப்பூசி என்று பதிவிட வேண்டும். 

இதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பிஎச்டி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, முழு ஊரடங்கு காரணமாக 2021-22-ம் ஆண்டுக்கான பிஎச்டி சேர்க்கை ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு: மத்திய கல்வி அமைச்சர் தகவல்



மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன் லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு கட்டமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 23-ம் தேதி காணொலி காட்சி வழியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, நோய்த் தொற்று குறைந்த பிறகு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசி ரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத் தப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசுகளின் கருத்துகளை முழுமையாக ஆராய்ந்து, பிளஸ் 2 பொதுத் தேர்வு களை நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முன்னதாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

2 கட்டங்களாக தேர்வு?

இதனிடையே, கல்வித் துறையின் பொதுவான செயல்பாடுகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோ சனை நடத்தினார். துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்தப் போவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதே போல தமிழக பள்ளிக்கல்வியில் 2 கட்டமாக தேர்வு நடத்தப்படுமா என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசிக்கப்படும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்து வது தொடர்பாக உத்தேச திட்டங் களை உருவாக்கியுள்ளோம். அதை முதல்வரிடம் தெரிவித்து, அவரது ஆலோசனைக்கு ஏற்ப உரிய திருத்தங்கள் செய்து, மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) அனுப்ப உள்ளோம்.

கரோனா பாதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுமாதிரியாக உள்ளது. அந்த சூழலையும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுவோம்.

மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறுகிறீர்கள். அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கெனவே மாணவர் சேர்க்கை தொடர்பான தற்காலிக அட்ட வணையை தயாரித்து வைத்திருந் தோம். கரோனா சூழல் காரணமாக அதை நடைமுறைப்படுத்த முடிய வில்லை.

தற்போது தமிழக அரசின் முழு கவனமும் கரோனாவைத் தடுப்பதில் இருக்கிறது. எனவே, கரோனா கட்டுப் பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க் கைக்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

பள்ளிக் கல்வி இயக்குநர் பணி யிடத்தை ரத்து செய்திருப்பது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் வரப்பெற்றுள்ளது. அவர்களின் கருத்துகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிர்வாக ரீதியில் முடிவெடுக்கப்படும்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து நான்கைந்து முறைகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


NEET EXAM - சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!


மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (மே 25) செய்தியாளர்களைச் சந்தித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

"பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாகக் குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் நீட் எதிர்ப்பே நமது கொள்கை. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தது போல எப்போதுமே நாம் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்தான். கண்டிப்பாக நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை எப்போது கூடுகிறதோ அப்போது இதுகுறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைப் பொறுத்தவரை வழக்கமான தேர்வு முறையே பின்பற்றப்படும். தேர்வு நேரக் குறைப்பு, விரிவான பதில் அளிப்பு ஆகியவை மாற்றப்படாது. இதையேதான் மத்திய அரசுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான பிற மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எனினும், தேர்வுகளைப் பாதுகாப்புடன் நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு.

பொதுத் தேர்வை 2 கட்டங்களாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


Departmental Exam Subjects List for BT and PG - பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் குறித்த முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட பதில் - பதில் வழங்கிய அலுவலர் - தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்!

 

 

 

 



தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் TNPSC நடத்தும் துறைத்தேர்வுகள் எழுதுகின்றனர்.ஆனால் முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் தேர்வுகளின் குறியீடுகள் என்ன ? என்பதை முதலமைச்சர் தனிப்பிரிவின் கீழ் அரசாணை மற்றும் செயல்முறைகள் கடித நகல்களை தெரிந்து கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன் . பள்ளி வேலை நாட்களில் துறைத் தேர்வு நடக்கும் போது ஆசிரியர்களுக்கு எவ்வகை விடுப்பு அனுமதிக்கப்படுகிறது என்பதையும் அல்லது துறைத் தேர்விற்கு on duty செல்ல அனுமதி உண்டா ? என்பதை முதலமைச்சர் தனிப்பிரிவின் கீழ் மேற்காணும் தகவல்களை தெரிந்துக்கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன்.

பதில் :



மனுதாரரின் கோரிக்கையினை ஆய்வு செய்ததில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறைத் தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளித் துனை ஆய்வாளர் பணிக்கு தகுதி பெற 065 , 072 , 124 ( அ ) 152 , 172 குறியீடு தேர்வும் தலைமையாசிரியர் பணி தகுதிக்கு 124 ( அ ) 152 , 172 தேர்வும் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 124 ( அ ) 152 , 172 தேர்வும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது ஏற்பு : முதன்மைக்கல்வி அலுலவர் தருமபுரி . ந.க.எண் 0086/03/2021 நாள் 08.03.2021 .


G.O 254- வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், பயிற்சி பெற அரசு அனுமதி.


வெளிநாட்டில்மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், பயிற்சி பெற அரசு அனுமதி.
சென்னையில்உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதிவழங்கி சுகாதாரத்துறை உத்தரவு.


கரோனா களப் பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு!



வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கண்டறியும் களப்பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், ஆசிரியர்கள்வீடு வீடாகச் சென்று தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கண்டறிய வேண்டும் என ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறை மூலம் ஆசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:

500 ஆசிரியர்கள் உயிரிழப்பு

மாநிலம் முழுவதும் தேர்தல் பணி மற்றும் பாடப் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக, கரோனா தொற்றுக்கு ஆளாகி 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செவிலியர் செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் அறிகுறிகளைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். எவ்வித பயிற்சியும் இல்லாமல், ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் கரோனா பரவும்.

கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது, ஆசிரியர்கள் மருத்துவமற்ற பணிகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும்.

தவிர்க்க இயலாத சூழலில் ஆசிரியர்களுக்கு களப்பணி வழங்கப்பட்டால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கூடாது. ஆசிரியர்களை நேரடி களப்பணியாளர்களாக நியமிக்கும் முன்பாக, அவர்களை முன்களப் பணியாளர்களாக கருதி அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மனுவும் அனுப்பியுள்ளார்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட களப்பணியை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் களப்பணி அல்லாத இதர பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.

இறந்த ஆசிரியைக்கு பணியாணை

ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை மணிமேகலை நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கும் கரோனா தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட, பணியாணை வழங்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல்


12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா அல்லது முக்கியப் பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே, அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பொதுத்தேர்வுகளை ரத்து செய்யாமல், தற்போதைய நடைமுறையிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், தமிழக அரசு தனது கருத்துகளை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப் படுத்தவும், பிற மாவட்டங்களுக்கு எடுத்து செல்லவும் மாவட்ட வாரியாக உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப் படுத்தவும், பிற மாவட்டங்களுக்கு எடுத்து செல்லவும் மாவட்ட வாரியாக உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் - கல்வி அமைச்சர்


சற்றுமுன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் என்று விளக்கம் அளித்தார்.


Corona காரணமாக பருவ இறுதி தேர்வுகள் ஜூன் 2021-க்கு ஒத்திவைக்கப்படுகிறது TNOU அறிவிப்பு

Corona காரணமாக பருவ இறுதி தேர்வுகள் ஜூன் 2021-க்கு ஒத்திவைக்கப்படுகிறது TNOU அறிவிப்பு

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது காலை 8மணி முதல் நண்பகல் 12மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் -தமிழக அரசு


தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கின் போதும் தினமும் காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்படுவது போல் ரேஷன் கடைகளும் இயங்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கின் போது காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ஆசிரியர் மீது போக்சோ வழக்கு 2 டி.இ.ஓ., மீதும் நடவடிக்கை


 மதுரையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத இரண்டு டி.இ.ஓ.,க்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மதுரை, ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயபிரபாகரன், 45. இவர், 2020 ஜூலையில், பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.மாணவியின் தந்தை மாநகராட்சி, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இது குறித்து, கோதண்டம் என்பவர், 'போக்சோ' வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.நீதிமன்ற உத்தரவின்படி, விஜயபிரபாகரன் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருவர் சேர்க்கப்பட்டு, அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.இந்நிலையில், விஜயபிரபாகரனை, மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா, 'சஸ்பெண்ட்' செய்தார்.அவர் கூறுகையில், ''புகார் அளித்தவுடன், பெண்கள் பள்ளியில் இருந்து, ஆண்கள் பள்ளிக்கு விஜயபிரபாகரன் மாற்றப்பட்டார். மாநகராட்சி கமிஷனர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்துள்ளோம். வழக்கில், கல்வி அதிகாரிகளை சேர்த்துள்ள தகவல் எனக்கு தெரியாது,'' என்றார்.


வனக்காப்பாளர் பணிக்கு நியமன ஆணை எப்போது?


 வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி ஆணை எப்போது கிடைக்கும் என்ற, கேள்வி எழுந்துள்ளது. 



தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள், 2019 டிசம்பரில் துவங்கின. இதற்கு, 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, 2020 மார்ச்சில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, தொடர் நடவடிக்கைகள் முடங்கின.பின், 2021 ஜனவரி முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன. பிப்., முதல் வாரத்தில் தரவரிசை அடிப்படையிலான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. 



சட்டசபை தேர்தல் அறிவிப்பு காரணமாக, அடுத்தகட்ட பணிகள் முடங்கின. தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தற்போதாவது இவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படுமா என்ற, கேள்வி எழுந்து உள்ளது. புதிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என, தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


ஜூலை 15ம் தேதி பிளஸ் 2 தேர்வு?


 பிளஸ் 2 தேர்வுகளை, ஜூலை 15ல் துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இந்தாண்டு, 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப் பட்டு உள்ளது; பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தொடர்பாக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையே சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு, பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு கூடி, பிளஸ் 2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யும். தேர்வு குறித்த அறிவிப்பு, ஜூன் 1ம் தேதி வெளியாகும். 



ஜூலை 15ல் துவங்கி, ஆக., 26க்குள் தேர்வு நடத்தி முடித்து, செப்டம்பரில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின. 



கோரிக்கை : 'ஆகஸ்டில் தேர்வுகள் முடிந்து, செப்டம்பரில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்படும். 'வெளிநாட்டு பல்கலைகளில் பயில்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் இழந்து விடுவர். அதனால், முன்னதாகவே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்லுாரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.


10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் வழங்கும் முறை தயார் - அமைச்சர் மகேஷ்


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
பள்ளி கல்வி துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: தினமும் துறை ரீதியான கூட்டம் நடக்கிறது. அதில், அதிகாரிகளின் கருத்துகள் பெறப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய அரசு விபரங்கள் கேட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வருடன் பேசி, இன்று கடிதம் அனுப்பப்படும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, 'ஆன்லைன்' வழி மாணவர் சேர்க்கையை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, தன்னார்வத்துடன் கொரோனா தடுப்பு பணிக்கு வந்துள்ளனர். அவர்களை முதல்வரே பாராட்டியுள்ளார்.கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் குழுவினர், உளவியல் கவுன்சிலிங் தருகின்றனர். அந்த குழுவின் வாயிலாக, கொரோனா பாதிப்புக்கு ஆளான ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும்.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி களுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், வீட்டில் இருந்து கல்வி கற்க வசதியான, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு -எந்தெந்த துறைக்கு 2021 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு -எந்தெந்த துறைக்கு 2021 ஏப்ரல் நடைமுறைப்படுத்தப்படுகிறது

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது" : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

"

தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்றும், ஏற்கனவே இருந்த +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த மத்திய அரசை வலியுறுத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு குறித்து அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர்.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பொன்முடி பேசியது, மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம், மாநிலத்தில் தேர்வு நடத்திக் கொள்கிறோம் என்று கூறியதாக புரிந்து கொள்ளப்பட்டது.

இதற்கு பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அதுகுறித்த விளக்கம் ஒன்றை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

அதில், தமிழகத்திற்கு நீட் (NEET ) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி உறுதிபடத் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சரின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive