1) சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம்
வழி விளக்குக.
          சேர நாட்டின் பகைவர்களும், பறவைகளும் அஞ்சின
         
சோழநாடு நெல்வளமும், வீரமும் மிக்கது.
         
பாண்டிய நாடு முத்துவளம் உடையது
 
2) "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்"
இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
  இடம்:   சிற்றகல் ஒளி 
கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
  பொருள்:  எங்கள் தலையைக் கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.
 விளக்கம்:
செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார்.
 
3) பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை
எழுதுக.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்:
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்:
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
 
அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது? 
           
சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் உள்ள மோனையை எடுத்து எழுதுக.
           
பகர்வணர் - பட்டினும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
            
பட்டினும் - கட்டு
ஈ) காருகர் - பொருள் தருக.
          
நெய்பவர்
உ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப்  பொருள்கள் யாவை?
           
சந்தனம், அகில்
 
4) பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை
எழுதுக.
 
மருவூர்ப் பாக்கம்
மருவூர்ப்பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டினப்பாக்கம் என்பது
கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்: வாணிபம்
செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது. அங்கே தெருக்கள் தனித்தனியே இன்ன
இன்ன தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தன. நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில்
குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணி கலன்களும்
விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்களைக் குவித்து விற்கும் தெரு கூலவீதி
எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை, வாசனைப்
பொருள்கள் விற்போர், இறைச்சி, எண்ணெய் விற்போர், பொன், வெள்ளி, செம்புப் பாத்திரக்
கடைகள் வைத்திருப்போர். பொம்மைகள் விற்போர். சித்திரவேலைக்காரர். தச்சர், கம்மாளர்.
தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில் செய்பவர்கள்
இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
 
மையக்கருத்து:
      
மருவூர்ப் பாக்கம் என்பது தொழில்கள் மிகுந்த நகரின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
 
ஈ) நெடு வினா
1)  நாட்டு
விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை
எழுதுக.
 
முன்னுரை: 
          
     
மாணவப்பருவமும், நாட்டுப்பற்றும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
 
நாட்டு விழாக்கள்:
 
சுதந்திர தினம், குடியரசு
தினம் முதலிய நாட்டு விழாக்கள் மூலம் நாட்டுப்பற்றைக் காட்ட
வேண்டும்.விடுதலைப் போராட்ட வரலாற்றினை அறிந்துகொள்ள வேண்டும். நாட்டு முன்னேற்றத்தில்
மாணவர் பங்கு கொள்ள வேண்டும்.
 
விடுதலைப் போராட்ட வரலாறு:
 
      பல இந்திய போராட்ட
வீரர்களின் இறப்பு, வலி, தியாகத்தால் எழுதப்பட்டது நம் விடுதலை போராட்ட வரலாறு.
 
மாணவர்கள் பங்கு:
 
இன்றைய மாணவர்களே எதிர்கால
இந்தியா என்பதை நினைவில் கொண்டு நாட்டிற்காக தங்களை ஈடுபடுத்தி பாடுபட வேண்டும்.
 
முடிவுரை:
 
   மாணவப்பருவமும்,
நாட்டுப்பற்றும் பற்றி இக்கட்டுரையில் கண்டோம்.
 
2) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால
வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
 
மருவூர்ப்பாக்க வணிக வீதிகள்.             -     இக்கால வணிக வீதிகள் 
1. வீதிகளில் வணிகம் செய்யப்பட்டன.  கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன.
2. பட்டு, பருத்தி நூல் ஆடைகள் விற்றனர்.
ஆயத்த ஆடைக;ளை விற்கின்றனர்
3. முத்து, பொன் நகைகள் குவிந்திருந்தன.  வெள்ளி பொன் நகைகள் விற்கப்படுகின்றன.
4 கூலக்கடை வீதிகள் இருந்தன.  பல்பொருள் அங்காடிகள் உள்ளன.
 
3) எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம்
கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள்
குறித்து எழுதுக.
 
முன்னுரை:
 
       எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால
சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து இங்குக் காண்போம்
 
எம்.எஸ்.சுப்புலட்சுமி:
 
     தம் 17 ஆம் வயதில் சென்னை
மியூசிக் அகாதெமியில் கச்சேரி நிகழ்த்தி பாராட்டுப் பெற்றார்.இவருடைய காற்றினிலே
வரும் கீதம், உள்ளிட்ட பாடல்கள் பிரபலம். பெற்ற விருதுகள் 1954 - தாமரையணி,  1974 - மகசேசே.
 
பாலசரசுவதி:
 
      தன் ஏழு வயதில்
காஞ்சிபுரத்தில் பரதநாட்டியத்திற்கு முதலில் மேடை ஏறினார் . நம் நாட்டுப் பண்ணிற்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.இந்திய அரசின் தாமரைச்
செவ்வணி விருது பெற்றார்.
 
இராஜம் கிருஷ்ணன்:
 
        வேருக்கு நீர், கரிப்பு
மணிகள், குறிஞ்சித் தேன், சேற்றில் மனிதர்கள் முதலிய புதினங்களை எழுதியவர்.  சமூகப்பிரச்சினைகளை கதையாக எழுதக்
கூடிய ஆற்றல் பெற்றவர்.
 
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:
 
வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு
செய்தார்.
 
சின்னப்பிள்ளை:
 
         களஞ்சியம் எனும்
மகளிர் குழுவைத் தொடங்கி, மகளிரின் வாழ்வு
மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார்.
 
முடிவுரை:
 
         
எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,
சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து இங்குக்  கண்டோம்.
 
4) நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
மகளிர் நாள் விழா அறிக்கை
 
இடம்: பள்ளி கலையரங்கம்            நாள்: 25-05-2025
ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை
ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.
இதழாளர்
கலையரசி சிறப்புரை நிகழ்த்தினார்.
விழா
சிறப்பாக நடைபெற்றது.
 
 II. மொழியை ஆள்வோம்
அ) படித்தும் பார்த்தும் சுவைக்க
படித்தும் பார்த்தும் சுவைக்க. 
 ஏர்பிடிக்கும் கைகளுக்கே 
    வாழ்த்துக் கூறுவோம் - வறுமை 
ஏகும்வரை செய்பவர்க்கே 
    வாழ்த்துக் கூறுவோம் ! - என்றும் 
ஊர்செழிக்கத் தொழில்செய்யும் 
    உழைப்பாளிகள் - வாழ்வு 
உயரும்வகை செய்பவர்க்கே 
    வாழ்த்துக் கூறுவோம்! 
- கவி கா.மு ஷெரீப்
 
ஆ) மொழி பெயர்க்க
           Among
the five geographical divisions of the Tamil country in Sangam Literature, the
Marutam region was the fit for cultivations, as it had the most fertile lands.
The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal
rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight
was considered indispensible by the ancient Tamils.
 
விடைகுறிப்பு:      
 
    தமிழ் நாட்டில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களில் ஐந்து புவியியல் பிரிவுகள்
உள்ளன. இவற்றுள் மருத நிலப்பகுதி உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. அந்த
நிலப்பகுதியில் உழவர்களின் வளமை, சூரிய ஒளி, பருவத்தாலே மழை, மண் வளம் முதலியவற்றை
நம்பி இருந்தது. பழங்காலத் தமிழர்களின் கணிப்புப்படி இயற்கை உறுப்புகளிலும் சூரிய ஒளியே
மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
 
 இ) பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
வரப் போகிறேன்  - இன்னும் சற்று
நேரத்தில் வரப்போகிறேன்.
இல்லாமல் இருக்கிறது - பல குளங்களில் நீர் இல்லாமல் இருக்கிறது.
கொஞ்சம் அதிகம்  - இந்த ஆண்டு மழை கொஞ்சம் அதிகம்.
      
முன்னுக்குப் பின் - திருடன் முன்னுக்குப் பின் முரணாக
பேசுகிறான்.
மறக்க நினைக்கிறேன் - நடந்த துன்பங்களை மறக்க நினைக்கிறேன்.
 
 ஈ) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுறு தருக.
           
மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில்
உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே
காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை
சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.
 
மூவேந்தர்
- மூன்று + வேந்தர் - ௩
நாற்றிசை
- நான்கு + திசை - ௪
முத்தமிழ் - மூன்று + தமிழ் - 
௩
இருதிணை - இரண்டு + திணை. - உ
முப்பால் 
- மூன்று + பால்  - ௩
ஐந்திணை  
- ஐந்து + திணை  - ரு
நானிலம் - நான்கு + நிலம் - ௪
அறுசுவை  - ஆறு + சுவை  - ௬
பத்துப்பாட்டு - பத்து + பாட்டு  - க0
எட்டுத்தொகை - எட்டு + தொகை - அ
 உ) கடிதம் எழுதுக.
நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம்
எழுதுக.  
 
அனுப்புநர் :
                    வி. கார்த்திக்,
                    18, கணபதி நகர்,
                     அஅஅஅஅ.
 
பெறுநர் : 
                  நாளிதழ் ஆசிரியர்,
                  தினமணி நாளிதழ்,
                  சென்னை
 
ஐயா,
          
பொருள் : பொங்கல் மலரில் கட்டுரை வெளியிட வேண்டி கடிதம்.
           
 
            வணக்கம் நான் அஅஅஅஅ  கணபதி நகரில் வசித்து
வருகிறேன். தாங்கள் இதழில் வெளிவந்த விளம்பரத்தைப் பார்த்தேன்.அதில் குறிப்பிட்டவாறு,
உழவுத் தொழிலுக்கு வந்தணை செய்வோம் என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பியுள்ளேன். அதனைப்
பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு
வி.கார்த்திக் 
இணைப்பு : கட்டுரை
உறைமேல் முகவரி :
நாளிதழ் ஆசிரியர்,
தினமணி,
சென்னை.
 
 ஊ) பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.
கம்பனும் கண்டேத்தும் உமறுப்
புலவரை எந்தக்
கொம்பனும் பணியும்
அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப்
புலவரை
செய்குதம்பிப் பாவலரைச்
சீர்தமிழ் மறக்காதன்றோ.
 
விடைகுறிப்பு: 
- கம்பன், உமறுப்புலவர், ஜவாது
புலவர், காளமேகப்புலவர், காசிம்புலவர், குணங்குடி மஸ்தான், சேகனாப்புலவர், செய்குத்தம்பிப்
பாவலர்.
 எ) விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம்
சேர்க்கை எண் :
2678                  தேதி 14- 5-
2025              வகுப்பு, பிரிவு -11:அ
1. பெயர்                                     : அஅஅ
2. பிறந்த தேதி                        : 16-03-2010
3. தேசிய இனம்                     : இந்தியன்
4. பெற்றோர்  பெயர்              : தமிழ்
5. இல்ல முகவரி                      14 , காந்தி நகர், கும்பகோணம்.
6. இறுதியாகப் படித்த
வகுப்பு : 10 ஆம் வகுப்பு
7. பயின்ற மொழி                         : தமிழ்
8. பெற்ற மதிப்பெண்கள்           : 479/500
9. இறுதியாகப் படித்த
பள்ளி   : அரசு உயர்நிலைப்பள்ளி. ஆஆஆஆ
 ( தமிழ் - 98 , 
ஆங்கிலம் - 91, கணிதம் - 97, அறிவியல் - 94, சமூக அறிவியல் -99)
10. மாற்றுச் சான்று
உள்ளதா  : ஆம்
11. தாய்மொழி.                              : தமிழ்.
12. சேர விரும்பும் பாடப்பிரிவு,
பயிற்றுமொழி : கணிதம், தமிழ்
 
III. மொழியோடு விளையாடு
அ) விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க.
  
விடைகுறிப்பு:
 சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா 
- பெரம்பலூரில் 15-09-2025 அன்று "சாலைப் பாதுகாப்பு தொடர் அன்று அது தொடரும் வாழ்க்கை முறை" என்னும் தலைப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. 
- மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையேற்றார். 
- போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அவர்கள் சாலைக் குறியீடுகளை விளக்கினார். 
- குறியீடுகளை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறினார். 
- 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முறையான பயிற்சி பெற்று உரிய ஆவணங்களுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார். 
- கைப்பேசி பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டக்கூடாது. 
- தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 
- நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டையைக் கண்டிப்பாக அணிய வேண்டும். 
- வாகனங்களைக் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது போன்ற அறிவுரைகளைக் கூறினார். 
- சாலைப் பாதுகாப்புத் தொடர்பான முழக்கத் தொடர்கள் எழுப்பப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
ஆ) கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.
 
  | ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | 
 
  |   |   |   |  க | உ | ௩ | ௪ | 
 
  | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧௦ | ௧௧ | 
 
  | ௧௨ | ௧௩ | ௧௪ | ௧௫ | ௧௬ | ௧௭ | ௧௮ | 
 
  | ௧௯ | ௨௦ | ௨௧ | ௨௨ | ௨௩ | ௨௪ | ௨௫ | 
 
  | ௨௬ | ௨௭ | ௨௮ | ௨௯ | ௩௦ | ௩௧ |   | 
இ) தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நூலின் பயன் படித்தல் எனில் , கல்வியின் பயன்....
கற்றல்
2. விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை...
கரு
3. கல் சிலை ஆகுமெனில்,நெல்....சோறு  ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து.....
எழுத்து
5. மீன் இருப்பது நீரில் ; தேன் இருப்பது... பூவில்
 
0 Comments:
Post a Comment