10th Tamil - Unit 4 Book Back Answers - Guide

  
 
 



 


    SSLC / 10th Tamil - Book Back Answers - Unit 4 - Download

    Tamil Nadu Board 10th Standard Tamil - Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 4: 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1) கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
       
    ஆ) கம்பராமாயணம் 
     
    2) இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்
             
     ஈ) மன்னன், இறைவன்
     
    3) உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது
             
     இ) திணை வழுவமைதி 
     
    4) இரவிந்திரநாத தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ----மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
     
    ஆ) வங்காள, ஆங்கில
     
    5)  படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
            
     இ) அவர்  
     

    ஆ) குறு வினா

    1) கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" -இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
     
    • குலேசபாண்டியன், இடைக்காடனார்
     
    2) மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக. 
    • கருத்துப் பகிர்வுக்கு உதவுகிறது. மொழிவளம் பெருக உதவும் இலக்கியத்தை உருவாக்க உதவுகிறது.
     
    3) அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக. 
    • அமர்+த்(ந்)+த்+ஆன்.
    • அமர்-பகுதி, த்-சந்தி,  ந்-விகாரம், த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி
     
    4)வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை தேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செய்கிறேன் இந்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
          
    • உறுதித் தன்மை - காலவழுவமைதி.
     
    5)சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி எழுதுக.
       
    •  சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். 
    • புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

    இ) சிறு வினா

    1)  மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்? விளக்கம் தருக.
    • புலவர், பாண்டியன் முன் பாடினார்.
    • மன்னன் புலவரை அவமதித்தான்.
    • புலவர் இறைவனிடம் முறையிட்டார்.
    • இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்.
    • இறைவனின் அருளைப் பெற புலவருக்குச் சிறப்புச் செய்தான்.
     
    2) பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
    • மொழிபெயர்ப்பு இல்லை எனில்  ஊடகங்களின் வளர்ச்சி இல்லை.  
    • தொலைக்காட்சி, வானொலி, இதழ்கள் போன்றவை மொழிபெயர்ப்பால் வளர்கின்றன. 
    • மொழிபெயர்ப்பால் புதுவகையான சிந்தனைகள், மொழிக்கூறுகள் பரவுகின்றன.
     
    3)  ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு. ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரித்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (cranslati) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது: ஆனாய் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வர். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
    • மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
    • I n t e r p r e t i n g என்பதன் பொருள் யாது ?
    • ஐ.நா. அவையில்  மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு இருப்பார் ?
    • ஒருவர் பேசுவதைக் கேட்க மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தும் கருவி எது?
    • இவ்வுரை பத்திக்குரிய தலைப்பு ஒன்று தருக.
     
    4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், 'இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். 'இதோ சென்றுவிட்டேன்' என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, 'என்னடா விளையாடவேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவனிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்' என்று கூறிவேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. 
    ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • இலட்சுமி கூப்பிடுகிறாள்    -    திணை வழுவமைதி
    • இதோ சென்றுவிட்டேன்.       கால வழுவமைதி
    • என்னடா விளையாட வேண்டும்  திணை  வழுவமைதி   
    • நீயும் இவனும் விளையாடுங்கள் - திணை வழுவமைதி
                

    ஈ) நெடு வினா

    1) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்ந்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
    • புலவர் , பாண்டியனிடம் தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.
    • மன்னன் புலவரின் புலமையை அவமதித்தான்.
    • புலவர் இறைவனிடம் முறையிட்டார்.
    • இறைவன் கடம்பவனத்தை விட்டு நீங்கினார்.
    • மன்னன் இறைவனைக் காணச்சென்றார்.
    • மன்னன் இறைவனிடம் என்னால் இடையூறு ஏற்பட்டதா என்றான்.
    • இறைவன் தவறைச் சுட்டிக்காட்டினார்.
    • மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
     
    2)  கற்கை நன்றே கற்கை நன்றே - பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
     
    முன்னுரை :
     
            மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப்பற்றி இங்குக் காண்போம்.
     
    பருத்திச்செடியும் மேரியும் :
                   
            மேரி கருப்பர் இனப்பெண். வித்தியாசமானவள். பருத்திச் செடிகளைப் பார்த்துக்கொள்வாள். அதில் பூக்கும் பூவை பார்க்கும் முதல் ஆள் அவள்.
     
    சிறுமியும் மேரியும்  :
                  
            வெள்ளைக்காரச் சிறுமி வீட்டிற்கு  மேரி சென்றாள். அங்கிருந்த புத்தகத்தை எடுத்தாள் மேரி. சிறுமி புத்தகத்தை உன்னால் படிக்க முடியாது என்று பிடுங்கினாள். உடனே மேரி தனக்குப் படிக்கத் தெரியவில்லையே என்று வருந்தினாள்.
     
    படிப்பில் ஆர்வம் :
                    
            இச்செயலால் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. தன் தந்தையிடம் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றாள். வேலையை முடித்துவிட்டு படி என்றார். மேரி புதிது புதிதாக கற்று வாழ்வில் உயர்ந்தாள். கருப்பர் இன குழந்தைகள் படிக்க ஒரு பள்ளியைக் கட்டினாள்.
     
    முடிவுரை :
                 
            மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப்பற்றி இங்குக் கண்டோம்.
     
    3) தமிழின் இலக்கிய வளம்- கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள்- பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
     
    முன்னுரை:
     
    தமிழின் இலக்கிய வளம்,  கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல் கருத்துகள், பிற துறைக் கருத்துகள்,  தமிழுக்குச் செழுமை மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்குக்  காண்போம்.
     
    மொழிபெயர்ப்பு:
          
            சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு இருந்தது.  வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டன. கம்பர் மொழிபெயர்ப்பு மூலம் சிறப்பு பெற்றார். பல்துறை வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியம். மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் தொன்மையையும் தமிழரின் பண்பாட்டையும் உலகறியச் செய்ய முடியும்.
     
    கல்வி மொழி:
       
       மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம், மனித வளத்தைப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.
     
    முடிவுரை :
     
          தமிழின் இலக்கிய வளம்,  கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல் கருத்துகள், பிற துறைக் கருத்துகள்,  தமிழுக்குச் செழுமை மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்குக் கண்டோம்.
     

    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து 
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை 
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர்- மணி 
    யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) 
    -பாரதியார் 
     
    It gave Valluva the Great 
    For all the world to have; 
    And the fame rose sky high 
    Of our Tamil - Land 
    It made a necklace of gems, 
    Named 'The Lay of the Anklet' 
    Which grips enraptured hearts 
    In our Tamil - Land. 
    -The voice of Bharati
     

    ஆ) மொழி பெயர்ப்பு

            Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages. i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages. 
     
    விடைகுறிப்பு:
     
            மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். 
    குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி, பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும்.  இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
     

    இ) அட்டவணையில் விடுபட்டதை எழுதுக:-

    ஈ) தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

    1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
           அழகிய  கடம்பவனத்தை விட்டு இறைவன்  நீங்கினான்
     
    2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
    நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
     
    3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
      சிறந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
     
    4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
             சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
     
    5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.
             நல்ல குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்

    உ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.

    படித்கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
     
    குறிப்புகள் – நூலின் தலைைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை – வெளிப்படுத்தும்  கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு- நூல் ஆசிரியர்
     
    நூலின் தலைப்பு : திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்.
     
    நூலின் மையப்பொருள் : திருக்குறளில் மையப்பொருள் அறம், பொருள், இன்பம். அறத்தின் வழியே பொருள் ஈட்டி, இன்பமாக வாழவேண்டும் என்பதை மையமாகக் கொண்ட நூல் இது.
     
    வெளிப்படுத்தும் கருத்து : இந்நூலில் உண்மை பேச வேண்டும். கோபம் கொள்ளக் கூடாது. அன்புடன் வாழவேண்டும். பெரியோர்களை துணைகொள்ள வேண்டும், உள்ளிட்ட பல கருத்துகளைக் கொண்ட நூல்.
     
    நூல் கட்டமைப்பு : முப்பால்களைக் கொண்டது . அறத்துப்பால் -38, பொருட்பால் -70 இன்பத்துப்பால் -25. மொத்தம் -133 அதிகாரம் . 1330 குறட்பாக்கள்
     
    சிறப்புக் கூறு - உலகப்பொதுமறை என்ற சிறப்புக்குரியது
     
    ஆசிரியர் - திருவள்ளுவர்
     

    ஊ) படிவத்தை நிரப்புக.

    நூலக உறுப்பினர் படிவம்
                        
                    தஞ்சாவூர் மாவட்ட நூலக ஆணைக்குழு
    அட்டை எண் : 0087                              உறுப்பினர் எண் : 112114
    1. பெயர்                                       : அஅஅ
    2. தந்தை பெயர்                        : தமிழ்
    3. பிறந்த தேதி                          : 16-03-2010
    4. வயது                                       : 14
    5. படிப்பு                                       : பத்தாம் வகுப்பு
    6. தொலைபேசி எண்             : 9443740120
    7. முகவரி.                                  : 23, காந்தி நகர், கும்பகோணம் -612001.
    நான் தஞ்சாவூர் நூலத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை :100, சந்தா தொகை 25,  மொத்தம் :125.பணமாகச் செலுத்துகிறேன்.
                                                                 தங்கள் உண்மையுள்ள,
                                                                        அஅஅ

    III. மொழியோடு விளையாடு

    அ) புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுப்பிடிக்க.

    தார் போன்ற நிறம் உண்டு கரியுமில்லை 
    பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை 
    சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பல்லியுமில்லை 
    சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை வீட்டுக்கு வருமுன்னே. வருவதைக் கூறுவேன். நான் யார்? 
     
    விடைகுறிப்பு: 
     
            காகம்
     

    ஆ) தொழிர்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

    1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் _________ யாவும், அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் _________ நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.
          புதையல், புதைத்தல்
     
    2. காட்டு விலங்குகளைச_________ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச_________ திருந்த உதவுகிறது..
           சுடுதல், சுட்டல்
     
    3. காற்றின் மெல்லிய _________ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _________ பூக்களை மாலையாக்குகிறது. 
          தொடுதல், தொடுத்தல்
     
    4.  பசுமையான_________ ஐக் _________ கண்ணுக்கு நல்லது. 
           காட்சி, காணுதல்
     
    5. பொதுவாழ்வில_________ கூடாது. _________ இல் அவரை மிஞ்ச, ஆள் கிடையாது.
           நடித்தல், நடிப்பு

     

    இ) அகராதியில் காண்க.

    1. மன்றல்  -    வாசனை. திருமணம், நெடுந்தெரு 
    2. அடிச்சுவடு -    அடித்தடம் 
    3. அகராதி  -    அகர வரிசைப்படுத்திப் பொருள் விளக்கும் நூல் 
    4. தூவல்     -    இறகு, எழுதுகோல் 
    5. மருள்       -    மயக்கம், வியப்பு, புதர்.

    IV. செயல் திட்டம்

    அ) பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்

    "பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்" குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துக. 
    அன்பார்ந்த மாணவர்களே! 
    சுத்தம் சுகம் தரும்; தூய்மை நமக்குத் தாய்மை' என்பதை மனதில் கொண்டு நம் பள்ளியைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. இதனை நிறைவேற்றிடக் கீழ்க்கண்ட இயக்க மாணவர்கள் வாரத்தின் மூன்று நாட்களில் (திங்கள், புதன், வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஏழு மற்றும் எட்டாம் பாட வேளைகளில் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைக்க உதவிட வேண்டும். 
    நாள்
    இயக்கங்கள்
    தூய்மை செய்யும் இடம்
    பொறுப்பாசிரியர்
    திங்கள்
    பசுமைப் படை செஞ்சிலுவைச் சங்கம்
    பள்ளி விளையாட்டு மைதானம்
    திரு. குமரன்
    திரு. கண்ணன்
    புதன்
    நாட்டு நலப்பணித் திட்டம்
    பள்ளி விளையாட்டு மைதானம்
    திரு. சரவணன்
    வெள்ளி
    சாரணர் இயக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
    பள்ளி சுற்றுவளாகம் மாணவர்களிடம் நெகிழிப் பறிமுதல்
    திரு. செந்தில்
    திரி. சுகுமார்

            இயக்கப் பொறுப்பாசிரியர்கள் இயக்க மாணவர்களை ஒன்று சேர்த்துப் பள்ளியில் சுற்றுச் சூழலைக் காத்திடும் ஆக்கப் பணியினை மேற்கொள்ளுமாறு பணிக்கிறேன். சிறப்பாகப் பணியாற்றும் இயக்கங்களுக்கு நற்சான்றிதழும் பாராட்டும் வழங்கப்படும். 
    இடம்: பெரம்பலூர், 
    29. 08. 2025. 
    இப்படிக்கு. 
    திரு. பா.சதாசிவம் 
    (தலைமையாசிரியர்)
     

    ஆ) காட்சியைக் கவிதையாக்குக.

     
            மரம் 
    மரத்தை வெட்டி வனத்தை அழித்து 
    மரத்தின் பயனை 
    மக்களுக்கு உணர்த்தும் 
    மனிதா! அறிவாய் 
    மரத்தின் மகத்துவம்


     V. நிற்க அதற்கு தக!

    பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.
     
    பள்ளியில் நான்
    • நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்
    • ஆசிரியர் சொல்படி நடப்பேன்..
    • ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.
    •  நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..
    வீட்டில் நான்
    • அதிகாலையில் எழுவேன். பெற்றோர் பேச்சைக் கேட்பேன்.
    • உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.
    • பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்.

     

    அ) படிப்போம்; பயன்படுத்துவோம்!

    1. Translation     -    மொழி பெயர்ப்பு 
    2. Culture           -    பண்பாடு 
    3. Human Resource -    மனிதவளம் 
    4. Transfer         -    மாறுதல் 
    5. Multi media   -    பல்துறை ஊடகம்
     

    VI. அறிவை விரிவு செய்

    சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று - தமிழில் வல்லிக் கண்ணன் 
    குட்டி இளவரசன்  - தமிழில் வெ.ஸ்ரீராம் 
    ஆசிரியரின் டைரி  - தமிழில் எம்.பி. அகிலா
     
     
     
     
     விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     
     
    எஸ். ஜெயசெல்வன்
    பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் )
    பாணாதுறை மேனிலைப்பள்ளி
    கும்பகோணம்
     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive