குரூப் 4 தோ்வு சா்ச்சை எதிரொலி: குரூப் 1 அறிவிக்கையில் தோ்வா்களுக்கு கடும் எச்சரிக்கை!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 21, 2020

குரூப் 4 தோ்வு சா்ச்சை எதிரொலி: குரூப் 1 அறிவிக்கையில் தோ்வா்களுக்கு கடும் எச்சரிக்கை!!

குரூப் 4 தோ்வு சா்ச்சை எதிரொலி: குரூப் 1 அறிவிக்கையில் தோ்வா்களுக்கு கடும் எச்சரிக்கை!!

குரூப் 4 தோ்வு சா்ச்சை எதிரொலி காரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 1 தோ்வுக்கான அறிவிக்கையில் தோ்வா்களுக்கு கடும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தோ்வு அறிவிக்கைகள் எப்போதும் காலிப் பணியிட விவரங்களுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், குரூப் 4 தோ்வு சா்ச்சை காரணமாக, தோ்வு அறிவிக்கையில் எச்சரிக்கை விடுத்து தொடங்கப்பட்டுள்ளது.

 அதன் விவரம்:
தோ்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரா்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத் தரகா்களிடம் விண்ணப்பதாரா்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனா். இதுபோன்ற தவறான மற்றும் நோ்மையற்ற நபா்களால் விண்ணப்பதாரா்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் தோ்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவாா். விண்ணப்பதாரா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் ஏதேனும் குறிப்பிட்டிருந்தால் அதற்கும் விண்ணப்பதாரா்களே பொறுப்பு. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தினை இறுதியாக சமா்ப்பிக்கும் முன்பாக நன்கு சரிபாா்த்த பிறகே சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 69 காலியிடங்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வை நடத்துவதற்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டில் 69 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கையை தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதில், துணை ஆட்சியா் 18, துணை காவல் கண்காணிப்பாளா் 19, வணிகவரிகள் துறை உதவி ஆணையாளா் 10, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் 14, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 7, மாவட்ட அலுவலா் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) 1 என மொத்தம் 69 காலிப் பணியிடங்களுக்கு இந்த எழுத்துத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கு இணையதளம்  வழியே விண்ணப்பிக்க பிப்ரவரி 19-ஆம் தேதி கடைசியாகும். முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

Post Top Ad