மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு அனுப்ப தயக்கம்!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 27, 2020

மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு அனுப்ப தயக்கம்!!

மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு அனுப்ப தயக்கம்!!

சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் , மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு அனுப்ப ஆசிரியர்கள் தயக்கம் காட் டுவதாக பெற்றோர்கள் - குற்றம் சாட்டியுள்ளனர் . தமிழகத்தில் எஸ் எஸ் எல்சி , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத் தேர்வு கள் நடத்தப்பட்டு வரு கின்றன .

அதன்படி நடப் பாண்டிற்கான தேர்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது . முன்ன தாக , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய் முறைத் தேர்வு அடுத்த வாரத்தில் நடைபெற வுள்ளது . பொதுத் தேர் வுக்கான ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறையும் , தேர்வுத்துறையும் ஈடுபட்டு வருகின்றனர் .

 முதற்கட்டமாக , பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப் பட்டு , இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகிறது . இதனிடையே , மாணவர் - கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க , அவர்களின் தங்களது பாடத்தில் 100 சதவீத தேர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே , வருகைப்பதிவை காரணம் காட்டி மெல்லகற்கு மாணவரகளை பொதுத் தேர்வுக்கு அனுப்ப ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது : உடல் நல பாதிப்பு குடும்ப பிரச்னை உள் ளிட்ட காரணத்திற்காக சில மாணவர்கள் தொட விடுமுறை எடுத்துள்ளனர் இதனால் , அவர்களுக்கு மட்டும் போதுமான வருகைப்பதிவு இல்லாம இருக்கலாம் . இதனை காரணம் காட்டி , மெல்ல கற்கும் மாணவர்களை பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க மறுப்பது
வேதனையளிக்கிறது .

குறிப்பிட்ட சில பள்ளிக ளைச் சேர்ந்த ஆசிரியர் கள் , தங்களது வகுப்பில் 100 சத வீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ப தற் காக , இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப டுகின்றனர் . குறிப்பாக , வேளாண்மை போன்ற தொழிற்கல்வி பயிற்றுவிக் கும் ஆசிரியர்கள் , மெல்ல கற்கும் மாணவர்களிடம் தேர்வு பயத்தை உருவாக்கி , பொதுத் தேர்வை எழுத வேண்டாம் என அச்சுறுத் துகின்றனர் . சம்பந்தப்பட்ட விடு முறைக்கான காரணம் குறித்து , பெற்றோர்கள் தலைமை ஆசிரியர்க ளுக்கு விளக்கம் அளித் துள்ளனர் . இதனை ஏற்று தலைமை ஆசிரியர்கள் அனுமதி வழங்கினாலும் , வகுப்பு ஆசிரியர்கள் ஏற்க மறுக்கின்றனர் . இதனால் , மெல்ல கற்கும் மாணவர் கள் பொதுத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட் டுள்ளது . எனவே , கல்வித் துறை இது குறித்து நடவ டிக்கை எடுத்து , அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் . இவ் வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர் .

Post Top Ad