நடைபயிற்சியை எப்படி செய்தால் முழு பலன் கிடைக்கும்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 26, 2020

நடைபயிற்சியை எப்படி செய்தால் முழு பலன் கிடைக்கும்?

நடைபயிற்சியை எப்படி செய்தால் முழு பலன் கிடைக்கும்?
அதிகாலை பகலவனுக்கு முன்பு விழித்து உடற்பயிற்சியைச் செய்யாமல் செய்யும் வேலையையே உடற்பயிற்சியாக செய்தவர்கள் நம் முப்பாட்டனார்கள். இருக்கும் அத்தனை வேலைகளையும் இயந்திரத்தின் உதவியுடன் இயன்றவரை பகிர்ந்துகொண்டு நேரத்தை மருத்துவமனையில் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆண்கள் வயலிலும், பெண்கள் வீட்டிலும் செய்த வேலையைத்தான் இன்று சற்று நாகரிகமாக மாற்றி உடற்பயிற்சியாக கட்டணத்துடன் செய்து வருகிறோம்.




ஆரோக்யம் என்பது எப்படி கிடைக்கும்? நல்ல உணவு, தூய்மையான காற்று, குதூகலிக்கும் மனம், பதட்டமில்லாத வாழ்க்கைமுறை, அமைதியான சூழ்நிலை இவையெல்லாம் இருந்தாலே போதுமே... ஆனால் விலை கொடுத்தாலும் வாங்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தான் புரியவில்லை இவையெல்லாம் நம்மிடமே இருக்கிறது என்பது... மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு செல்ல வேண்டியதில்லை. பழைமை மாறாமல் சில விஷயங்களைக் கடைப்பிடித்தாலே போதும்.அவற்றில் ஒன்று நடைப்பயிற்சி.உடல் உறுப்புகள் மட்டுமே இயங்கி உடலும் மனமும் ஓய்வெடுத்து மீண்டும் இயங்க தொடங்கும் அதிகாலை வேளையில் நடப்பது மனதுக்கும் உடலுக்கும் அதீத ஆற்றலைக் கொடுக்கும். மருத்துவர்களின் அறிவுரைக்காக நடக்காமல் நமக்காக நடக்க வேண்டும்.




நடப்பதற்கு உகந்த நேரம் காலை 5 மணிமுதல் 7 மணிவரை. இந்த நேரத்தில் சுற்றுச்சூழல் மாசு அதிகம் இருக்காது என்பதால் இந்த நேர நடைப்பயிற்சி சிறந்தது. நடப்பதற்கு ஏற்ற இடம் அகன்ற சாலைகளும் போக்குவரத்து அதிகமான இடங்களும் அல்ல.தூய்மையான காற்றோட்டமுள்ள பூங்காக்கள், இரயில் நிலையங்கள், மைதானங்கள் ஏற்ற இடம். வீட்டுக்குள்ளேயே நடக்கிறேன் என்று ட்ரெட்மில் பயிற்சி செய்யாமல் சூரிய ஒளிபட நடந்தால் வைட்டமின் டி கிடைக்கும். வெறும் வயிற்றில் நடப்பதே நல்லது என்றாலும் வயதானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது பழச்சாறு குடித்துவிட்டு நடக்கலாம். நடக்கும் போதே கைகளைச் சுழற்றிக் கொண்டு,விரல்களைப் பிரித்து மடக்கி என பயிற்சி செய்தபடி நடக்கலாம். இளைஞர்கள் கை, கால்களை வேகமாக வீசியபடி நடந்தோ,ஜாக்கிங்கோ செய்யலாம்.
நடைப்பெயிற்சி மேற்கொள்ளும்போது வெறுங்காலில் நடக்காமல் மிதமான காலணிகள் அல்லது ஷூக்களை அணிந்து நடக்க வேண்டும். நடக்கும் போது மனதில் இருக்கும் அழுத்தமும், அன்றாட பிரச்னைகளையும் மனதில் ஏற்காமல், மனதை இலேசாக்கியபடி நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.




வேகமாக வீசி நடந்தால் தான் பயிற்சி என்பதில்லை.மூச்சு இறைக்காத வகையில் நடந்தாலே போதுமானது. தனியாகவோ அல்லது நண்பர்களுடன் கூட்டாகவோ கூட நடக்கலாம். பேசிக்கொண்டும் நடக்கலாம். ஆனால் குடும்ப பிரச்னைகளை அலசுவதை விட சுவாரஸ்யமான விஷயங்கள் பேசுவது மனதுக்குள் உற்சாகத்தை அதிகரிக்கும். பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொண்டாலே மனதுக்கு மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் சுரக்கும். முக்கியமான ஒன்று நடக்கும் போது பாட்டு கேட்கிறேனே பேசுகிறேனே என்று கழுத்திலும் செல்ஃபோனையும், காதில் ஹெட் ஃபோனையும் மாட்டிக்கொண்டு செல்லாமல் இயற்கையை ரசித்தப்படி செல்லுங்கள். நடக்கும் போது சுவாசிக்க முடியாமல் போனாலோ, மயக்கம் வருவதற்கான அறிகுறிகள், குதிகால் வலி பிரச்னைகள் அதிகம் இருந்தாலோ மருத்துவரது ஆலோசனையுடன் நடப்பது நல்லது.

Post Top Ad