பட்ஜெட் 2020 - 2021 பள்ளிக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 21, 2020

பட்ஜெட் 2020 - 2021 பள்ளிக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா?

பட்ஜெட் 2020 - 2021 பள்ளிக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா?

கல்வி தொடர்பாக இந்த பட்ஜெட்டில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை தெரிந்துகொள்வோம்:

தற்போதுவரை ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. ஏனென்றால் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை அந்நாடுகளின் ஜிடிபியில் இருந்து கல்விக்கென நிதி ஒதுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் கடந்த மூன்றாண்டுகளில் இந்தியப் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு சீராக அதிகரித்து வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 2017-18-ல் 46 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் (2019-20) ஒட்டுமொத்த கல்வித் துறைக்கு 94, 853 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 56, 536 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாகப் பள்ளி கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 3000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது. வரும் ஆண்டில் கல்வி ஒதுக்கீட்டின் அளவு கணிசமாக உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதன் மூலம் பள்ளி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் முதல், ஸ்மார்ட் வகுப்புகளை அதிகரித்தல், நவீன ஆய்வுக்கூடங்களை கட்டமைத்தல், ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல், நூலகங்களை செம்மைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.

அடுத்தபடியாக, கல்விக் கடன்பெறுவது மிகக் கடினமாக மாறியுள்ளது. இதில் நெகிழ்வுத்தன்மை அமல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வேலையில்லா திண்டாட்டம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருப்பதால் தொழிற்துறைகளுடன் இணைந்து புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டங்களும் அதற்குரிய நிதி ஒதுகீடும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் நாட்டின் 130 கோடி இந்தியர்களின் கனவை முன்னிறுத்தும் திட்டமாகும்.

இது தொடர்பாக பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி கடந்த ஜனவரி 20-ம் தேதி வரை MyGov.in இணையதளத்தில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பதிவிட்டனர். அவர்களுடைய கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பட்ஜெட் 2020-ல்கல்வித் துறைக்கு குறிப்பாக பள்ளிக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad