'5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாவர்'

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாவர்' என மக்கள் நீதி மையம் கட்சி கண்டித்துள்ளது.மக்கள் நீதி மையம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் அறிக்கை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பு வந்த உடனேயே அது மாணவர்களின் கல்விக்கு பாதகம் விளைவிக்கும் என எங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். பொதுத் தேர்வு வாயிலாக மாணவர்களின் தேர்ச்சியை கணிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தோம்.ஆனால் இன்று பொதுத்தேர்வுக்காக பல பெற்றோர் தாசில்தார் அலுவலகங்களில் ஜாதிச் சான்றிதழ் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல் அடிப்படை கல்வி கற்பிப்பதற்கு கூட பல தடைகளை அரசு தொடர்ந்து ஏற்படுத்துகிறது.இம்மாதிரியான திட்டங்கள் வாயிலாக மாணவர்களை அதுவும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது, என அதில் கூறப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive